12. மயக்கம்.

122773706_9lglvuor  

(படம்.நன்றி – ஆனந்த விகடன்.)

மயக்கம்.

பெற்றவர் கலாச்சாரம் ஒருவர்
பேச்சிலும் மூச்சிலுமானாலும்,
பச்சையாய்க் கண்பறிக்கிறது
புலம் பெயர் கலாச்சாரம்.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்
வாடித் தெரிவது எம் கலாச்சாரம்.
தேடி ஆராய்ந்தால் அங்கு
கூடிய நன்மைகள் புரியும்.

உலக மாற்றத்தோடு நவீனமாய்
உருளும் புலம்பெயர் கலாச்சாரம்
உல்லாசமாய் அனைவரையும் தன்வசம்
இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக் கலாச்சாரத்தில்.
உலகமே மாறுகிறது நம்
வழமைகளும் பல மாறுகிறது.

கலாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
கலப்பையால் உழுதிடும் நிலைதான்.
ஆழப்போகும் வேரான தமிழ், எம்
மூலமொழி – இன அடையாளம்.
காலம், இட மாற்றத்தோடு ஆகும்
கலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.
நிலாவெட்டும் காலத்திலும் இளையவர்
சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் இரண்டு தடவை ஒலிபரப்பானது.)

In Eluthu.com Web site :-     http://eluthu.com/kavithai/54898.html

 

                 

 

 

 

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:37:17

  குமுதினி ரமணன்:- உண்மை. அருமை.
  Unlike · Reply · 1 · February 15 at 11:26am 2016.

  Vetha Langathilakam :- மிக்க நன்றி குமுதினி.
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · February 15 at 2:57pm

  Kanagaretnam Muralitharan :- அருமை.
  Like · Reply · February 15 at 2:59pm 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி sakothara K.M .
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · February 15 at 3:33pm 2016

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:39:29

  Rathy Mohan :- நிதர்சன வரிகள்
  Like · Reply · February 15 at 3:12pm 2016

  Vetha Langathilakam:- மிக்க நன்றி Rathy…
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · February 15 at 3:33pm 2016

  Subajini Sriranjan :- உள்ளத்து நல்லியல்புகள்
  என்றும் வளப்படுத்தும்
  வாழ்வை.
  Like · Reply · February 15 at 10:23pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி Subajini Sriranjan.
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · February 15 at 10:39pm 2016

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:40:30

  Sankar Neethimanickam ;:- கலாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
  கலப்பையால் உழுதிடும் நிலைதான். மிகவும் உண்மை அம்மா
  Unlike · Reply · 1 · February 16 at 6:22pm 2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றி sankar Sankar Neethimanickam
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · February 16 at 11:45pm 2016

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:41:40

  Ramesh Manivasagam:- நிலாவெட்டும் காலத்திலும் இளையவர்
  சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும். அருமையம்மா அருமை
  Unlike · Reply · 2 · February 16 at 11:09pm 2016

  Vetha Langathilakam:- மிக்க நன்றி Ramesh Manivasagam
  கருத்திடல் மகிழ்ச்சி தந்தது.
  Like · Reply · 1 · February 16 at 11:46pm 2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: