3. அ, கர வரிசையில் ” இ ”

 

 

 

” இ ” கர  வரி.

 

இயல்வது கரவேல்.
(இயல்வது – கொடுக்கக்கூடிய பொருளை
கரவேல் – ஒளியாதே.  (ஒளியாமல் கொடு).

1. இகத்தாளம் (கிண்டல், ஏளனம்.) செய்யாதே.
2. இகழ்தல் பண்பல்ல.
3. இக்கட்டில் கை கொடு.
4. இங்கிதமாய்ப் பேசிப் பழகு.
5. இசை இன்பம் தரும்.
6. இசைகேடின்றி இசை பயில்.
7. இஞ்சியையும் உணவில் சேர்.
8. இடம்பம் (ஆடம்பரம்) அவசியமற்றது.
9. இடர் துடை.
10. இடை மெலி.
11. இடைவேளையுடன் வேலை செய்.
12. இம்மையில் நன்மை செய்.
13. இயற்கையாம் அற்புதம் ரசி.
14. இரக்க குணம் கொள்.
15. இரத்தப் பலி வேண்டாம்.
16. இரகசியம் பாதுகாத்திடு.
17. இரசித்தல் இன்பம்.
18. இரண்டகம் (துரோகம், வஞ்சகம்) விலக்கு.
19. இரத்தலின்றி உழைத்திடு.
20. இரவி ஒளி உயிர்ச்சத்து.
21. இழுக்காறு (தீயொழுக்கம், தீநெறி) வேண்டாம்.
22. இலட்சியம் கொண்டு முன்னேறு.
23. இலயம் இசைக்கு வேர்.
24. இலைக் கறி உணவில் சேர்.
25. இளமையில் இயன்ற நல்லது செய்.
26. இளநீர் உடலுக்கு ஆரோக்கியம்.
27. இன்னா செய்யாது வாழ்.
28. இன்சொல் பேசல் ஆனந்தம்.
29. இன்னிசை மனஅமைதிக்கு மருந்து.
30. இறைமொழி (வேதம்) படியுங்கள்.
               
                  ———————————-

‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற எனது இரண்டாவது நூலில் அ கரம் ஆ கரம் ஆகிய இரு அங்கமும் பிற்பகுதி சிறுவர் பாடலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அ, ஆ, இ கர வரிகள் யேர்மனியிலிருந்து வெளிவரும் ‘மண்’ சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது.

                            

                           

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஜெகதீஸ்வரன்
  ஜூலை 27, 2010 @ 14:57:52

  அருமை!@.

  தொடரட்டும் உந்தன் பணிகள்!.

  வாழ்க தமிழ்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: