1. உன் பேர் சொல்ல ஆசை தான்…..

  

 

( பாடலில்  பிறந்த கவிதை….)

தங்கச் சிலை ஒன்று
தன் பெயர் கூறியது.
காந்த அலை ஒன்று
கதம்பமாய் நெருங்கியது.
அந்தக் கலை நின்று
எனை மயங்க வைத்தது.
சொந்த நிலை தொன்று
தொட்ட அலர் நிலையானது.

இதழோடு இதழ் சேர்த்துன்
இனிய பெயர் இசைத்தேன்.
எழுதுகோலைக் கண்டதுமுன்
நாமம், முழுக்காலமும் வரைந்தேன்.
அலையாய் நெளிந்த கூந்தலினால்
அலையும் மனதைச் சுருட்டினாய்.
நிலவுமுகத்தை நீவும் கார்குழல்
குலவித் தழுவ உன்னெழில் உயரும்.

குண்டுமல்லிகைப் பூச்சரமே!
குமுதமுல்லை மலர்ச்சரமே!
ஊசிமல்லிகை மணமாய்
ஊக்கம்தந்து மகிழ்வூட்டுகிறாய்.
ஊடலென்றும் கூடலென்றும்
ஊருணியாக உவக்கிறாய்.
உன்பெயர்கூறுவேன் ஆசையாய்

உயிரோடு உயராவோம் காதலால்   .

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
20-3-2000.
( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

In Eluthu.com web site:-     http://eluthu.com/kavithai/56949.html

http://youtu.be/_638hEPlKd0 

                        

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

 1. கோவை கவி
  மே 21, 2014 @ 05:50:54

  In FB:- 21-5-2014
  இலக்கியன் விவேக், Loganathan Ratnam:Si Va and Karthikeya Singaravelu…likes this.

  Si Va:-
  சாலச் சிறந்த வரிகள்…

  ஒவ்வாமை: விளம்பரக் கையொப்பம்…

  Vetha ELangathilakam:-
  ஒவ்வாமை: விளம்பரக் கையொப்பம்… – புரியவில்லையே!….
  .
  Si Va:-
  Ungal perumai sollum vithamaaga ungal peyar kuipitayhu irughiyil

  Vetha ELangathilakam:-
  நன்றி அது இணையத் தொடுப்பு.
  (அப்படியே காப்பியடித்துப் போட்டது தானே…)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: