15. வளர்பிறையே!

  

வளர்பிறையே!

 

வளர்பிறையே!   வண்ணநிலவே!
தளர்நடையேன்   தங்கமலரே!
தளம் பாவ  புவியினிலே
உளம் நோக  முயல்கிறோம்.
வளர்ந்த்தினால்  பெரும் வதையே.
தளர்ந்திடிலோ  பெரும் தோல்வியே.

சிலர் வாழ்வில்  நடிப்பினையே
பலர் மெச்சக் கொடுக்கிறார்,
புகழ் தூவிச் சுகிக்கின்றார்,
மகிழ்வாய்க் கை இணைக்கின்றார்.
இகழ்வான இந் நிலையாலே
தளர் நடையா  வளர்பிறையே!

ஊருக்கு உபதேசம் தனக்கில்லை.
பேருக்கு பொது வாழ்க்கையம்மா!
பாருக்குள்ளுதித்த பெரும் கேடிகள்
சீருக்கு  வாழுமொரு வாழ்க்கையிது.
யாருக்கு மொழிந்திட இவர் நடிப்பை!
நேருக்குக் கூறிட நிலையில்லையம்மா!

அன்பு வழிகின்ற புன்னகை
பண்பு பொங்கும் வார்த்தைகள்
என்ன விலையும் பேசலாம்.
பசுத்தோல் போர்த்திய உள்ளுருவை
பசுவென எண்ணி மாய்கிறோம்.
சங்கைக்கேடான வியாபார விதி!
அங்காடி வாழ்வாச்சே வளர்பிறையே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

(  23-1 2001ல் ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும், 26-22002ல் இலண்டன் தமிழ் வானொலியிலும், தை மாதம் 2003ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.)

Samme katu another poem:-   https://kovaikkavi.wordpress.com/2010/07/11/15-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-2/

 

                             

 

3 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. சக்தி சக்திதாசன்
    ஜூன் 10, 2011 @ 19:03:42

    அன்பின் சகோதரி வேதா,
    அருமையான் அறிவுரைகளுடன், இகத்தின் உண்மை நிலையை அழகாய் விளித்திடும் கவிதையிது. தாங்கி வரும் வரிகளும் வாயினிக்க சுரந்திடும்.
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 11, 2011 @ 07:43:48

      உங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி. மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்தைத் தாருங்கள். மிக்க மகிழ்வடைகிறேன். இறை ஆசி உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. கோவை கவி
    மே 28, 2018 @ 09:48:52

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: