அனுபவம். அங்கம. 4

 

எங்குமே சுற்றாமல் நானும் ஓய்வாக வீட்டில் இருக்கும் சந்தர்ப்பம் இன்று தான் வாய்த்தது, அதையும் ரசிப்போம் என்று இருந்தேன். பின்பு தான் புரிந்தது சுற்றுலா வென்றால் ஒரு நிமிடம் கூட வீணாக்கக் கூடாது என்று.

12 ம் திகதி நாம் 9 பேர் அவ் வீட்டில் தங்கினோம். காலையில் தேநீர், கோப்பி, பாண், பட்டர், ஐhம், பழங்கள் என்று எடுத்தோம். சமைக்க வசதி இருந்தும் நம்மில் யாருமே சமைக்கும் அக்கறை கொண்டிருக்க வில்லை. காலையில் வெளியே புறப்பட்டு மாலையில் கூடு சேரும் வகையிலேயே யாவரும் இருந்தோம்.  அந்த வீட்டுக்காரர், ‘அங்கு வந்து தங்கியவர்கள் யாவரும் காலையில் எழுந்து சமைத்து வைத்து விட்டு வெளியே போய் மீண்டும் வீடு வந்து சாப்பிடுவார்கள், நீங்கள் மிக வித்தியாசமாக உள்ளீர்கள்’ என்றார்.

நாங்கள் ஒரு வாகனம் ஒழுங்கு செய்து வூட்லாண்ட்ஸ் தெருவில் இருந்த அரசகேசரி சிவன் கோயிலுக்குச் சென்றோம். மலேசிய எல்லைக்கு அருகில் உள்ள யாழ்ப்பாணத்தவர் கோயிலாம். நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து 15 நிமிட வாகனப் பயணம் தான். பகல் உணவை கோவிலில் முடித்துக் கொண்டோம். விரைவில் அந்தக் கோவில் இடம் மாற உள்ளதாகக் கேள்விப்பட்டோம். 

 16ம் திகதி மாலை எல்லோரும் ரோஷினி இன்னில் ஒன்றாகக் கூடி இரவு உணவு அருந்தினோம்.’ என்ன தேக்காவும், செரங்கூனும், லிட்டில் இந்தியாவும் தானே பார்த்தோம், சினிமாவில் பார்த்த அழகிய சிங்கப்பூரைக் காணோமே! எங்கே!’ என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்.

17ம் திகதி சென்ரொசா தீவிற்கு சுற்றுலா செல்லத் திட்டம் போட்டோம்.
14ம் நூற்றாண்டில் சிங்கப்பூர் ஒரு பலனளிக்காத தீவாகவும், கடற் கொள்ளைக் காரரின் தீவாகவும் இருந்தது என சீன வியாபாரிகள் விபரித்தனர். இன்று மிகப்பொரிய உலக துறைமுகத் தீவாக உள்ளது.                                                                                                                                                                                                                   

இந்த சென்ரோசா தீவு பற்றிச் சிறிது பார்ப்போம். 1996ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் படி சென்ரோசா தீவு 3.3 சதுர மீட்டர் என்று வாசித்தேன். உள்ளே சிங்கப்பூரில் எடுத்த வழிகாட்டிப் பிரசுரத்தில் 3.2 கி.மீட்டர் வரை இழுக்கப்பட்டுள்ளது என்று இருக்கிறது. கடற்கரைகள் இறக்குமதி செய்யப்பட்டமண்ணில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கடற்கரைகளாகிறது. ( சிந்தெட்டிக் கடற்கரைகள்). இது சிங்கப்பூரின் தென் கரையோரத் தீவு. சிங்கப்பூரின் டிஸ்னிலாண்ட் எனவும் கூறுவர். சிங்கப்பூரின் விநோதப் பூங்காக்களின் தாத்தா என்றும் சென்ரோசாத் தீவைக் கூறுகின்றனர். வார இறுதிப் பொழுது போக்கு இடமும், பலர் விஐயம் செய்யும் பொழுது போக்குக் குவியல்கள், பொழுது போக்குப் பொதியுடைய இடமாகும். இது காலை 7.30 – மாலை 21.00, 23.00வரை திறந்திருக்கும். உள்ளே பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்துச் சேவையும், மோனோ ரயில் என்ற தலைக்கு மேலே லூப்பில் ஓடும் ரயிலும் உள்ளது. (படத்தில் காணுகிறீர்கள்) இவை இலவசமாக ஒரு நிகழ்ச்சியிலிருந்து மறு நிகழ்வுக்குச் செல்லும் வசதிக்காக உள்ளது. வழமையாக காலையில் வெளிக்கிட்டால், மாலை வீடு வருவோம்.

சென்ரோசா போகிறீர்களா! பகல் ஒரு மணி, இரண்டு மணிக்குப் போய் இரவு 19.30க்கு தொடங்கும் சங்கீத நீர்வீழ்ச்சி (மியூசிக்கல் ஃபவுண்டன்) பார்த்திட்டு வாருங்கள். பலர் இதைப் பார்க்காது சரி நேரமாச்சுது என்று வெளியேறுகிறார்கள். ஒரு நண்பர் இதைத் தவற விடாதீர்கள் என எம்மிடம் மிக வற்புறுத்திக் கூறினார். அதை அனுபவித்த பின்பு அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று உணர்ந்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 106 மீட்டா  உயரமான மவுண்ட் ஃபேபர் மலையில் கேபில் காரின் நிலையம் ‘த யுவெல் பொக்ஸ்’ எனப் பெயரிடப் பட்டிருந்தது. (படத்தில் நீங்கள் காணலாம்). 5 நிமிடத்தில் 1.6 கி.மீட்டர் பயணித்து சென்ரோசா தீவை அடைவீர்கள். சுற்றி வர மேலும், கீழும்கண் இமைக்காது பார்க்க வேண்டும். கேபில் காரில் போவது அழகான காட்சி.

சிங்கப்பூரின் மத்திய வியாபார வட்டம், வானளாவிய உயர் கட்டிடம் (சினிமாவில் பார்த்தோமே!), வேல்ட் டிரேட் சென்ரர் மிக அருகாகவும், பிரமாண்ட வியாபாரக் கப்பல்களும், உலக வியாபார துறைமுகமும், கொள்கலன்களும், ரேமினல் ஓப்பரேசன்கள் யாவும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

சிங்கப்பூர் அனுபவத்தில் திறமையான அனுபவங்கள், எனது பார்வையில் இரண்டு உள்ளது. அவற்றில் ஒன்று இந்த கேபில் காரில் போவது. அல்ல அல்ல போகும் போது காணும் காட்சிகள். இப்படி ஓடி விரைவாக முடிகிறதே என கவலையாக இருந்தது. முடிந்தளவு எனது புகைப் படக் கருவியைப் பாவித்தேன். அதை விட  படங்களுடைய தபால் அட்டைகளாகவும் வாங்கித் தள்ளினேன். அவ்வளவு அழகு! கொள்ளை அழகு! கேபில் வாகனப் பயணப் புகைப்படங்களும், அதனூடு காணும் காட்சிகளின் படங்களும் இணைக்கப் படுகிறது இங்கு.                                                                                                                                                                                                               

  சென்ரோசா தீவு வாசலில் அனுமதிச் சீட்டு 3 விதமாக உள்ளது. எந்த நிகழ்ச்சியை விரும்புகிறோமோ அதற்குரிய நுழைவுச் சீட்டுக் கட்டை வாங்கலாம். நாம்’ நீரின் கீழ் உலகம்’ (அன்டர் வோட்டர் வேல்ட்) உள்ள அனுமதிக் கட்டை வாங்கினோம்.                                                              

——–மிகுதியை அங்கம் 4ல் பார்ப்போம்————–

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: