1. சூரியனே…சூரியனே…

                                                                                                                   

 

 

சூரியனே…சூரியனே… 

 

சூரியனே! சூரியனே! அன்று உன்னை
நேரில் பார்த்திடக் கொள்ளை ஆசை.
எரிக்கும் அனற்கதிர் வீசி ஊரில்
பொரிப்பாய் கண்ணை அனல் உண்மை.
சந்திரப் பொன் தகடென இங்குன்னை
சுந்தரமாய்ப் பார்க்கிறேன் ஆகா! ஆற்புதம்!
இந்திர போகமோ இதுவென்று என்மனம்
சிந்துஐதி போடுதே கொள்ளை ஆச்சரியம்.

 குளிர் முகில்கள் வடிகட்டித் தரும்
குளுமைப் பரிதி இங்கு காணலாம்.
காலைப் பாஸ்கரன் எழுகின்ற காட்சி
மாலைச் சந்திரனோவெனும் ஒரு மாட்சி.
வட துருவத்திலவன் ராஐரீக விஐயம்
கோடையில் மட்டும் சுழலும் நிசம்.
வருண சாலமாய் இயற்கை மட்டுமா!
சுவர்ணவிக்கிரகச சொற்ப ஆடை மனிதரும!

 குளிர் விலங்கறுத்த வீட்டுக் கைதியாளர்
குளிப்பு வெயிலில், வெளியே களிப்பு!
குளிரில் இறுகிப் புன்னகை தொலைத்து
களிப்பு மலர்ந்து விரிந்த சிரிப்பு.
தீயில் வாட்டிய இறைச்சி விருந்து.
சாய்வு, கூடாரத்துள் இயற்கையை ரசிப்பு.
சூரியன் கண்டு சுகிக்கும் மக்கள்
பூரிக்கும் அசைவிங்கு இந்திர விழாவெடுப்பு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-6-2006.

In Muthukamalam web site:-    http://www.muthukamalam.com/verse/p984.html

 

             

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 20, 2011 @ 19:05:08

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா wrote சூரிய அழகு அற்புதம்!! வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. கலைநிலா
  டிசம்பர் 17, 2011 @ 09:04:40

  குளிர் முகில்கள் வடிகட்டித் தரும்
  குளுமைப் பரிதி இங்கு காணலாம்.
  காலைப் பாஸ்கரன் எழுகின்ற காட்சி
  மாலைச் சந்திரனோவெனும் ஒரு மாட்சி.

  உணர்வை சொல்லும் உன்னத வரிகள்.
  கலைநிலா
  http://vazeerali.blogspot.com/

  மறுமொழி

 3. Vetha ELangathilakam
  டிசம்பர் 17, 2011 @ 17:03:45

  மிக்க மகிழ்வு கொண்டேன் கலை நிலா அவர்களே உங்கள் கருதிடுகை, வருகையினால். என்மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 06, 2014 @ 14:18:02

  You, கவிதையின் காதலன், Raammohan Raammohan and Thambirajah Pavanandarajah like this…

  கவிதையின் காதலன்:-
  எரிக்கும் அனற்கதிர் வீசி ஊரில்
  பொரிப்பாய் கண்ணை அனல் உண்மை.
  சந்திரப் பொன் தகடென இங்குன்னை
  சுந்தரமாய்ப் பார்க்கிறேன் ஆகா! ஆற்புதம்!
  இந்திர போகமோ இதுவென்று என்மனம்
  சிந்துஐதி போடுதே கொள்ளை ஆச்சரியம்.

  Vetha ELangathilakam:-
  Nanry..கவிதையின் காதலன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 06, 2014 @ 18:50:45

  Sutha Hari :-
  சந்திரப் பொன் தகடென இங்குன்னை
  சுந்தரமாய்ப் பார்க்கிறேன் ஆகா! ஆற்புதம்!
  இந்திர போகமோ இதுவென்று என்மனம்
  சிந்துஐதி போடுதே கொள்ளை ஆச்சரியம். Arumai

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  சூரியனே! சூரியனே! அன்று உன்னை
  நேரில் பார்த்திடக் கொள்ளை ஆசை.
  எரிக்கும் அனற்கதிர் வீசி ஊரில்…
  பொரிப்பாய் கண்ணை அனல் உண்மை.

  Yousuf MOhamed:-
  அருமை!– குளிர் முகில்கள் வடிகட்டித் தரும் குளுமையைப் பரிதி இங்கு காணலாம் காலைப் பாஸ்கரன் எழுகின்ற காட்சி மாலைச்சந்திரனோவெனும் ஒருமாட்சி வட துருவத்திலவன் ராஜரீக விஜயம் கோடையில் மட்டும் சுழலும் நிசம் வருணசாலமாய் இயற்க்கை மட்டுமா! சுவர்ணவிக்கிரகச் சொற்ப ஆடை மனிதரும்!, — நன்று!,

  Vetha ELangathilakam:-
  Nanry Sutha, Sri, Y MO….God bless you all.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: