14. உறவற்ற சிகரம்……

 

 

 

உறவற்ற சிகரம்……

 

பிரமிக்கும் சிகரத்திலிருந்து  கீழ் நோக்கினால்
பிள்ளையார் எறும்பின் உருவென மனிதர்.
புரண்டொருவர் சிகரத்தால் கவிழ்ந்தால்
பிண்டம், உயிர் பிரிந்த உடல்.

சிகர உச்சியை மூடும் பனி
சிறகு விரிக்கும் குளிர்காற்றும் தனி.
பகர ஒரு தரு நிலைக்காது.
நுகர, பயிர் பச்சை இருக்காது.

நகரம், நாட்டில் உயரும் சில
சிகரம் தொடும் மனங்களை வண்டாய்
சிதைக்கும் கர்வப் பனிப் படலம்.
வதைக்கும் அலட்சியக் குளிர் வாடை.

உயரம் எட்டும் பல மனிதத்தின்
உறவு விலக, உணர்வு உலரும்.
உறவற்ற வாழ்வு வேப்பம் காயாகும்.
உறவற்ற உயர்வு வெறுமை, நிசப்தம்.

பகர முடியாத புகழின் பிரமிப்பு.
நிகரற்ற வெற்றிக் கொடிப் பரப்பு.
சிகரம் உறவின்றேல் ஒரு மகரமல்ல!
சிகர வெற்றிக் கொடி மட்டும் போதாது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
20-2-2007.

( ஐ.ரி.ஆர் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும் ஒலிபரப்பானது.)

In Eluthu.com web site :-   http://eluthu.com/kavithai/55001.html

 

                  

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 13, 2016 @ 08:18:33

  Subajini Sriranjan :- அருமையான பா
  12-10-2016

  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன் அன்பும் மகிழ்வும் சுபா.
  13-10-2016

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 13, 2016 @ 08:20:58

  Maniyin Paakkal :- அருமை
  13-10-2016

  Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் அன்பும் மகிழ்வும் Mani
  13-10-2016

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 10, 2018 @ 19:29:32

  Saravanan Mala :- தனிமையின், வெறுமயின் உச்சம், மரங்களையும், மலை முகடுகளையும் ரசித்து அதிலும் ஒரு தனிமை ஏன்?
  10-2-2018

  Saravanan Mala :- நன்றி
  10-2-2018

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 11, 2018 @ 18:48:37

  குமரன் தமிழ்குமரன் :- அருமை சகோ…
  11-2-2018

  Vetha:-
  மிக நன்றி உறவே photo

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 12, 2018 @ 08:28:57

  Shan Nalliah :- Great !
  12-2-2018

  Vetha Langathilakam :- Thank you

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: