பயணக்கட்டுரை. 1

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
கார்த்திகை மாதம் ஏழாம் திகதி  இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் சிங்கப்பூர் பயணம். அங்கிருந்து மலேசியா, பினாங், இலங்கை சென்று டென்மார்க் திரும்பி வந்தோம். இந்த அனுபவத்தை 21 அங்கங்களுடைய பயணக் கட்டுரையாக 26.12-2002ல் இலண்டன் தமிழ் வானொலியில் ‘அனுபவம்’ என்ற தலைப்பில், வாரா வாரம் எனது குரல் மின்னஞ்சலில் (வொய்ஸ் மெயிலில்) அனுப்பி இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகியது. அந்தக் கட்டுரையையே (சில மாற்றங்களுடன்) இங்கு தருகிறேன்.  கட்டுரை ஆரம்பிக்க முன்னர் கவிதை நேரத்தில் எழுதி என் குரலில் வாசிக்கப்பட்ட கவிதையுடன் ஆரம்பிக்கின்றேன். சில புகைப் படங்களும் இணைக்கப்படுகிறது.

1. அனுபவம்.

நள்ளிரவு, நடுப்பகல் எனப் பாராது
அள்ளிக் கொண்டு நம்மைச் சுமந்து
வெள்ளைப் பஞ்சு வானூடு புகுந்து,
வெள்ளிப் பறவை சிறகு விரித்தது.
பாரீசில் இறக்கி இடைவேளை தந்தது.
சிறீலங்கன் எயர்லைனில் பயணம் தொடர்ந்தது.

மயில் வண்ண ஆடைப் பணிப் பெண்கள்
ஒயிலாக வழங்கினர் சேவைகள். படங்கள்
பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால்
பார்த்தபடி பயணம் நேர்த்தியான உணவுடன்.
இலங்கையைத் தொட்டது கார்த்திகை எட்டில்.
சங்கி விமானதளத்தில் ஒன்பதில் இறங்கினோம்.

சங்கியிலிருந்து ஆரம்பம் அழகு நகர் வலம்,
சிங்காரச் சிங்கப்பூரின் சுற்றுலா ஊர்வலம்.
தமிழர்கள் கடைவீதிகள் செரங்கூனில்.
தமிழர் உணவுகள் தேக்கா செரங்கூனில்.
கல்யாணம் வரை செரங்கூனில் நடைவலம்.
உல்லாச வாடிவீட்டில் நித்திரைவலம்.
சிங்கப்பூரின் சிறு அனுபவத்துளி இது.
ஆங்காங்கு தருவேன் இன்னும் சிலது.
நேர நெருக்கம் கழுத்தில் இறுக்கம்.
பாரத்தின் பொறுப்பில் படிகிறது சுருக்கம்.                                                       

16-12-2002.

சிங்கப்பூர் சங்கி விமான தளத்தில் 9-12-2002ல் கால்பதித்தோம். மனம் ‘ஓ!  சிங்கப்பூரில் நாம்!’…என்று குதூகலித்தது. பயணப் பொதிகள் சுழரும் பட்டி உள்ள இலக்கத்தைக் கண்டறிந்து படிகளால் கீழே இறங்கி எமது பொதிகளைச் சேகரித்தோம். அந்த இடமே பிரமாண்டக் குத்துவிளக்குகள் வைத்து, பிளாஸ்டிக் மலர்களால் அலங்கரித்தது மனதைக் கவர்ந்தது.  ‘ஓகோ! அழகு இங்கிருந்தே ஆரம்பிக்கிறதோ!’… என எண்ணி ரசித்தோம். சிங்காரச் சிங்கப்பூர் என்று பல வகையாகக் கேள்விப்பட்டு, சினிமா பாடல்கள், படங்களில் பார்த்த நினைவுச் சேகரிப்புகள் குமிழ் குமிழாகக் கிளம்பின.
எங்கு தங்குவது என்ற சிரமம் இன்றி ஏற்கெனவே பதியப்பட்ட இடத்திற்குச் செல்ல விமான நிலையத்தை விட்டு வெளி வாசலுக்கு வந்தோம். அங்கு அரைக் கால்சட்டை அணிந்த சீன முகச்சாயலுடையவர் இந்த வாடகை வண்டியில் தான் ஏற வேண்டும் என்று, மக்கள் வருகின்ற முறையின் படி வாடகை வண்டிகளை வழி நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு எமது பெட்டிகளை ஒரு வாகனத்தில் ஏற்றிப் பயணமானோம், வண்டியில் மீட்டர் போடப் பட்டிருந்தது.   

வழி நெடுகிலும் வானளாவிய உயர் மாடிக் கட்டிடங்கள் தான். தெருக்களும் மிக அழகாக பச்சைப்பசேலென, மலர்களுடன், துப்பரவாக, மனம் கவரும் காட்சிகளாகவே  இருந்தது. சாரதியுடன் ஆங்கிலத்தில் உரையாடியவாறு வாடி வீட்டு வாசலில் இறங்கினோம்.
சிங்கப்பூரின் மிகப் பிரபல வீதியான  ஓச்சாட் வீதியருகில் நாம் தங்கும் வாடி வீடு இருந்தது.                                                                                                                                                                                                                         இந்த ஓச்சாட் தெருவில் 1840 களில் சாதிக்காய் மரங்களும், மிளகு மரங்களும் வரிசையாக அணிவகுத்து நின்றனவாம். சனநெருக்கம் அக் காலத்தில் குறைவாகவும், பெருந்தோட்டச் சொந்தக்காரர்களான ஸ்கொட்ஸ், கெயான்கில், கூப்பேஜ் ஆகியவர்களே இவ் வீதியில் வசித்து வந்தனராம். இன்றும் அவர்கள் பெயர்களில் தெருக்கள் இருப்பதைக் காணலாம். 1900 களில் இயற்கையாக மிகப் பெரிய நோய்கள் இந்த சாதிக்காய்த் தோட்டங்களைப் பாதித்தன. மழை வெள்ளம் பெருகிய போது, பொதுவாக இயற்கை பிரச்சனையாக ஆகியது. 1965ல் ஸ்ரம்ஃபேட் கால்வாயை வெட்டி இவைகளைக் கட்டுப் படுத்தினார்கள். 1970ல்பொழுது போக்கு நிலையங்களும், வியாபார நிலையங்களும், வாடி வீடுகளும் இங்கு உருவாகத் தொடங்கின. இரும்பு, தகரங்களால் சட்டமிட்ட பெரும் கண்ணாடிக் கட்டிடங்கள் எழுந்தன. இன்று சகல வித கலாச்சாரங்களும், பொருள்களும், பொழுது போக்கு அம்சங்களுமாக ஓச்சாட்வீதி சிங்கப்பூரின் காட்சிப் பெட்டகமாக (சோ கேஸ்) உள்ளது. இது ஓச்சாட் வீதி பற்றிய சிறு துளி. நேரம் நண்பகல் 2.35.

–அடுத்த அங்கத்தில் தொடர்வோம். ——-

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. adhithakarikalan
    ஜூலை 19, 2010 @ 10:32:47

    நலல் எழுத்து நடை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: