2. காந்தியின் ஐப்பசி இரண்டு.

காந்தியின் ஐப்பசி இரண்டு.    

 

சத்தியாக்கிரக ஆயுதம் ஏந்திய
வித்தியாசப் போராளி காந்தி.
அகிம்சா தர்மத் தாக்கத்தை
அகிலத்திற் குணர்த்திய தேசபிதா.
அழகிய குஐராத் மானிலத்தில்
ஆயிரத்தியெண்ணுற்றி அறுபத்தொன்பது
ஐப்பசி இரண்டில் போர்பந்தரின்
அவதாரம் மோகன்தாஸ் கரம்சந்.

அகிம்சாவொளியில் இறை சத்தியம்.
அவ் வழியே சுயராஐயமென்றார்.
இந்துக்களின் தலைவனல்ல தான்
இந்தியாவின் தலைவன் என்றார்.
தீண்டாமைக்குத் தீயிட்டார்
தீராப்பெண்ணடிமைப் பேயை விரட்டி
தீயாம் நிறவெறியை எதிர்த்தார்- இத்
தீவிர உண்ணாவிரதப் போராளி.

”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தால்                                                                                                                 வெளிச்சமூட்டினார் பாரத பூமியை.
உள்ளொளி பெற கீதையை நம்பியவர்
தள்ளி வைத்தார் மது மாமிசத்தை.
உள்ளக அமைதிக்காய்க் கிழமையில்
ஒரு நாள் மௌன விரதமிருந்தார்.
தண்டியுப்பு யாத்திரையால் அரசின்
தனி ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தார்.

ஆடம்பர ஆடையொதுக்கிக் கதரணிந்தார்.
அரிய குடிசைக் கைத்தொழிலானது கதர்.
இல்லறத் துணைவி கஸ்தூரிபாய்
இனிய மகன்கள் நால்வர்
இந்திய நவீன சுதந்திரச் சிற்பியை
இந்தியத் தலைநகர்ப் பிரார்த்தனை  மன்றிலில்
இரக்கமற்றுச் சுட்டான் நாதூராம் கோட்சே.
இறைபதமடைந்தார் காந்தி 30.1.1948ல்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
2-10-2006.

( பதிவுகள்.கொம் இணையத்தளம், ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றில் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகிய கவிதை இது )

In Eluthu.com web site :-    http://eluthu.com/kavithai/55470.html

                             


 

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  அக் 03, 2010 @ 10:46:27

  தூக்கிய ஆயுதம் தரமானதால் – அவர்
  தோற்றதில்லை மனித மனங்களில்
  வெற்றிபெற நினக்கும் ஒவ்வொரு மனிதனும்
  மகாத்மாவின் அமைதியுத்தத்தை அணுவணுவாகக் கற்கவேண்டும். அருமையான அவசியமான காலத்துக்கேற்ற ஆக்கம். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: