2. அல்லாவின் பேரருள்……

அல்லாவின் பேரருள்……

(சையமைத்துப் பாட வரிகள்.) 

மேலும்

15. வளர்பிறையே!

  

வளர்பிறையே!

 

வளர்பிறையே!   வண்ணநிலவே!
தளர்நடையேன்   தங்கமலரே!
தளம் பாவ  புவியினிலே
உளம் நோக  முயல்கிறோம்.
வளர்ந்த்தினால்  பெரும் வதையே.
தளர்ந்திடிலோ  பெரும் தோல்வியே.

சிலர் வாழ்வில்  நடிப்பினையே
பலர் மெச்சக் கொடுக்கிறார்,
புகழ் தூவிச் சுகிக்கின்றார்,
மகிழ்வாய்க் கை இணைக்கின்றார்.
இகழ்வான இந் நிலையாலே
தளர் நடையா  வளர்பிறையே!

ஊருக்கு உபதேசம் தனக்கில்லை.
பேருக்கு பொது வாழ்க்கையம்மா!
பாருக்குள்ளுதித்த பெரும் கேடிகள்
சீருக்கு  வாழுமொரு வாழ்க்கையிது.
யாருக்கு மொழிந்திட இவர் நடிப்பை!
நேருக்குக் கூறிட நிலையில்லையம்மா!

அன்பு வழிகின்ற புன்னகை
பண்பு பொங்கும் வார்த்தைகள்
என்ன விலையும் பேசலாம்.
பசுத்தோல் போர்த்திய உள்ளுருவை
பசுவென எண்ணி மாய்கிறோம்.
சங்கைக்கேடான வியாபார விதி!
அங்காடி வாழ்வாச்சே வளர்பிறையே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

(  23-1 2001ல் ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும், 26-22002ல் இலண்டன் தமிழ் வானொலியிலும், தை மாதம் 2003ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.)

Samme katu another poem:-   https://kovaikkavi.wordpress.com/2010/07/11/15-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-2/

 

                             

 

அனுபவம். அங்கம். 8.

 

பரமேசுவரன் மலேசியாவைக் கண்டு பிடித்தான் என்றபடி 1390ம் ஆண்டுக்கு முற்பகுதியில்  பலெம்பங் எனும் இடத்து இந்து இராசகுமாரன் மஐபகிட் இராச்சியத்திற்கு விசுவாசமான பரமேஸ்வரா ரிமாசெக் (சிங்கநகருக்கு)க்கு ஓடி வந்தான். இங்கு இவன் நன்கு வரவேற்கப்பட்டான். ஆயினும் பரமேஸ்வரனும் அவன் சகாக்களும் தமக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையே கொலை செய்துவிட்டு, சிங்கப்பூரைக் கடற்கொள்ளை ஸ்தலமாக வைத்திருந்தான். 1398ல் தாய்லாந்து சிங்கைநகரைத் தாக்கியபோது பரமேஸ்வரா மலாக்காவிற்கு ஓடினான்.

மீன் பிடிக்குச் சிறந்த இடமாக இருந்த அந்த நகரை மிக வேகமாக ஆசியாவிலேயே சிறந்த வர்த்தகத் துறைமுகமாக வளரச் செய்தான். அதுவே இன்றைய மலாக்காவாகும். மலேசியா, சிங்கப்பூர், புறூனெய் ஆகியவை ஆசியாவின் பணக்கார நாடுகளின் வரிசையில் உள்ளன.

மூன்று புறமும் நீர் சூழ்ந்த மலேசியா ஒரு தீபகற்பமாகும்.

மாசி மாசி மாதம் 1948ல் சமஷ்டி மலேயா உருவானது. அப்போது சிங்கப்பூரும் மலேசியாவுடன் சேர்ந்து இருந்தது. ‘மலே’ மக்களை சிங்கப்பூரில் வைத்திருக்க மலேசியா விரும்பியது.    1965ல் மலேசியா உருவாக்கப்பட்ட போது சிங்கப்பூரைத் தனியாகத் தள்ளிவிட்டனர்.

மலேசியா றப்பர், தகரம், மரக்குத்திகள், மரங்களால் (லொகிங்) செல்வம் பெறுகிறது. இன்று பாம் எண்ணெயில் பெருவாரியாக சம்பாதிக்கின்றனர். பாம் மரங்களில் மட்டும் 300 விதமான மரங்கள் இன்று அங்கு இருப்பதாக  ஒரு வழிகாட்டிச் சாரதி கூறினார்.

மலேசிய நீண்ட தீவுடன் கிழக்கில் உள்ள இந்தோனேசியா அல்லது போர்ணியோ எனக் கூறும் தீவில் சறவாக், சபா எனும் பகுதிகளும் சேர்த்து கிழக்கு மலேசியா என அழைக்கப்படுகிறது. இவைகளின் அரசியல் அதிகாரம் மலேசியாவிற்கே உண்டு. ஆனால் மலேசியாவின் பொருளாதார நாடியில் சீனாவின் விரல்களும் படுகின்றன.
இந்தியப் பிரசைகள் 10 வீதமாகவும், வியாபாரத்திலும், சமூகத்தில் படித்தவர்களாகவும், தொழிலாளர்களாகவும் உள்ளனர். மலேசிய மக்கள் முஸ்லிம் மதத்தவர்கள்.

கோலாலம்பூர் தலைநகரில் 2 மில்லியன் மக்கள் உள்ளனர். முழு மலேசியாவிலும் 35 விகிதம் சீன மக்களும், 30 விகிதம் சறவாக்கிலும், 16 விகிதம் சபாவிலும் உள்ளனர். 55 விகிதம் மலே இன மக்களும் உள்ளனர்.

‘ஒறேஞ் அஸ்லி’ என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் 80 ஆயிரமளவில் அங்கு வாழ்கின்றனராம். பலர் தொழில் நுட்பங்கள் தெரிந்து நாகரீகமாகியுள்ளனர். பலர் காட்டில் வாழ்கின்றனர். நாட்டு மொழி மலே என இருந்தும் வியாபார மொழி சீன மொழியாக உள்ளது. பாடசாலையில் தமிழரும் ‘மன்றின்’ எனும் சீன மொழியை, மலே மொழியுடன் பயில்கின்றனராம்.

யோகூர் பக்றூ   (ஜேபி) மலேசியாவின் 2வது பெரிய நகரம். 7இலட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். முக்கிய பொருளாதார நகரமான இது பாம் எண்ணெய், றப்பர், பைன் அப்பிளினால் செல்வமாக உள்ளது.

1948ல் சமஷ்டி மலேயா உருவானது என்று எழுதியிருந்தேன். கனடியப் பக்கத்தால் 1957ம் ஆண்டு ஆவணி மாதம்  15ம் திகதி பிரித்தானியாவிலிருந்து மலேசியாவிற்குப் பூரண சுதந்திரம் கிடைத்தது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக் குறிப்புகளும் சரியானதே. இடைப்பட்ட 9 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச் சிறிது சுருக்கமாகத் தந்து, நாம் யோகூர் பக்றூவிற்குச் செல்வோம்.

1948ல் சமஷ்டி மலேசியா உருவாக , அதன் இறைமையை சுல்தான்மார் காப்பாற்றினார்கள். மலேயர்கள், அந்நாட்டவரல்லாத இந்தியர்களுக்கும், சீனாக்காரர்களுக்கும்  விசேட சலுகைகள் கொடுக்க மறுத்தனர். அதே நேரம் எம்சிபி பார்ட்டி  (த மெயின்லி சைனீஸ் மலேயன் கம்யூனிஸ்ற் பார்ட்டி) 2வது உலகப் போரில் யப்பானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டாலும், பிரிட்டிஸ் காலணித்துவத்திற்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 1950ல் பிரிட்டிஷ் அவசரகாலச் சட்டத்தை ஏற்படுத்தியது. 1960ல் கம்யூனிச அபாயத்தை நீக்கினார்கள். ஆனாலும் 1989ம் ஆண்டு வரை ஆங்காங்கு வன்முறைகள் நடந்தன. ஆனால் ஒரு போதும் கம்யூனிஸ்டுகளுக்கு முழு ஆதரவும் கிடைக்கவில்லை. சீனக் குழுவினாலேயே அதிகமாக கம்யூனிஸ்ட் கட்சி நடத்தப்பட்டது. பிரித்தானியாவிற்கு எதிராகச் சுதந்திரம் கேட்ட மலாய்காரர்கள் மறுபடியும் சீனர்கள் தம்மை  ஆள்வதை விரும்பவில்லை.  கொரில்லாக் குழுக்கள் 1989ல் பொது மன்னிப்பக் கிடைக்கும் வரை தாய் எல்லையை அடுத்துள்ள காட்டிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

1955ம் ஆண்டு பிரித்தானியர்கள் மலேசியாவுக்கு 2 வருடத்தில் சுதந்திரம் கொடுக்க ஒப்புக் கொண்டனர். 1955ம் ஆண்டு நடந்த தேர்தலில் மலேசிய இந்திய கொங்கிரசும், மலேசியா சைனீஸ் அசோசியேசனும், யுனைட்டட் மலேசியன் நஷனல் ஓகனைசேசன் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டின. 1957ம் ஆண்டு ஆவணி 15ம் திகதி பிரித்தானியாவிடமிருந்து மலேசியாவிற்குப் பூரண சுதந்திரம் கிடைத்தது. சிறுபான்மையினருக்கும் பிரசா  உரிமை கிடைத்தது.

 
18ம் திகதி தலைநகர் யேபிக்கு வரும் வழியில்,  கார்கள் வரும் பாதையில் இல்லாது, வேறு தனிப்பட்ட பாதையாக ஓராயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. ஊர்வலமாக வந்த மோட்டார் சைக்கிள்கள் ‘கெல்மெட்டுடன்’ இருப்பதைப் பார்க்க ஊரில் கறுப்பு கொள்ளி எறும்புகள், அல்லது சர்க்கரை எறும்புகள் சாரி சாரியாக அணிவகுத்துக் கொள்வது போல இருந்தது.
—-மிகுதியை அடுத்த அங்கம் 9ல் பார்ப்போம்———–
( புகைப் படத்தில் யோகூர் நகர படமும், சறவாக்,  சபா,  மலாக்காவைக் காட்டும் படங்களும் உள்ளது.)

 

                                                                                                                                                       Johor    Bahru.

  

 

 

 

அனுபவம். அங்கம் 7.

 

மாலை 7.30க்கு சங்கீத நீரூற்றுக் காட்சி. (மியூசிக்கல் ஃபவுண்டன்)க்குச் சென்றோம். ஆக 25 நிமிடக் காட்சி தான் இது, எமக்கு இரண்டரை மணி நேர உணர்வைத் தந்தது. சிங்கப்பூரில் என்னைக் கவர்ந்த இரண்டாவது விடயம் இந்தக் காட்சியாகும். அனைவரும் அனுபவிக்க வேண்டிய உன்னதக் காட்சியாகும்.

நீரூற்றுடன் ஒளிவிளையாட்டு. ஒரு திரைக்காட்சி போல, திரையின்றிச் செய்யும் காட்சி. லேசர் கதிர்கள், ஒளி சாலம் வர்ணங்களுடன். பனிபோல (மிஸ்ற்) வைத்துக் காட்டும் காட்சி.  இதில் கிக்கி எனும் கேலிச் சித்திரக் குரங்கு உருவம் முக்கிய இடம் பிடிக்கிறது. எத்தனை தடவையும் அலுக்காது பார்க்கலாம். உணர்வுகளின் வியப்பும், ஆச்சரியத் தாக்குதலிலும் எம்மை மறந்து நாம், வியப்பில் ‘ ஆ!….ஓ!…ஊ! …’ என வாய் விட்டுச் சத்தமிட்டு உணர்வுகளை வடிகாலாக்கினோம். அவ்வளவு அற்புதமாக இருந்தது.

மறுபடியும் 8.30க்கு அடுத்த காட்சியையும் நின்று பார்க்கலாம். ஆனால் இறுதிக் கேபில் கார் இரவு 9.00மணிக்கு உண்டு. இது  நிறுத்தப்படும் போது சிங்கப்பூர் நகருக்கு செல்ல கடவைப் படகு (ஃபெறி) தான் பாவிக்க வேண்டும். நாம் அங்கு எல்லாமும் பார்த்திடவில்லை. உல்லாச வாடி வீடுகளில் தங்கி,   மறு நாளும் செல்லலாம். நல்ல உணவகங்களும் தங்குமிட வசதியும் அருமையாக இருந்தது.  நள்ளிரவு கனடா செல்லும் உறவினருக்கு விமானம் இருந்ததால்,   இறுதிக் கேபில் காரில் சிங்கப்பூர் திரும்பினோம்.

‘இரவில் சிங்கப்பூர்’ காட்சியை மின்சார ஒளி விளக்குக் கட்டிடங்களைக் காட்சிகளாக திரும்பி வரும் போது பார்த்து ரசித்து வந்தோம்.     இது இன்னொரு அற்புதக் கண்ணிறைந்த காட்சியாக இருந்தது.

ஆக, இந்த சென்ரோசா பயணத்தில், சினிமாவில் பார்த்த சிங்காரச் சிங்கப்பூரை கொஞ்சமாகவாவது  பார்த்தோம் என்ற திருப்தி வந்தது. இதிலிருந்து உங்களுக்குப் புரியுமே! முழுச் சிங்கப்பூரும் நாம் பார்க்கவில்லையென்று. அங்கு போய் வந்த பின்பு, இங்கு தொலைக் காட்சியில், ஒலி ஒளிப் பாடல் காட்சிகளில் சென்ரோசாத் தீவுக் காட்சிகள், சங்கீத நீரூற்று, ஓச்சாட் தெரு எனப் பார்க்கும் போது, அதில் நடந்தோம், இதில் இருந்தோம் என இடங்களை இனம் புரிய முடிந்தது.

நாம் வரும் வழியில் தெருவில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஓடியபடி வந்தன. ஒரு துவிச்சக்கர வண்டியைக் கூடக் காண முடியவில்லை. கார்களும் மோட்டார் வண்டிகளும் தான். இது ஏன்? ஏதற்காக இந்தக் காட்சி? எங்காவது ஊர்வலமோ? எனக் கேள்வி கேட்டுக் குளம்பினோம். அப்படியே இரவு உணவிற்காகச் செரங்கூன் பக்கம் திரும்பி உணவகம் பனானா லீஃவ்ஐத் தேடினோம்.

அதே ஞாயிறு நாள். உறவு தேடும் நாள். சனக் குவியல் தெருவெல்லாம் நிரம்பி வழிந்தது. இரவு 11.00 மணியப்படி சலேட்டா கில் வீடு வந்து சேர்ந்தோம். விமானத்துக்குச் செல்பவர் தயாராக, கதைப்பவர்கள் கதைக்க, நாம் நித்திரை கொள்ளப் போனோம்.

மறு நாள் 18ம் திகதி உறவினர்கள் யு.கே, இலங்கை என்று புறப்பட நானும் கணவரும் ஒரு ரக்சியில் மலேசிய தென் எல்லை நகரான யோகூர் புறப்பட்டோம். நாம் தங்கிய வீட்டிலிருந்து 18 நிமிட கார் பயணம் தான்    மலேசியாவிற்கு.  வாகனம் ஓடிய படியே ரக்சி சாரதி தந்த பத்திரங்களை நிரப்பினோம். மலேசிய நாட்டினுள் செல்ல எல்லைக் காவற் பகுதியில் பாஸ்போட்டுகளைக் காட்டி அனுமதியைப் பெற்றுக் கொண்டோம். அதாவது ரக்சிச் சாரதி வாகனத்தில் இருந்தபடியே பெற்றுத் தந்தார்.

சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், பிரான்ஸ் போல, ஒரு நகர் விட்டு மறுநகர் போகப் பணம் செலுத்த வேண்டும். வாகனச் சாரதி இவைகளைச் செய்வார். யோகூர் எனும் பகுதியின் தலைநகர் யோகூர்பக்ரூ ஆகும்.  இதை யேபி (பி ஆங்கில எழுத்தின் 2வது உச்சரிப்பு) எனவும் கூறுவர். யோகூர் எனும் மலேசியத் தென்பகுதி வாயிலில் இருந்து சிங்கப்பூர் 1046 மீட்டர் நீளமான சதுப்பு நிலத்தில் உயர்த்திய பாதையுடன் இணைந்துள்ளது. முதலில் நாம் மலேசியா பற்றிச் சிறிது பார்ப்போம்.

கிறிஸ்துவிற்கு முன் 100ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ‘ஸ்வர்ணதுவீப’ என – தங்கத் தீவு, தங்க நாடு என மலேசியா அறியப்படுள்ளதாம். மலேசிய அரசர்கள் ‘ராஜா’ என அழைக்கப்பட்டனர் எனவும், மலே திருமணங்கள் இந்திய சாயலில் இருப்பதும், இந்துக் கோவில்கள் பல இருப்பதுவும் இந்தியர்களின் செல்வாக்கு இங்கு அதிகம் இருந்தது என்று புலனாகிறது.
யாரைப் பார்த்தாலும் மலேசியாவைக் கண்டு பிடித்தவன் பரமேஸ்வரா எனக் கூறியபடி இருந்தனர்.     –

——– மிகுதியை அடுத்த அங்கம் 8ல் பார்ப்போம்.———–

( படங்களாக இதில் நீங்கள் பார்ப்பது சங்கீத நீரூற்றுப் படங்கள் இரண்டையும், சிங்கப்பூரிலிருந்து யோகூர் செல்லும் பள்ளச் சதுப்பு நிலத்தின் குறுக்கே உயர்த்திய மேடான பாதையையும்(தெருவையும்)

 

6. வேதாவின் ஆத்திசூடி – ‘ஊ’

 

uuvanna

Art by Vetha.

 

‘அ’ கர வரி அடிகளில்

  ‘ஊ’ காரம். 

ஊக்கமது கைவிடேல். ( ஒரு தொழில் செய்யும் போது முயற்சி, மனவலிமையைக் கைவிடாதே.)
இது ஒளவையாரின் வரி.

இனி எனது வரிகள்.

1. ஊக்கம் உயர்வுக்கு ஏணி.
2. ஊடல் இணைகளுக்கு இன்பம்.
3. ஊதாரித்தனம் வாழ்விற்கு உதவாது.
4. ஊதற்காற்றில் உடலைப் பேணு.
5. ஊமைக் காயம் ஆபத்துடைத்து.
6. ஊரிற்கு நல்லது செய்.
7. ஊராரை மதித்து வாழ்.
8. ஊழல் தீவினைக்கு வழி வகுக்கும்.
9. ஊறுகாய் உணவின் சுவை மாற்றும்.
10. ஊனமுடையோரையும் ஏற்று வாழப் பழகு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2010.

                                       

5. வேதாவின் ஆத்திசூடி – ‘உ’ கரம்.

 

‘அ’ கர வரி அடிகளில்

‘உ’  கரம்.

 

உடையது விளம்பேல். (தன்னுடைய பொருளை
அல்லது கல்வி முதலிய தன் சிறப்பைத் தானாகப் புகழ்ந்து பேச வேண்டாம்)
இது ஒளவையாரின் வரி.

 

இனி எனது வரிகள்.

 

1. உகந்தவர் நட்பைத் தேடு.
2. உக்கிரம் கொள்ளல் ஆரோக்கியக் கேடு.
3. உசாவுதல் அறிவின் மேம்பாடு.
4. உச்சரிப்புத் தெளிவு மொழிக்குயர்வு.
5. உடற் பயிற்சி நாளும் அவசியம்.
6. உடல் எடையை அளவாக்கு.
7. உடற் கொழுப்பு அழித்தல் சுகம்.
8. உட்பகை உன்னையும் கெடுக்கும்.
9. உணவில் ஆரோக்கியம் தேவை.
10. உண்மையால் உயரலாம்.
11. உதறிவிடு கெட்ட சகவாசங்களை.
12. உத்தம நட்பு உயர்வு தரும்.
13. உத்தமனாக வாழ முயற்சி செய்.
14. உபகார உணர்வு உன்னதமானது.
15. உயிர்க் கொலை தவிர்.
16. உரிமையோடு உறவு கொண்டாடு.
17. உலக ஞானம் தேடு.
18. உலோபியாய் வாழாதே.
19. உழைப்பு உரம் தரும்.
20. உள்ளி உணவில் சேர்.
21. உள்ளுணர்வை எப்போதும் அவதானி.
22. உள்ளெரிச்சல் துடை.
23. உறக்கம் அளவாகக் கொள்.
24. உறவு குணத்தில் உயர்ந்தோரோடு ஆகட்டும்.
25. உறுதி எண்ணத்தில் கொள்ளு.
26. உறைவிடம் துப்புரவாய் வைத்திரு.
27. உற்றாரின் உறவு இனியது.
28. உற்சாகம் உன் ஆயுதமாக்கு.
        —————————————-

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                 

4. வேதாவின் ஆத்திசூடி. – ‘ஈ’

  

 

 

 ‘அ’ கர வரி அடிகளில்

‘ஈ’ காரம்.

 

ஈவது விலக்கேல். (ஈவது- ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பது.)
விலக்கேல் – தடுக்காதே. ஒளவையாரின் வரிகள் இது.

இதையொட்டிய எனது வரிகள்.

1. ஈகம் தேவைக் கேற்ப அமையட்டும்.
2. ஈடழிய வாழாதே.
3. ஈட்டும் பொருள் நேர்வழியாகுக.
4. ஈகைக் குணம் உயர்ந்தது.
5. ஈசனைத் துதி.
6. ஈச்சப்பியாய் வாழாதே.
7. ஈரடிக் குறள் படித்து நட.
8. ஈனமாக வாழாதே.
9. ஈன்றவரைப் பேணு.

ஆக்கியவர் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                              Big Blue Divider

                             

Previous Older Entries