10.நல்லாங்கு வாழ….

 

நல்லாங்கு வாழ….

‘அ’  னா  என்றால் அன்பு.
‘ஆ’ வன்னா என்றால் ஆதரவு.
‘இ’ னா என்றால்  இசைவு.
‘ஈ’ யன்னா தானே ஈசனுக்கு.

அறிவு மண்ணும் தமிழையூட்டு!
அமைதி நண்ணும் அன்பைக்காட்டு!
அடக்க எண்ணும் நட்பையோட்டு!
இணங்கி வாழும் தகைமையூட்டு!

கனிவில் முனிவில் இன்மொழியூட்டு!
கருவாய் தன்னம்பிக்கையும் நாட்டு!
கண்ணியம் பேணும் கருத்தை நீட்டு!
கலைகளை உன்னுள்ளே நுழைய விடு!.

தொல்லுலகில் பக்திநெறி அருங்கலம்.
வல்லுலகில் கடமைநெறி பெருங்கலம்.
நல்லுலகில் எல்லவனாய் செல்வாக்குடன்
பல்லாண்டு நல்லாங்கு வாழ்ந்திடு!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-7-1999.

(டென்மார்க் ‘கற்பகம்’சஞ்சிகை

யிலும், ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும் ஒலிபரப்பானது.)

In Eluthu.com  web site:-      http://eluthu.com/kavithai/54458.html

                                 
 

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 24, 2012 @ 18:06:00

  Arunthathi Pratheepan wrote:-
  அகரவரி எதுகைமோனை நன்று

  Vetha wrote:- mikka nanry Arunthathi. God bless you all.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 25, 2012 @ 17:51:47

  Mahilini Kaanthan wrote:-
  இப்படி வாழத்தான் முயற்சிக்கிறோம்.முடியலயே….

  Vetha wrote:-
  மிக்க நன்றி மகிழிளி கருத்திடலிற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 12, 2015 @ 14:39:49

  pollachi abi • 28-Jan-2012 12:16 pm
  அ எனில் அடக்கு
  ஆ எனில் ஆண்டுவிடு
  இ எனில் இணங்கு
  ஈ எனில் ஈனம்

  இதுவே எமது சூத்திரம்..

  இப்படித்தான் போகிறது
  இங்கு..

  உங்கள் கவிதையும்
  கருப்பொருளும் மிகத்
  தேவையாயிருக்கிறது இன்று.

  வேதா. இலங்காதிலகம். • 28-Jan-2012 5:28 pm
  மிக்க நன்றி பொள்ளாச்சி அபி. உங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்ந்தேன் . மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: