8. மனித நேயக் கிரீடம் அணியுங்கள்.

 

                                                                      

 

குழந்தைச் செல்வங்கள் குமுத மலர்க் கொத்துகள்.
குடும்ப விளக்குகள் குளிர் தென்றல் அலைகள்.
உவகைமிகு சர்வதேச உயிர்ச்சிலைகள் மழலைகள்.
உயிர் அதிசயங்கள் உணர்வுக் காவியங்கள்.
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.

உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.
மனவாதை இருளின் ஒளி தேவதைகளின்
மனங்கவர் புன்னகை, மழைமின்னல கீற்றுகள்.
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.

பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.

கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்   

10-7-2006.

( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானெலிகளில் ஒலிபரப்பானது.

இக்கவிதை எனது 3வது நூலிலும் -உணர்வுப்புக்களில்- இடம் பெற்றது.)

                              

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜன 28, 2012 @ 12:51:31

  அன்பினிய சகோதரி வேதா,
  அருமையான கவிதை. இளம் தளிர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை பேணவேண்டிய வசியத்தையும் மிகவும் அருமையாக அழகுறும் சொற்களில் ஆழமாக உரைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 29, 2012 @ 17:18:14

  அன்பின் சகோதரா தங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 03, 2016 @ 08:21:27

  Dharma Ktm :- அருமை அக்கா
  Unlike · Reply · 1 · 20 hrs

  Vetha Langathilakam :- எங்கள் பிள்ளைகள்.- photo
  Like · Reply · 20 hrs

  Vetha Langathilakam :- mikka nanry Dhrma…
  Like · Reply · 17 hrs

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 03, 2016 @ 08:23:03

  Subajini Sriranjan :- மழலைப் பூக்களை மதிப்போம்
  வளர்ப்போம் அவர்கள் ஆளுமைகளை….
  மிக அழகான பாடல்
  Unlike · Reply · 1 · 16 hrs 2-2-16

  Vetha Langathilakam:- mikka nanry Suba.
  Like · Reply · 11 hrs 2-2-2016

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 10, 2016 @ 20:44:38

  Sujatha Anton :- பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்
  சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.
  குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.
  மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.
  காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,
  ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.
  முற்றிலும் உண்மை. புலம்பெயர்ந்த பின்பு பெற்றவர்களின் கவலைகள் இதில் தொலைகின்றது. இங்கு பின்பற்றும் கலாச்சாரம்
  மாற்றாமலே மாற்றிவிடுகின்றது.
  Like · Reply · 10-2-2016

  Vetha Langathilakam:- Mikka nanry Sujatha.
  Like · Reply · 10-2-2016

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 02, 2018 @ 11:47:02

  Mohan Nantha :- மழலைச்செல்வங்களின் மனிதநேயம் அருமையானவிளக்கம். மழலைகளதைக்கற்றுக்கொண்டதே தாயின் அரவணைப்பில்தான். அதனால்தானோ மற்ற அணைத்துயிர்களையும் பயமற்ற அணைப்பால் தன்னியல்பானமனிதநேயத்ததை தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றது. பாராட்டுக்கள். உளம்மகிழ்ந்த வாழ்த்துக்கள்.
  2017
  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி சகோதரா தங்கள் அன்பான கருத்தகளுக்கு.
  அன்புடன் நன்றியும் உரித்தாகுக.
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: