4. பயணம் – மலேசியா. 9.

சிறீ சுப்பிரமணிய ஆலய பூசை.

 

4. பயணம் – மலேசியா. 9.

மினேறாவின் தாமரை உருவ நீர் பொங்கும் வழியால் சுமார் 4 மணியளவில் வெளியேறினோம்.

அடுத்து பத்து Baktu caves temple)  குகைக்கோவில் பார்க்க.

எமக்கு இது இரண்டாவது விஜயம். இங்கும் நாம் முதல் தடவை சென்றிருந்தோம்.  மகளவைக்குத் தான் இது புதிய இடம்.

இது கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுண்ணக்கற்களால் உருவான குகை. 3 குகைகளில் – கோயில் இருக்கும் குகையே பெரியது.

சிங்கப்பூரில் பிறந்த கே.தம்புசாமிப்பிள்ளை  எனும் வியாபாரியே இதைக் கண்டு பிடித்தவராம். இன்று சிறீ சுப்பிரமணிய ஆலயமாக உள்ளது. 113 வருடப் பழைமை வாய்ந்த கோயில்.
272 படிகள் ஏறிப் போக வேண்டும்.

நிலமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. நிதானமாக மூச்சு விட்டு நின்று நின்று இளைப்பாறி நாம் மேலே ஏறினோம்.
மலை ஏறி மேலே வந்ததும்


இதிலிருந்து குகைக்குப் போக கீழே படிக்கட்டுகள். இதிலேயே கடைகள் ஆரம்பிக்கிறது காண்கிறீர்கள்.

வெயிலில் நடந்து வந்து களைப்பானால் குகை உள்ளே போக,  சில்லென்று இருக்கும்.
படிக்கட்டுகள் இருந்தாலும் – கோயிலை அடைய – 160 மலைப் பாதைகள் உள்ளதாம்.
1890களில் கரடு முரடான மலைப்பாதையே இருந்ததாம். 1920ல் மரப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டதாம்.

படிகள் தூரத்தில் தெரிகிறது.

பாதையெல்லாம் குரங்குகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அலைபவை. கையில் இருப்பதைக் கூடப் பறிப்பார்கள். உங்கள் அருச்சனைப் பொருட்களை சும்மா தட்டில் ஏந்திப் போனால் குரங்குகள் பறித்து விடும். ஒரு உறையில் போட்டு எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.

கோவில் முன்பு 42.7 மீட்டர் உயரமான முருகன் சிலை உள்ளது. இந்தியச் சிற்பிகளும், மலேசியாச் சிற்பிகளும் சேர்ந்து அமைத்த சிலையாம்
உலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை இதுவாம். நாம் முன்பு போன போது இது இருக்கவில்லை. இதன் இடது புறத்திலுள்ள குகையில் இந்துக் கடவுள் உருவங்கள் வண்ணத்தில் உள்ளதாம். இதை மியூசியம் குகை என்பார்.
இன்னொரு குகை மின்சாரப் பாவனைக்கு பாவிக்கிறார்களாம்.

மிக அற்புதமான குகைக் காட்சி. அதிசயம் என்றும் கூறலாம்.

நிறையப் புறாக்கள் வருகிறது. எனக்கு அதனுள் நின்று படம் எடுப்பது பிடிக்கும்.


எனது பயணக்கதை வரிசைகளில் முதலாவது பயணம் – அங்கம் 18ல் படங்களுடன் விவரங்கள் உள்ளன. படங்கள் அளவில் சிறியதாகப் போட்டுள்ளேன். அதை அழுத்தினால், அதன் பெரிய உருவம் காணலாம். அதன் லிங்க் (இணைப்பு) தருகிறேன் விரும்பியவர்கள் வாசிக்கலாம்.

https://kovaikkavi.wordpress.com/2010/10/02/18/

தை மாசியில் 3 நாட்கள் தைப்பூசத் திருவிழா உலகப் பிரபலம்.

நானும்  இவரும் வயதானவர்களாகவும், மகளும் துணைவரும் இளையவர்களாகச் சென்றிருந்தோம். கோயில் குருக்கள் மகளவையைப் பார்த்து அதிகமாக விவரங்கள் கூறி (பூஜை புனஸ்காரம், அருச்சனை, மின்னஞ்சல் என்று) பலவாறாகப் போசினார். ஒரு வேளை மகளின் துணைவர்  ஆங்கிலேயர் என்பதாலோ தெரியவில்லை. வெளியே வந்து மகள் கூறினா ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் வயதானவர்களாக இருந்தும் உங்களை அலட்சியம் பண்ணி ஏன் இப்படி எம்மோடு கதைத்தாரோ, பணம் கறப்பதற்கோ தெரியாது என்று வியந்தனர்.  நாம் சிரிப்பதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும்.!

கூகிளில் படப் பகுதியில் குகை பெயரை அழுத்துங்கள், கண்கொள்ளாக் காட்சி காண்பீர்கள். இவைகள் உலகில் பார்க்க வேண்டியவை.

படியிலிருந்து  எதிரே தெரியும் மலேசியாவின் காட்சியை இறுதியாகக் காண்கிறீர்கள். மிகுதியை அங்கம் 10ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-9-2912.

17 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. T.N.MURALIDHARAN
    செப் 09, 2012 @ 13:07:18

    படங்களும் தவல்களும் அருமை.அடுத்ததை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 16:45:01

      ”…படங்களும் தவல்களும் அருமை.அடுத்ததை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…”

      எல்லோருக்கும் பதிலிடக் கூட நேரமிருக்கவில்லை இந்த முறை. இன்று வெள்ளி அங்கம் 10 வலையேற்றுவேன் முரளி. 5 நாட்கள் மைத்துனர் குடும்பத்தை யேர்மனி கூட்டிப்போய் வந்தோம். நாட்கள் கருத்திற்கு நன்றி முரளி.

      மறுமொழி

  2. கோவை கவி
    செப் 09, 2012 @ 14:59:44

    Umah Thevi likes this.. in Umah Thevi வித்யாசாகர்.

    Sundrakumar Kanagasundram, Melur Raja and Kanagasundram Sundrakumar like this..in நினைவே ஒரு சங்கீதம்.
    Melur Raja:-
    அருமை உங்களுடன் நாங்களும் பயணம் செய்தது போல் மிக நேர்த்தியான வரிகளில் ..

    vetha:-
    மிக்க நன்றி சகோதரா உமது கருத்திற்கு.
    Melur Raja:-
    பெரியவர்களின் ஆசியே இறையருள் தானே…
    இறையாசி நிறையட்டும்.

    Suresh Kumar likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam.

    Mari Muthu C likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.

    மறுமொழி

    • ramani
      செப் 09, 2012 @ 15:20:10

      எங்களுக்காகவே நீங்கள்
      பயணம் மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன்
      முருகன் கோவிலை இதுவரை பல புகைப்படங்களிலும்
      சினிமாவிலும் பார்த்திருந்தாலும் கூட
      அந்தச் சூழல் இதுவரை பார்க்காதவர்கள்
      மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படி பல்வேறு கோணங்களில்
      படம் கொடுத்து மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த நன்றி
      அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து…

      மறுமொழி

      • கோவை கவி
        செப் 09, 2012 @ 18:25:47

        பயணங்களில் குறிப்பு எடுப்பதால் இந்த முறை எனது மகள் என்னோடு கோபித்தார். பயணத்தை அனுபவித்து மகிழாமல் இவைகளில் மனதைச் செலுத்துகிறீர்களே அம்மா என்று. நான் கூறினேன் நான் பயணத்தையும் அனுபவித்து இவைகளைச் சேகரிப்பதிலும் நிறைவடைகிறேன் என்று. அவ ஒத்துக் கொள்ளவே இல்லை. (அவ மனநல ஆலோசனை கொடுக்கும் பணி புரிபவர்.- வன்முறையால் தாக்கமடைந்த தமிழ் பெண்களுடன்)

        மிக நன்றி தங்கள் கருத்திற்கு. மகிழ்வடைந்தேன்.ஆண்டவனருள் நிறையட்டும்.

  3. Dr.M.K.Muruganandan
    செப் 09, 2012 @ 16:23:57

    முன்பு சில புகைப்படங்கள் பார்த்திருந்தேன்.
    உங்கள் சிறப்பான விபரணைகளுடன்
    தெளிவான புரிதல் ஏற்பட்டது.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 17:04:49

      ”..முன்பு சில புகைப்படங்கள் பார்த்திருந்தேன்.
      உங்கள் சிறப்பான விபரணைகளுடன்
      தெளிவான புரிதல் ஏற்பட்டது…”’

      மிக்க மகிழ்ச்சி ஐயா.
      மிக்க நன்றி.
      ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  4. drpkandaswamyphd
    செப் 09, 2012 @ 21:14:09

    கூகுள் படங்கள் அருமை. உங்கள் பதிவு அதைவிட அருமை.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 17:07:43

      ஐயா இந்தப் பதிவில் எந்தப் படமும் கூகிள் படமில்லை.
      முழுவதும் நானும் குடும்பத்தினரும் எடுத்தது.
      தங்கள் கருத்திற்கு மிக நன்றி.
      இறை அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  5. திண்டுக்கல் தனபாலன்
    செப் 10, 2012 @ 09:10:19

    அட்டகாசமான படங்கள்…. பல தகவல்கள் அறியாதவை… மிக்க நன்றி சகோ…

    மறுமொழி

  6. sivakumaran
    செப் 10, 2012 @ 12:46:21

    சிறு வயதிலிருந்து பத்து மலை பற்றி நான் அறிவேன். என் அப்பா மலேசியா வில் வெகு காலம் இருந்தார். அந்த நாட்டுக் குடிஉரிமை பெற்றவர். என் ஒன்று விட்ட சகோதர னின் குடும்பம் KL இல் உள்ளது.
    மகிழ்ச்சி தரும் பதிவு நன்றி

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 17:11:52

      சிவகுமாரன் மிக மிக மகிழ்ந்தேன் உமது வரவு, கருத்திற்கு.
      ஏதாவது தவறாக இருந்தால் சொன்னால் திருத்துவேன் என்பதை நினைவிலிருத்தவும்.
      கருத்திற்கு மிக நன்றி.
      இறை அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  7. மகேந்திரன்
    செப் 15, 2012 @ 02:12:21

    வணக்கம் சகோதரி..
    விடுமுறையில் இருந்ததால்
    காலம் கடந்த கருத்துடன் வருகிறேன்….
    மலேசியாவுக்கு தைப்பூசத் திருவிழாவுக்கு
    செல்ல வேண்டும் என்ற ஆசை நெஞ்சினில்
    இருக்கிறது…

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 17:18:49

      பத்து மலைக்கோவிலிலும் விசேடம். பினாங் கோவிலிலும் மிக விசேடம். எனது முதலாவது பயணக்கதையில் அது வருகிறது. நேரமிருக்கும் போது வாசித்திட்டுப் போகவும். பினாங்கிற்கு பேருந்தில் போகலாம்.
      கருத்திற்கு மிக நன்றி மகேந்திரன்.

      மறுமொழி

  8. வே.நடனசபாபதி
    செப் 18, 2012 @ 01:46:50

    அழகான படங்களும் அருமையான விளக்கங்களும் தந்தமைக்கு நன்றி!

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 21, 2012 @ 17:20:43

      ”..அழகான படங்களும் அருமையான விளக்கங்களும் தந்தமைக்கு நன்றி!..”

      கருத்திற்கு மிக நன்றியும், மகிழ்வும்.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக