1. பாவாண்ட கண்ணதாசன்


2ec526d9-6331-4cf7-9749-5cf6e4111c43

பாவாண்ட கண்ணதாசன்.

நா இனிக்கத் தமிழ் வரைந்த
பா உலகக் குரு இவன்.
சா இல்லாக் கவி உலகினுள்
வா என்று பலரை இழுத்தவன்.
மா கவிஞன் பிறந்த நாளுக்காய்
பா எழுதுகிறேன் பரவசம் கொண்டு.

ஆயிரத்துத் தொளாயிரத்து    இருபத்தேழில்

ஆனித் திங்கள்   இருபத்தி     நான்கில்
ஆயிரத்துத் தொளாயிரத்து    இருபத்தேழில்
அவனியில் உதித்த வித்தகன் முத்தையா.
அறிமுகமானான் பின் அரசவைப் புலவராயும்.
அர்த்தமுள்ள இந்துமதம், யேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்களால் விசுவரூபமானான்.

 சந்தக் கவியின் சொந்தக்காரன் இவன்.
சுந்தரப் புதையல் சிறுகூடல் பட்டிக்கு.
செந்தமிழ் மகரந்தம் சிந்தி உலகிற்குப்
பந்தி விரித்தான் சினிமா விருந்தில்.
தந்த வரிகளின் தரத்தால் நம்
                                                   சிந்தை நிறைத்த தேனருவி                                                                                                                               கண்ணதாசன்.                                                                                       

பாவாண்ட இவன் வசந்த வரிகள்
மனமாண்டு தந்தது நிதானம், தத்துவத்தில்.
பக்தியாண்டு தந்தது தெளிவு, சமயத்தில்.
காதலாண்டு தந்தது கிறக்கம் காதலில்.
கருத்தாண்ட வரிகள் அனைவர் உதட்டிலும்
காலவரையின்றிப் புரள்வதிவன் வாங்கிய வரம்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-6-2006

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                    

 

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜூலை 13, 2011 @ 20:59:32

  அன்புச்சகோதரி வேதா,
  என் மானசீகக் குரு, என் எழுத்தோட்டத்தின் ஜீவநாடி கவியர்சர் கண்ணதாசன் அவர்களுக்கு தாங்கள் வரைந்த இந்த இனிய கவிதை என் மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 15, 2011 @ 16:53:23

   மிக்க நல்லது. எனக்குத் தெரியும் இது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்று . உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். மிக்க மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 28, 2013 @ 05:43:39

  Krishnasamy kittu in Fb Chatt:-

  அம்மா,வணக்கம். இண்டர் நெட்டில் கண்ணதாசனைப் பற்றி சில விபரங்களைத் தேடிக்கொண்டிருந்த போது நீங்கள் என் கவிதைக் காதலன் கண்ணதாசனைப் பற்றி எழுதிய கவிதையைப் படித்தேன். அருமையான கவிதையம்மா!!உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
  .

  mikka nanry sakothara….god bless you.

  மறுமொழி

 3. tharai kittu
  மே 17, 2013 @ 09:23:48

  அம்மா தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நிலைத்திருக்கும்.
  கண்ணதாசன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உங்கள் கவிதையும் உச்சரிக்கப்படும்.

  மறுமொழி

 4. கவிஞர் தாரை கிட்டு
  மே 31, 2013 @ 09:49:52

  அம்மா,
  கண்ணதாசனைக் கற்றவர்கள்
  காலத்தை வென்றவர்கள்,,,நீங்கள்
  கண்ணதாசனைப் பற்றியே நித்தமும்
  சிந்திக்கும் சிந்தனை சிற்பி!!,,,இனி
  வாழ்வெல்லாம் உங்களுக்கு வசந்தம்தான்!!,,,,

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2013 @ 07:25:04

   மிக மிக நன்றி கவிஞர் தாரை கிட்டு இனிய கருத்திடலிற்கு.
   ஆண்டவனாசி நிறையட்டும்.

   மறுமொழி

   • கோவை கவி
    மே 06, 2017 @ 08:24:51

    ‎கவிஞர் தாரை கிட்டு‎ to Vetha Langathilakam
    6 May 2013 at 07:29 ·
    கவிக்குயிலே! என் கவிதைக் காதலன் கண்ணதாசன் பற்றி தாங்கள் எழுதிய “பாவாண்ட” படித்தேன்.அருமையம்மா! எனக்காக என் கவியரசைப் பற்றி இன்னொரு கவிதை எழுதுங்களம்மா!!…….கவிஞர் தாரை கிட்டு.

    Vetha Langathilakam :- sure….Thank you….
    6 May 2013 at 08:04 ·

 5. தாரை கிட்டு
  ஜூன் 09, 2013 @ 12:28:41

  கவிதாயினி வே தா
  கவியெனக்கு தா தா………..தாரை கிட்டு

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 16, 2013 @ 15:00:19

  மிக்க நன்றி கருத்திடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: