2. இரசவாதம் செய்கிறாய்

 

இரசவாதம் செய்கிறாய்

மன்மதப் பேரெழிலன்!
இன்ப ஒளி விழியால்
அன்பதை ஊற்றி
இன்னல் களைகிறாய்!
என்றும் அன்பு மொழியால்
வென்றிடும் அமைதி வழியால்
நன்றாய் என்னுள்ளத்தில்
தென்றலாய் நிற்கிறாய்!
 
எந்தன் அகத்தில்
சிந்தனைச் சுதந்திர
சந்தனம் ஊற்றுகிறாய்!
சந்திர வதனத்தால்
நந்தவன அழகிட்டு
தந்தனத்தோம் இசைக்கும்
மந்திரக்காரன் நீ!
வந்தனம் உன்னுறவுக்கு!

மொழியோடு விளையாட
வழி தருகிறாய்!
இழிவற்ற நட்பினால்
இதம் தந்து இகத்தில்
இணையில்லாத் தோழனாய்
இலக்கணம் வகுக்கிறாய்!
இயல்பான அன்புறவால்
இரசவாதம் செய்கிறாய்!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-4-2006.

 

                       

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜூன் 21, 2014 @ 07:35:37

  Rajini Sri :-
  அன்பதை ஊற்றி
  இன்னல் களைகிறாய்!
  அருமை

  ..Vetha ELangathilakam:-
  nanry sis…

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 21, 2014 @ 10:30:53

  கவிதையின் காதலன்:-

  மொழியோடு விளையாட
  வழி தருகிறாய்!
  இழிவற்ற நட்பினால்
  இதம் தந்து இகத்தில்
  இணையில்லாத் தோழனாய்
  இலக்கணம் வகுக்கிறாய்!

  Vetha ELangathilakam:-
  Mikka nanry.

  மறுமொழி

 3. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஜூலை 21, 2015 @ 21:37:49

  மிக மிக அருமை

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 15:18:11

  மிக மகிழ்வு தங்கள் வருகை கருத்திற்கு.
  அன்புடன் நன்றி உரித்தாகுக. Grace…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: