1. இலங்கையின் பிரபலம் அமரர் முல்லையூரான்.

 

8-8-2010.

 

தகைசார்  முல்லையூரான்.

ன்னைக் கவர்ந்த எழுத்தாளன்.
எண்ணக் கருவூலம் பெரிது.
சின்ன இலங்கையின் முத்து
டென்மார்க்கில் அவன் வலம்புரி.
இன்தமிழ் செய்ய உதித்தவன்.
இயற்பெயர் முருகேசு சிவராசா.
இலங்கை வர்த்தகப் பட்டதாரி.
இரசனை மிகு ஓவியனிவன்.
¤     ¤     ¤
மயக்கவி, வற்றாப்பளை வசந்தம்.
இலங்கையில் ஆசிரியர். சித்திரை
இருபத்தொன்றில் இறைவனடி சேர்ந்தார்.
இன் தமிழத்  தளபதியின் சாதனையாய்
அருமை நாவல்கள், குங்குமம், சேலை.
‘அக்கினிக் குஞ்சுகள்’ யாழில் சஞ்சிகை.
‘அருவுருவம்’ வானொலி இசைவடிவு.
ஆக்கிய கவிதை நூல்கள், போர்க்காற்று, நிர்வாணவிழிகள்.
¤     ¤     ¤
சிறுகதைத் தொகுப்புகள்,புதிய அலைகள்,

ஈழம் எழுந்து வருகிறது 

 திறனாய்வுக கட்டுரைகள்,
 ‘கவிதை காணல்’ முதற் தமிழ்
வீடியோ வடிவக் கர்த்தா.
‘காகம்’ சஞ்சிகை டென்மார்க்கிலும்,
களமிறக்கினான் ஐம்பத்தியொரு வயதினுள்.
கற்பகச் சாதனையாய் நிலைக்குமிவை.
¤     ¤     ¤ 
வித்தாரக் கவிஞனை வெகுவாக
விழாக்களில் டென்மார்க்கில் அறிந்தோம்.
வசப்படுத்தி வளைத்த தமிழை,
வசீகரமாய் வெளிவிடுவான் ஒலிவாங்கியால்.
வாடி நிற்கிறோம் அவனிழப்பால்.
வானுலகேகிய அவனாத்மா சாந்தியடையட்டும்.!
வாழுமவன் ஆக்கங்கள் நீடூழி!
வாழுமவன் பெயரும் புகழும்!
       சாந்தி!

24-4-06

(வரது ஓராண்டு அஞ்சலி நிகழ்வு ஐ.பி.சி வானொலியில், ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

———————

முல்லையூரானே!….
(இவர் நோய் வாய்ப்பட்ட போது)

மிழ் செய்ய வந்த மகனிவன்,
தமிழ் ஈழ முத்து இவன்.
எத்தனை திறமைகள் கொண்டவன்!
மொத்தமும் உலகுக்குக் கொடுக்கமுன்னே
மெத்தையில் ஓய்வது நியாயமன்று வா!
சத்தமிட்டு அழைக்கிறோம் சகோதரனே!க்காகத் துயரில்
அழுந்துவோரை மகிழ்விக்க வா!

ழுந்த வா! உன க்காகத் துயரில்
அழுந்துவோரை மகிழ்விக்க வா!
அற்குதம் நடக்க வேண்டும் வா!
பொற்பத இறையுமிதைப் புரிந்து கொண்டு
கற்பக தருவான உன் தமிழ்க்
கற்பனைகள் உயிர்த்திட வா!

லைகள் ஓய்வதில்லை உன்
தமிழும் ஓயவேண்டாம்!
துன்பங்கள் தோற்றிடட்டும்!
இன்பங்கள் வென்றிடட்டும்!
தில்லையம்பலத்தான் திகைக்க
தமிழை நிலைநிறுத்த வா!

திராணி பெற்றிட கொஞ்சம் கொஞ்சம்
தியானம் செய்திடு வா! நண்பனே எழுந்து வா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2001.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: