1. பா மாலிகை.

 

                                                              

எழுதுகோலின் அற்புதமிது!

அலையடிக்கும் கடலாய்
கலை நிறை உடலாய்,
விலையில்லாத் தொடர்பினை
இலை விரித்துப் பரிமாற
வலை பின்னும் வலைப்பூ
கலைப்பூ!…தமிழ் மலைப்பூ!!!!

நூலை இழுத்துக் கவி
மாலை தொடுக்கும் இணையச்
சாலைப் பயணமிது. எழுது
கோலின் அற்புதமிது!
பாலைத் தேனோடு தமிழாய்
பருகுவோம் வாருங்கள்!

கோவைக் கவியான வேதா
இலங்காதிலகம் போடும்
கோல வலைச் சாலையிது!
அப்பா, அம்மா அத்திவாரமிட்டு,
ஆசிரியர்கள், சமூகத்தால் வளர்ந்து
அன்புக் கணவரால் பூவிரித்த சாலையிது!

பாக்களின் மாலையான என்
பாமாலிகைக் கதம்ப மிது.
பார்த்து, சுவைத்து, வரிகளைப்
பாங்குடன் வரையுங்கள்.
வேதாவின் வலை – யின் பாமாலிகை
ஆரம்பக் கவிதையிது.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-7-2010

                                

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    ஜூன் 15, 2011 @ 19:07:32

    Sujatha Anton, Vijayakumar Kumar and Gajan Gajah like this..

    மறுமொழி

  2. இரா. தேவாதிராஜன்
    ஜூன் 12, 2013 @ 09:24:16

    ஆரம்பக்கவிதையோ அற்புதமாய் இங்கே….

    அழகாய் உரைத்தீர்கள் ஆதிமுதல் இந்த கவி வரை…

    ஆங்காங்கே தங்களை வழிநடாத்தி வந்தவர்களின் பட்டியல்…

    அத்தனை உறவுகளும் நட்புக்களும் தானே இப்படி இங்கே நீங்கள்…

    முதல் போல் தெரியவில்லை முதலில்லாமல் போட்ட முதல் இது…

    என்றுமே இந்த வலைப்பூ வாசமோடு வளமோடு வலம் வரட்டுமே…

    ஏதோ எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு அர்ச்சனை பூக்கள் இவைகள்…

    ஏற்றுக்கொள்ளுங்கள் இந்த எளியோனின் மனமார்ந்த வாழ்த்தினை…

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜூன் 12, 2013 @ 19:29:03

    மிக மிக நன்றி சகோதரா. மிக மகிழ்ந்தேன்.
    God bless you.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: