31. போர்க்களம்.(காதல் கவிதை)
24 Jan 2012 23 மறுமொழிகள்
போர்க்களம்.
(போர்க்களம்..போர்க்களம்…காதலென்னும் போர்க்களம்..)
வளைந்த புருவத் தூண்டிலினால்
வளைத்து என்னாவியைச் சொருகுகிறாள்
துளைப்பது மன்மத வில்லோ!
களிப்பு இன்பக் கலவரமோ!
இமை அழகே இனியவளே!
அமைவான அழகு வலை!
இமை வில்லில் எதையிணைத்து
சுமையற்ற மயக்கம் தந்தாள்!
வாலிபக் காதலரங்க இதழ்களில்
கலாப நடன ஆலாபனையோ!
இதழ் குளத்தில் வீழ்த்தியென்னை
இமைப் புதரால் வளைக்கிறாள்.
கன்னமிட்டுக் கவிதை படிக்க
கன்னச் சுழியுள் சுழற்றுகிறாள்.
கைச்சிறையுள் கட்டி என்னை
மைவிழியுள் அமிழ்த்திக் கொள்வாள்.
மார்பின் மென்மையாலென்னை
சேர்த்துப் பக்கம் சாய்க்கிறாள்.
இடையின் படையெடுப்பிற்கொரு
தடையிடாத் தர்ம தேவதையாள்.
பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-1-2012.























Jan 24, 2012 @ 06:17:02
நன்று நன்று வாழ்த்துக்கள் .
Pirainila Krish likes this..
Jan 24, 2012 @ 08:07:44
ஓ!..வசந்தா!……
முன்காலை வேளையில்
முதல்வரியாய் மனதிலே
முழு ஊக்கம் தருகிறாய்!
கழுவிடுதே சோம்பல்
வாழ்த்து வரி தூவுகிறாய்!
வீழ்த்திடா உரமேற்றுகிறாய்!
தாழ்த்திடா உன் செயலினால்
வீழ்த்துகிறாய் ஆனந்தத் தூறல்!
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 06:47:15
காதல், பெண் பற்றிய வர்ணனை அழகாக உள்ளது
Jan 24, 2012 @ 08:13:12
ஓ! அருந்தா!..மிக்க நன்றி உமது வருகைக்கும் வரிகளிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 07:55:02
இமை அழகே இனியவளே!
அமைவான அழகு வலை!
இமை வில்லில் எதையிணைத்து
சுமையற்ற மயக்கம் தந்தாள்!
இனிமையான போர்க்களம்.. பாராட்டுக்கள்..
Jan 24, 2012 @ 08:09:46
உங்களின் வரிகளிற்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். சகோதரி. எங்கே போயிருந்தீர்கள்? உங்களைக் காணவில்லையே? மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 10:02:48
அருமை
Jan 24, 2012 @ 15:37:29
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். இறையாசி கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 11:19:57
வளைந்த புருவத் தூண்டிலினால்
வளைத்து என்னாவியைச் சொருகுகிறாள்
துளைப்பது மன்மத வில்லோ!
களிப்பு இன்பக் கலவரமோ!//
அருமையான காதல் கவிதை
படங்களும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுடன் கூடிய
வர்ணனைகளும் அதி அற்புதம்
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Jan 24, 2012 @ 15:41:13
தங்களின் ரசனைக்கும், கருத்திடலிற்கும் மிக்க மிக்க மகிழ்வும், நன்றியும். ஆண்டவனாசி கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 14:32:31
காமத்துப்பால் நிறைந்த போர்க்களம் சகோதரி…
ரசித்தேன்…
Jan 24, 2012 @ 15:45:07
இடையிடையே இப்படியும் தேவையெல்லோ!…
மிக்க நன்றியும் சந்தோசமும்..தங்கள் ரசனைக்கும் பின்னூட்டத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
Jan 24, 2012 @ 15:12:57
அருமை.
Jan 24, 2012 @ 15:46:31
நன்றி நன்றி ஐயா. தங்கள் வருவு, மகிழ்ச்சியும் கருத்துமுடையது. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.
Jan 25, 2012 @ 09:59:55
போர்க்களம் அழகு
Jan 25, 2012 @ 14:43:34
தர்சி தங்கள் வரவும், கருத்திடுகையும், மிக மகிழ்வு தருகிறது. என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Jan 25, 2012 @ 19:45:32
அழகுடன் வர்ணிப்பில் காதல் மழை பொழிந்து கண்களாக மின்னும் காட்சிகளும் அருமை….
ம. வேணுதன் and வசந்தா சந்திரன் like this..
Jan 25, 2012 @ 19:57:28
நன்றியும் மகிழ்ச்சியும் சுஜாதா. இனிய வருகையும், வரியிடலும். மிக்க மிக்க நன்றி. ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
Jan 25, 2012 @ 20:11:36
ஒவ்வொரு அங்கமாக பெண்கள் அழகை வர்ணித்திருப்பது நன்று.
கன்னமிட்டுக் கவிதை படிக்க
கன்னச் சுழியுள் சுழற்றுகிறாள்.
கைச்சிறையுள் கட்டி என்னை
மைவிழியுள் அமிழ்த்திக் கொள்வாள்.
கவிஞர்களில் பெரும்பாலானோர் இந்தக் கன்னக் குழிக்குள் வீழ்ந்தவா்கள்தான்.
மிக நன்று வாழ்த்துக்கள்.
Jan 25, 2012 @ 20:27:07
தங்கள் இனிய வருகை, கருத்திடலால் மிக மகிழ்வும், நன்றியும் சகோதரி. இறை ஆசி கிட்டட்டும்.
Jan 27, 2012 @ 04:14:32
காதலை இங்கே ஓர் போர்க் களமாக்கிவிட்டு
அங்கெ தொடுக்கும் காதலின் உணர்வுகளை
கவி அம்புகளால் எமை துளைத்தெடுத்து விட்டீர்கள் சகோதரி…
கவியின் யவனம் எனை ஆழ்ந்திருக்கச் செய்தது…
Jan 30, 2012 @ 21:43:20
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. கவிதையின் யௌவனத்தை ரசித்தமைக்கும் நன்றி. உமது இனிய வருகைக்கும், இனிய கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்
Feb 14, 2012 @ 00:51:17
இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html