2. நம்பிக்கைத் தோழன், எம் நாயார்.

  நம்பிக்கைத் தோழன், எம் நாயார்..

மட்டமாகக் கொய்த தேயிலைச் செடிகள்
வட்டமாகச் சூழ்ந்த அழகு மலையுச்சியில்
கட்டிய ஒரு வீட்டிலெம் வாழ்வு.
கணவர் கட்டுப்பாட்டில் முன்னூறு தொழிலாளர்கள்.
தேயிலை றபர் தோட்ட நிர்வாகம், சிங்கள
வட்டகை, கழுத்துறையிலெம் தாய்நாட்டு வாசம்.

காவலரிருவர் இரவில், காவலரில்லா வேளை
காவலராவார் எம் கண்மணி நாயார்.
கட்டில் பகலிலவர், இரவில் ஆக்ரோசமாகிட.
கரிசனையாய்க் குளிப்பாட்டல், கருத்துடன் உணவு.
கணநேரம் அவர் கண்ணால் மறைந்தாலும்
கவலை தீர்க்கச் சேவகர் தேடிடுவார்.

சிறந்த நாயாரின் சீரான சேவையால்,
சினந்து பொறாமையால் அவரையும் கடத்துவார்.
சினக்காது புதியவரைத் தேடுவோம், சிங்கமாக்குவோம்.
சீதள வாழ்வுக்காயெம்முடன் வாழ்ந்தவர் எழுவர்.
சிலரை நம்பலாம், பலரை நம்பவியலாத,
சீரில்லாவுலகிலன்று நம்பிக்கைத் தோழனெம் நாயார் தான்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
1-6-2006.

                                

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 20, 2011 @ 19:07:53

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா wrote – அற்புதம்!! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 2. sujatha
  மே 04, 2014 @ 17:03:54

  மலையக வாழ்க்கையின் ஒருபக்கம். அருமை வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 3. கீதமஞ்சரி
  ஆக 17, 2014 @ 08:15:41

  நம்பிக்கைத் தோழனாய், காவல் வீரனாய் கடமையை செய்த அவரை நாயென்று சொல்லாமல் நாயார் என்று மரியாதையாய் விளித்தமை கொண்டே அவரது நற்பண்பும் நன்றியும் புரிந்துகொள்ள இயல்கிறது. எவரையும் எளிதில் நம்பவியலா உலகில் எந்த ஐயத்துக்கும் இடமின்றி நாம் நம்புதற்குரியவர் அவர்தானே!

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 08, 2015 @ 22:02:37

  இனிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி…கீதமஞ்சரி

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 05, 2015 @ 06:24:06

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 05, 2015 @ 06:26:27

  மறுமொழி

 7. மணிக்கன்னையன்
  ஆக 05, 2015 @ 08:17:10

  அவர் நாயார் இல்லை, நாயகர் எனக் கூறுங்கள்

  மறுமொழி

 8. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 05, 2015 @ 08:55:21

  நன்றி மறவாத தோழரே….

  மறுமொழி

 9. angelin
  ஆக 05, 2015 @ 14:18:18

  நல்ல தோழன் நமக்கு …அவர்தான் ரியல் செக்யூரிட்டி guard

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: