12. அலைகள் பத்தாவது அகவை வாழ்த்துகள்.

அலைகளை வாழ்த்தும் கலைகளின் பக்கங்கங்கள்..

March 27, 2010

அலைகள் பத்தாவது அகவையை வாழ்த்தி நம் கவிஞர்கள் புனையும் கவிதைகளில் டென்மார்க்கின் சிறந்த பெண் கவிஞர் திருமதி வேதா இலங்காதிலகத்தின் கவிதை..

அலைகள் வலைப்பூவுக்கு அகவை பத்து.
தாய்த் தமிழில் நடைபயிலும்
தரமான இணைய வலைப்பூ
அலைகள் டொற் கொம் ஊடகம்.
கலைகள் பல நிறைத்து
விலையற்றதாக எமக்குத் தந்திட
வலையை விரித்தின்று காத்திரமாய்
நிலையாகிறது பத்து ஆண்டுகள்!
தலை வணங்குகிறோம் நற்பணிக்கு.

நயன் ஈந்து நல்விளைவைத் தோற்ற,
அருமை உடைத்தென்று இணையத்தை
விரும்பிக் கையில் எடுத்தீர்!
இணையத் தள நிர்வாகம் ஒன்றும்
இலேசான முனைப்பு அல்ல.
இணைப் பணிக் குழுவினருக்கும்
கி.செ.துரையவர்களுக்கும் பொன்னாடைக்குப்
பதில், என் பா, ஆடை போர்த்துகிறேன்.

சமூகத்தின் மூட எண்ணங்கள்,
அமோக வரட்டுப் பிடிவாதங்களைத்
தகர்க்கும் சுத்தியலாக ஊடகங்கள்.
மொழி பண்பாட்டைக் காக்கும்
அழிவற்ற பாதையில் என்றும்
விழிவிரித்து ஊடகங்கள் பயணிக்கிறது.
அலைகளும் இவ்வழி, அனைவருள்ளத்திலும்
அழியாத சுவடு பதிக்கட்டும்!

மழைக்கு எழும்பும் காளான்களென
முளைக்கிறதின்று இணைய சஞ்சிகைகள்.
கிளைவிட முன்னர் காணாது
ஒழிகின்ற காலத்தில், அலைகள்
எழிலாக எம்மாவலைத் தூண்டி,
அறிவுடன், ஆர்வமாய் இயங்குகிறது.
அலைகள் ஒரு தமிழனுடையதென்பதில்
அலைமோதுகிறது பெருமை எமக்கு.

நன்மார்க்கப் பணியிலான இவ்வலைப்பூ
டென்மார்க்கில் பிறப்பு! எமக்கும் மதிப்பு!
என்ன இல்லை இதன் பக்கங்களில்!
உப்பிலிருந்து விண்கலம் வரை
உலாவும் அத்தனை சங்கதியும்,
ஊருலகச் செய்தி, சினிமாவோடு,
என்கவிதையும் இடையிடையே  நின்றாடும்
களமிது! நீ வென்றாடும் பத்தாண்டிது!

இரண்டாயிரத்துப் பத்து பங்குனியில்
இன்று விழாக் காணும் அலைகள்
நிலைத்து வளர்ந்து கிளைகள், விழுது
விட்டு, வெகுமிடுக்காய்க்  கோலோச்சட்டும்!
மக்களாதரவு பெருகட்டும்! நாம் இன்பமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறோம். அலைகள்
நிலைத்து நீண்டு வாழ்க! வாழ்கவே!

 

அன்புடன் வேதா. இலங்காதிலகம் குடும்பத்தினர்
ஓகுஸ், டென்மார்க்.
25-03-2010.

 

http://www.alaikal.com/news/?p=34904#more-34904

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sravani
  பிப் 05, 2012 @ 05:54:45

  சகோ வேதா ,
  வாழ்த்துக்கவியும் , அலைகள் வலையும்
  மிக அருமை. பகிர்விற்கு நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: