13. விலையற்ற உயிர்கள்!……

  

விலையற்ற உயிர்கள்!……

தீப்பெட்டியும் இல்லையாம் ஊரில்!
தீ உருவாக்க என் செய்வார்கள்?.
தீய்ந்த காலமாய் அவர்கள்…
தீ உருவாக்குவார்களா?…..
கல்லும் கல்லும் தேய்த்து…
காய்ந்த சருகில் தீப்பிடிக்கக்….
காரியம் ஆற்றுவாரோ?…சிந்தனை…
கணனி யுகத்திலும் இந்நிலை!

தீய்ந்த மனதின் ஆணவம்
தீராத நாட்டுப் பிரச்சனை.
தீயான ஆணவம் அழிவு!…ஆக்கமல்ல!
தீர்க்கசான்று ஆதிச் சரித்திரங்கள்.
தீமையிலின்று அலையும் மக்கள்
தீர்வு கட்டாந் தரையாகுமோ?
உல்லாச சொர்க்கபுரி நாட்டில்
மல்லாடி அழியுமுயிர்கள்…ஐயகோ!

சிறு விட்டுக் கொடுப்பு
மறு பக்கத் திறப்பு.
பெறும் அற்புதச் சிறப்பு.
அறுவடை பல்லுயிர் நிலைப்பு.
வில்லாடும் வேந்தரெல்லாம்
மல்லாடிக் களைக்காரோ?
அல்லாடும் மனம் இங்கு…
சொல்லாடும் மனங்களும்…இங்கு..

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்..
26.9.2006.

( அப்பால தமிழ்.கொம் இணையத் தளத்தில் பிரசுரமானது.

 

                        

12. மயக்கம்.

122773706_9lglvuor  

(படம்.நன்றி – ஆனந்த விகடன்.)

மயக்கம்.

பெற்றவர் கலாச்சாரம் ஒருவர்
பேச்சிலும் மூச்சிலுமானாலும்,
பச்சையாய்க் கண்பறிக்கிறது
புலம் பெயர் கலாச்சாரம்.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்
வாடித் தெரிவது எம் கலாச்சாரம்.
தேடி ஆராய்ந்தால் அங்கு
கூடிய நன்மைகள் புரியும்.

உலக மாற்றத்தோடு நவீனமாய்
உருளும் புலம்பெயர் கலாச்சாரம்
உல்லாசமாய் அனைவரையும் தன்வசம்
இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக் கலாச்சாரத்தில்.
உலகமே மாறுகிறது நம்
வழமைகளும் பல மாறுகிறது.

கலாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
கலப்பையால் உழுதிடும் நிலைதான்.
ஆழப்போகும் வேரான தமிழ், எம்
மூலமொழி – இன அடையாளம்.
காலம், இட மாற்றத்தோடு ஆகும்
கலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.
நிலாவெட்டும் காலத்திலும் இளையவர்
சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் இரண்டு தடவை ஒலிபரப்பானது.)

In Eluthu.com Web site :-     http://eluthu.com/kavithai/54898.html

 

                 

 

 

 

11. இடையிலே இடையிலே….

 

இடையிலே  இடையிலே.. 

 

கடையிலே உள்ள காட்சிப் பொருளாய்
இடையிலே இடையிலே உடையை இறக்கி
கொடையிலே அந்தக் கர்ணனாய் உடலைப்
படையலே செய்கிறார் படு அசிங்கம்.

இடையிலே களவாக இடிப்பது, கிள்ளுவது
இடைஞ்சலான ஒரு பாலியல் இம்சை!
இலவசமாய்ப் பேருந்துப் பயணத்தில் சில
இளசுகள், முதியோரின் இழிவான இயக்கம்!

கடையிலேந்திய சுருளில் தீக் கொழுந்து.
இடையில் விழாக்களில் எழுந்து நடந்து
நடையில் நின்று புகை இழுப்பது
கொடையல்ல, ஆயுளைக் குறுக்கும் செயல்.

இடையிலே இடையிலே கணனியால் எழுந்து
இடையசைத்து நீர் பருகி நடந்து
புடைத்துத் திரளும் தசைகளை நெகிழ்த்தலாம்.
எடையும் கூடாது எளிதாய் இயங்கலாம்.

இடையிலே இடையிலே நகைச்சுவை விருந்து
குடை விரிக்கும் ஆரோக்கிய மருந்து.
இடைக்கிடை தொழிலில் இடைவேளை எடுத்து
இடையைப் பலமாக்கல் முதுகுக்கு உரம்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1 -7 -2006.

(இக் கவிதை இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும் ஒலிபரப்பானது.)

 

                            

அனுபவம். அங்கம். 2

வாடிவீட்டில் எமது அறைக்குச் சென்று பொருட்களை ஒழுங்கு படுத்திவிட்டு பயண அலுப்புத் தீரக் குளித்தோம். தமிழ் கடைகள் எந்தப் பக்கம் இருக்கிறது, எப்படிப் போவது என்று வாடிவீட்டு வழிகாட்டிப் பையனிடம் கீழே இறங்கி வந்து விசாரித்தோம். லிட்டில் இந்தியா போகும் பேருந்து இலக்கம் 106 எனக் கூறி வழிகளையும் கூறி      ‘ நீங்கள் திரும்பி வரும் போது டக்ஸியில் வந்திடுங்கள், பேருந்தில் வருவது சிரமம்’   என்றார். ஏன் அப்படிக் கூறினார் என புரியாது, சரியென்று கூறி பேருந்தில் பயணித்த போதும் ஏன் அப்படிக் கூறினார் என்று குளம்பியபடியே சென்றோம். அங்கு பேருந்திற்கு மாற்றிய சில்லறை நாணயங்களையே கணக்காகப் போட வேண்டுமாம். சாரதியிடம் போகும் இடத்தைக் கூறும் போது, உரிய பணத்தின் கணக்கைக் கூறுகிறார். இதை யந்திரத்தில் போடும் போது, யந்திரம் அனுமதிச் சீட்டைத் தருகிறது. சீசன் அட்டைகள் என்பவை வேறு விதமாக. பேருந்தில் செல்லும் போதும், காரில் செல்லும் போதும் வேறு வேறு வித அனுபவங்கள் தான். இவைகளைப் பெறுவது தானே சுற்றுலா!.

நாம் தங்கியிருந்த  வாடிவீட்டிலிருந்து எதற்கெடுத்தாலும் இந்தப் பக்கம் தான் நாம் ஓடி வர வேண்டிய தேவை உள்ளது என்பது விளங்கியதால், இந்த வட்டாரத்திலேயே தங்கிட ஒரு இடம்  தேடினால் என்ன என்று தோன்றியது. லிட்டில் இந்தியா, தேக்கா சந்தை, செரங்கூன் வீதிகளுக்குக் கிட்டவாக பெலிலோஸ் ஒழுங்கையில் ஒரு இடத்தைப் பார்த்துக் கேட்டு வைத்தோம். இது மிக உல்லாச வாடி வீடு அல்ல நடுத்தரமானது தான். நாம் தான் பகல் முழுக்கச் சுற்றுகிறோம், இரவில் மட்டும் குளித்துத் தாங்கிடத் தானே தேவை ஒரு இடம். நாம் சுற்றிச் சுற்றி இரவு உணவையும் முடித்துக் கொண்டு, பையன் கூறியது போல டாக்சியில் செல்லாமல், பேருந்திலேயே வாடி வீட்டிற்குச் சென்றோம். அது என்னென்றால் சிங்கப்பூர் பேருந்துப் பாதைகள் ஒரு வழிப்பாதை முறையைக் கொண்டது. போன பாதையால் திரும்பி வராது என்பதால் ஊருக்குப் புதிதானவர்களுக்குக் குளப்பமாக இருக்கும் என்றே அந்த வழிகாட்டி அப்படிக் கூறியுள்ளான் என்றது புரிந்தது. நாமோ ‘சவாலே சமாளி’ என்று ஒருபடியாக விசாரித்துத் தெரிந்து வாடி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வழிகாட்டிதான் எம்மைத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.அந்த வாடி வீடு பகல் 12.00 மணியுடன் கணக்குத் தீர்க்கும் முறையாதலால், அன்று இரவு நிம்மதியாகப் படுத்துத் தூங்கி, அடுத்த நாள் ஆறுதலாக பகல் 12.00 மணியுடன் அந்த வாடி வீட்டுக் கணக்கை முடித்து பெலிலோஸ் தெருவுக்கு மாறினோம். பேருந்தில் போவதானால் ஒன்றரை வெள்ளிக்கும் குறைவான பணச் செலவு. வாடகை வாகனத்திற்குப் பத்து வெள்ளி எடுத்தது, மிக அதிகம் தான். ஆனால் பாரமான பொதிகளுடன் ஒன்றும் செய்ய முடியாது. அது தவிர வாடிவீட்டு வாசலில் தூரப் பயணத்திற்குக் காத்திருக்கும் வாடகை வாகனம், இந்தக் கிட்டப் பயணத்திற்கு வந்ததே மிகப் பெரிது என மகிழ்ந்தோம்.

இங்கு மீட்டர் போடாது தான் பல வாகனங்கள் ஓடுகின்றன. அங்கு ஒவ்வொரு தடவையும் பொருட்கள் வாங்கும் போதும், வாடகை வாகனத்திற்குப் பணம் கொடுக்கும் போதும், நாம் ஏமாறுகிறோமா? அல்லது அவர்கள் எம்மை ஏமாற்றுகிறார்களா? இது நியாயமா? அநியாயமா? என்ற கேள்விகள் எம்முள் எழுந்த வண்ணமே இருந்தது. இரண்டு யேர்மனிய உல்லாசப் பயணிகளுடன் கதைத்த போது உல்லாசப் பயணம் திகிலானதும், மனச் சித்திரவதையும் கொண்டது (ரூறிசம் திறில்லும், மென்ரல் டோச்சரும் கொண்டது) என்று கூறிய கூற்றுச் சரியாகவே இருந்தது. முன்னைய கிராண்ட் ஹோட்டலில் காலையுணவு இருந்தது. இங்கு அது இல்லாதது எனக்குக் குறையாகவே இருந்தது.  நல்ல அழகிய காட்சி வட்டமுடைய அந்த  வாடிவீட்டை விட்டு இங்க மாறியது பிள்ளைகளுக்கு  மனத்தாங்கலாக இருந்தது. ஆனால் எமக்கு இது எல்லா இடமும் சுற்றித் திரிய வசதியாக இருந்தது.

நல்ல உணவு, இச்தோனேசியன் பட்டிக் மிக மலிவு, பல தமிழர் கூடுமிடம், இரண்டு அடிக்கொரு அழகு நிலையம், இப்படிப் பல வசதிகள் இருந்தது. ‘ஆசியாவின் சிறந்த உணவுத் தலைநகரம் சிங்கப்பூர்’ என்று வாசித்துள்ளேன். அது போல நாங்கள் ஒரு நாள் சாப்பிட்ட இடத்தில் மறுநாள் சாப்பிடவே இல்லை. அத்தனை வித உணவு வகைகளும் அங்கு பெற முடிந்தது. இனி சிங்கப்பூர் பற்றிச் சிறிது பார்ப்போம்.

சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட அன்றைய  ஸ்ரீவிஐய இராச்சியமும், யாவா தீவை மையமாகக் கொண்ட மஐபகிட் ராச்சியமும் ‘இன்றைய இந்தோனேசியா’ வாகும். மலேயா கட்டுக் கதையின் படி சுமத்திரா தீவு இராசகுமாரன் ரிமசெக் எனுமிடத்தில் ஒரு சிங்கத்தைக் கண்டார். அது நல்ல சகுனமெனக் கருதி சிங்கபுரா, லயன் சிற்றியைக் கண்டுபிடித்தார். ரிமசெக் எனும் பழைய பெயர் கொண்ட சிங்கபுரா, சுமத்திரா தீவின் ஸ்ரீவிஐய ராச்சியத்தின் மிகப் பலம் வாய்ந்த வியாபார ஏற்றுமதித் துறைமுகமாக அன்று விளங்கியது. 13ம் நூற்றாண்டு நடுப்பகுதியின் முன்னர், இது, யாவாதீவு மஐபகிட் இராச்சியத்திடம் அடிமையாக இருந்தது இன்னொரு கதை. லுயன் சிற்றி- சிங்கபுரா எனும் பெயர் கொண்ட போதும், இங்கு சிங்கங்கள் இருக்கவில்லை. காலத்திற்குக் காலம் அரசுகள் மாறி, நெப்போலியனின் யுத்த காலத்தில் ஹொலாண்ட் நாடு பிரான்சிடம் தோற்ற போது, பிரிட்டன் யாவா நாட்டை ஆண்டது. அப்பொழுது 1811லிருந்து 1816ல் அங்கு, யாவா பிரித்தானிய அரசில் ஸ்ரம்ஃபோட் றஃபெல்ஸ் மகாதேசாதிபதி (கவர்னர் ஜெனரல்) ஆக இருந்தார். பின்னர் பிரான்ஸ் நாடு தோற்கடிக்கப் பட்டு அரசு மாற்றங்கள் நடந்த போது 29-1-1819ல் றஃபெல்ஸ் சிங்கப்பூருக்கு வந்து, சிங்கப்பூர் உள்ளுர் ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து சிறிது சிறிதாக சிங்கப்பூரைக் கட்டியெழுப்பத் தொடங்கினார். 1823ல் ஒரு மலையைச் சமன் படுத்தி றஃபெல்ஸ் ப்ளேசையும் உருவாக்கி, சிங்கப்பூர் நகரை அழகுற அமைத்து நாட்டைவிட்டு வெளியேறினார். றஃபெல்ஸ் ஹோட்டல் இன்றும் அங்கு றஃபெல்ஸ் ப்ளேஸ் போல பிரபலமானது.

சிங்கப்பூர் சிங்கார நகர் 42 கிலோ மீட்டர் நீளமும் 23கிலோ மீட்டர்அகலமும் கொண்டது. சுற்றி வர 58க்கும் மேலதிகமான சிறு சிறு தீவுகளைக் கொண்டது. அவையெல்லாமாக 646 சதுர மீட்டராகும். புலாயு ரிகொங் எனும் தீவு 24.4 சதுர மீட்டராகும். புலயு யுபின் தீவு 10.2 சதுர மீட்டரும் சென்ரோசா எனும் தீவு 3.3சதுர மீட்டராகும். இந்த சென்ரோசா எனும் விநோத தீவு (ஃபன் ஐலண்ட்) பற்றிப் பின்னர் பார்ப்போம். சிங்கப்பூர்  1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி சுதந்திரம் அடைந்தது. இங்கு முறையே சீன மக்கள், மலே இனத்தவர், இந்தியர்கள் என 3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூரின் இச் சிறு விபரத்துடன் என் அனுபவத்திற்கு வருவோம்.

(முதல் அங்கத்தில் வந்த 3 படங்களும் சங்கி விமான நிலையத்தினுள்ளும், ஓச்சாட் தெருவையும் காட்டுகிறது. இந்த அங்கத்துப்படங்கள் முதலாவது வாடிவீட்டு யன்னலூடான காட்சி.  2வது வாடிவீட்டு வாசலும் முன் தெருவும் தெரிகிறது.)
அடுத்த அங்கத்தில் சந்திப்போம்.—-
 

பயணக்கட்டுரை. 1

மேலும்

10.நல்லாங்கு வாழ….

 

நல்லாங்கு வாழ….

‘அ’  னா  என்றால் அன்பு.
‘ஆ’ வன்னா என்றால் ஆதரவு.
‘இ’ னா என்றால்  இசைவு.
‘ஈ’ யன்னா தானே ஈசனுக்கு.

அறிவு மண்ணும் தமிழையூட்டு!
அமைதி நண்ணும் அன்பைக்காட்டு!
அடக்க எண்ணும் நட்பையோட்டு!
இணங்கி வாழும் தகைமையூட்டு!

கனிவில் முனிவில் இன்மொழியூட்டு!
கருவாய் தன்னம்பிக்கையும் நாட்டு!
கண்ணியம் பேணும் கருத்தை நீட்டு!
கலைகளை உன்னுள்ளே நுழைய விடு!.

தொல்லுலகில் பக்திநெறி அருங்கலம்.
வல்லுலகில் கடமைநெறி பெருங்கலம்.
நல்லுலகில் எல்லவனாய் செல்வாக்குடன்
பல்லாண்டு நல்லாங்கு வாழ்ந்திடு!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-7-1999.

(டென்மார்க் ‘கற்பகம்’சஞ்சிகை

யிலும், ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும் ஒலிபரப்பானது.)

In Eluthu.com  web site:-      http://eluthu.com/kavithai/54458.html

                                 
 

9. கிறகம்பெல் தந்த உறவு.

 

கிறகம்பெல் தந்த உறவு மேலும்

8. மனித நேயக் கிரீடம் அணியுங்கள்.

 

                                                                      

 

குழந்தைச் செல்வங்கள் குமுத மலர்க் கொத்துகள்.
குடும்ப விளக்குகள் குளிர் தென்றல் அலைகள்.
உவகைமிகு சர்வதேச உயிர்ச்சிலைகள் மழலைகள்.
உயிர் அதிசயங்கள் உணர்வுக் காவியங்கள்.
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.

உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.
மனவாதை இருளின் ஒளி தேவதைகளின்
மனங்கவர் புன்னகை, மழைமின்னல கீற்றுகள்.
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.

பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.

கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்   

10-7-2006.

( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானெலிகளில் ஒலிபரப்பானது.

இக்கவிதை எனது 3வது நூலிலும் -உணர்வுப்புக்களில்- இடம் பெற்றது.)

Samme katu another  poem :-    https://kovaikkavi.wordpress.com/2010/07/31/26-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/

*

 

 

                             

5. காற்றே!….காற்றே!

 

காற்றே!….காற்றே!

 

வேய்ங்குழலூடாக இசையாய்
பாய்ந்திடும் காற்றே நீ
ஓய்ந்திட்டால் உலகில்லையே!

ஓசை, சுகந்தம் காற்றால்.
ஆசை, நாசி, செவியால்,
ஆச்சரியம் அப்பாலும் வாயுவால்.

பஞ்சபூதத்தில் காற்று
மஞ்சு கலைத்து மழையாக்கும்.
அஞ்சும் கருத்து – பிசாசு.

நிலை புரட்டும் நிகரற்றாய்.
அலைக்கு விலங்காகிறாய்.
அலைக்கு விடுதலையுமிடுவாய்.

ஆற்றங்கரைக் காற்றே!
ஊற்றாகிறாய் அழகுக் கவிதைக்கு.
ஆற்றலற்றாயே நிலாவில் நீ!

ஊடகக்காற்றில் அளவோடு
ஊடாடி வாழ்வையென்றும்
ஆடகமாக்கல் ஆரோக்கியம்.

ஓங்கிடும் வன்முறைக்காற்றால்
வீங்கிடும் தமிழர் வேதனை
நீங்கிட வீசட்டும் சமாதானக்காற்று.
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
8-10-2006.

(இக் கவிதை ரி.ஆர்.ரி தமிழ்அலை, தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானவை.)

In Muthukamalam web site:-   http://www.muthukamalam.com/verse/p847.html

 

                                

 

7. சிறகுகள் வேண்டும்.

 

சிறகுகள் வேண்டும்.

 

அறிவின் கர்ப்பத்தால் அர்த்த பதங்களில்
வீரியக் கவிதைச் சுடர் பிறக்க
சூரியனாக மந்திரச் சிறகு வேண்டும்.
விரியும் அதன் சுழற்சியில் கதமாய்
எரியும் போரழிந்து குண்டுதுளைத்த                                                 
குருதித் தடம் அழிய வேண்டும்.

தண்ணொளி நிலவாய், காற்றாய், கதிராய்
மண்ணிலே உயர சிறகுகள் பெற்று
கண்ணிலே தோல்வி காணா இவைகளாய்
பின்னோக்கிய காலங்களை இழுத்து மொத்தமாய்
மண்ணாகிப் போகாத அறிவுச் செல்வத்தை
பண்ணாகப் பெற ஞானச் சிறகுகள் வேண்டும்.

சட்டம் போட்டுச் சிக்காத சுதந்திர
வட்ட நிலவாய்த் தரணியின் மேல்
முட்டும் அநியாயங்கள் கண்டும் பொறுமையாய்
பட்டுத் தண்ணொளி வீசும் நிலவாய்
எட்டாத தோல்வி எண்ணாத நிலவாய்
பட்டொளி விரிக்கச் சிறகுகள் வேண்டும்.

உலகத்துக் கடலலைச் சங்கீதம்,
உன்னத பூங்காக்கள், நற் சுகந்தம்,
உயர் மலை உச்சி, இயற்கையை
உணர்ந்து அனுபவித்த ரசனையில் பிறக்கும்
உயர் வெற்றிக் கவிதைகள் வரைய
உலவும் காற்றாகச் சிறகுகள் வேண்டும்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-9-2006

 

                                

Previous Older Entries Next Newer Entries