1. முதலாவது நூல்.

(எனது மூன்று நூல்களும் நூலகம்.ஓர்க்   இணையத்தளத்தில் மின் நூல்களாகப் பார்க்கலாம்.)

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

ன் பாட்டுக்கு நான் வானொலிக்குக் கவிதைகள் எழுதி, காகம், கற்பகம், அரும்பு, சஞ்சீவி ஆகிய டென்மார்க் சஞ்சிகைகளுக்கு கதை, சிறு கட்டுரைகளும் எழுதியபடி இருந்தேன். ஒரு விழாவில் அமரரான இலங்கைப் பிரபல எழுத்தாளர் முருகேசு சிவரா சா என்ற முல்லையூரானுடன் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. ஏன் சகோதரி நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதினால் என்ன என்று கேட்டு, புத்தகம் எப்படி அமைய வேண்டும் என்ற திட்டமும் போட்டு எம்முடன் பேசினார்.

தீக்குச்சி கிழித்துப் பற்ற வைத்தது போன்று இருந்தது எமக்கு.  மெல்ல மெல்ல உருவாகிய சிந்தனையில் புத்தக உருவாக்கத்திற்கு கணவர் ஒத்துளைக்க மறுத்துவிட்டார். நானாவது செய்வோம் என்று 2002ம் ஆண்டு வெளியானது வேதாவின் கவிதைகள் – 102 கவிதைகளுடன். 176 பக்கங்கள் கொண்டது. கவிதைகளை இப்படிப் பிரித்துள்ளேன்.

கில இலங்கை கம்பன் கழக திரு. இ. யெயராஐம் ,  ரி.ஆர்.ரி தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், பாரிஸ் ஈழநாடு ஆசிரியர் திரு. குகநாதன் ஆகியோர் முன்னுரைகள் எழுதியுள்ளனர்.

நூலகம் .ஓர்க் ல் மின்னூல் இணைப்பு இதோ!….

PDF    Link:-        http://noolaham.net/project/20/1931/1931.pdf 

 

In  viruba.com — This is the link:-      http://www.viruba.com/atotalbooks.aspx?id=49

 

வார்ப்பு இணையத்தளத்தில்      http://www.vaarppu.com/review.phprvw_id=48                                                                                                                     திரு அம்பலவன் புவனேந்திரனின் விமர்சனத்தை   வாசிக்கலாம். 

விமர்சனம்
வேதாவின் கவிதைகள்

 – வேதா. இலங்காதிலகம்
வேதாவின் கவிதைகள். வேதாவின் முதலாவது நூல்

ஜேர்மனியக் கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் பார்வையில்…..

மாதா பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை
வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை பூரிப்பை
ஏறபடுத்தினாலும்இ குருவை நினைத்து நன்றி கூறாமை குறையாகப் படுகிறது.

அது என்ன குரலோ
-குழலினிது குறளை ஞாபகமூட்டும கவி;தை. கண்டு கேட்டு
உணர்ந்து துய்க்கும் அனுபவம் வரிகளில் வடிகிறது. ஏல்லோரையும் ஈர்க்கும் காந்தக்
கவிதை.

சூப்பி வைரம் – புலம் பெயர் வாழ்வியலின் புதினம் சொல்லும் கவிதை.
நறுக்கான செய்தியொன்று என்றாலும்

ஒளவைப் பாட்டி
-சிறுவருக்கான எளிய நடைக் கவிதை..

யதார்த்தத்தை விட்டு கற்பனை உலகில் சஞ்சரித்திருக்கும் முகவரி தேடும்
முகங்களுக்கு அறிவுரை சொல்லும் கவிதையாக இது அமைந்திருந்தாலும அனைவரையும்
சிந்திக்கத் தூண்டியிருக்கும்.

ஆற்றங்கரையினிலே..
-பிள்ளைப் பருவத்தைப் பிழிந்து வைத்த கவிதை. அனைவர்
வாழ்விலும் அடிபட்டுப் போன நினைவுகளை நிழலாடச் செய்தாலும் நீண்ட பெருமூச்சொன்று
வெப்பமாய் வெளியேறிப் போனதெனக்கு
-ஏக்கமாய்…

திருமணம் – கவிதையில் பொதுப் பார்வையில்லாது ஒரு பக்கச் சார்பாயிருப்பது
உறுத்தலாயுள்ளது. மாற்றுக் கருத்தை முன் வைக்க விரும்பாவிடிலும்இ ஆண்களில்
குற்றச்சாட்டு ஆண்டாண்டுகளாயிருப்பது தான் திருப்தியளிக்கவில்லை. பெண்களால்
சீரளிந்த திருமணங்களும் தீட்டப்பட்டிருந்தால் முழு வெற்றியடைந்த கவிதைப்
பட்டியலில் இதுவும் சேர்ந்திருக்கும் என்பது என் எண்ணம்.

செல்வியெனும்… – ஒவ்வொரு இளம் பெண்ணின் கனவுக் களஞ்சியத்தைத் திறந்து
காட்டிய கவிதையிது.

பாலபருவப் பாதிப்பு
-மனமுறிவுகளால் துருவங்களாகிப் போகின்ற பெற்றோரால்

பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பையும் மனத்தாக்கத்தையும் விளக்கியுள்ள
உதாரணங்கள் சிறப்பு. புலம்பெயர் வாழ்வில் மலிவாகிப் போன சமாச்சாரத்தை மண்டையில்
உறைக்கக் கூறியிருப்பதற்குப் பாராட்டுகள்.

தமிழே அமுதே
-தமிழைக் காக்கவும் பிள்ளைகளுக்குத் தமிழை ஊட்டவும் அறை

கூவல் விடுகின்ற போது எனது அணியில் இணைந்துள்ள உணர்வு. இன்னும் உரத்துச்
சொல்லுங்கள்! உறைக்கச் சொல்லுங்கள்!

மாளிகைப் பிச்சைக்காரர் – இயந்திர வாழ்வின் இன்னுமொரு குறக்கு வெட்டுத்
தோற்றம். விரும்பாமலோ விரும்பியோ விளைந்த வாழ்க்கைஇ வாழ்ந்தே ஆக வேண்டிய
வருத்தம் தொனிக்கும் கவிதை.

ஓவ்வொருவரும் சமன்பாடு காணும் ஞானக் குளியலின் அவசியத்தை அறிவுறுத்தி மூளைச்
சலவை செய்ய அழைப்பது அருமை. அந்நியக் கலாச்சாரத்தில் நம் தமிழும் கலாச்சாரமும்
அடிபட்டுப் போவதற்கு நம்மவர் மனங்களும் காரணமென்று இடித்துக் கூறுகின்ற
தைரியத்துக்கு என் பாராட்டுதல்கள்.

ஆராதனை -கற்பனையில் மிதக்கும் ஒரு ஆன்மாவின் மன நெருடல்களின் தெளிப்பு.

ஆச்சரியவிருந்து
-சுற்றலாய்ப் பின் விழிபிதுங்கிய சுற்றுலா ஆச்சரியம்.

 

 வேதாவின் கவிதைகள் (நூல்)       ( தமிழ் விக்கிபீடியாவில் இந்த நூல் பற்றி வாசிக்க)
 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

http://www.muthukamalam.com/muthukamalam_puthakaparvai60.htm   இது முத்துக் கமலம் இணையத்தளப்பார்வை. (இந்த நூல் பற்றி.)

பார்வை:

ஒரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளராக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்ட மிகக் குறைந்த தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவரான நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் வாழ்வாதாராம் தேடி இலங்கையிலிருந்து டென்மார்க் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பாலர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இவருடைய கவிதைகள் சில வேதாவின் கவிதைகள் என்ற பெயரில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் தளிர்கள் எனும் தலைப்பில் 9 கவிதைகளையும், குடும்ப உறவு எனும் தலைப்பில் 12 கவிதைகளையும், தத்துவம் எனும் தலைப்பில் 4 கவிதைகளையும், உணர்வுகள் எனும் தலைப்பின் கீழ் 15 கவிதைகளையும், காதல் + ஏக்கம் எனும் தலைப்பில் 7 கவிதைகளையும், பெண்மை எனும் தலைப்பில் 8 கவிதைகளையும், ஊர் மணம் எனும் தலைப்பில் 12 கவிதைகளையும், நிகழ்வுகள் என்ற தலைப்பில் 16 கவிதைகளையும், வானொலி எனும் தலைப்பில் 6 கவிதைகளையும் , இயற்கை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், சுகம் கேட்டல் பிரார்த்தனை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், வாழ்த்து – விழா எனும் தலைப்பில் 7 கவிதைகளையும் அளித்திருக்கிறார். இந்நூலில் மொத்தம் 102 கவிதைகளைத் தந்திருக்கிறார். இது தவிர கடைசியாக டென்மார்க் ஒல்போ நகர வானொலியில் இவர் வாசித்த நானும் என் கவிதையும் என்கிற கவிதை தரப்பட்டுள்ளது. இந்நூலில் வாசித்த கவிதைகளுள்…

நேற்றோடு பொறாமையைக்
காற்றோடு உதறுங்கள்!
ஆற்றாமையை இன்றுடன்
அடியோடு சாயுங்கள்!
 

வேற்றுமையை வேகமாக
வேரோடு பொசுக்குங்கள்!
சோற்றோடு திறமையை
நாற்றாய் நடுங்கள்!

– என்பது போன்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன.

இந்நூலிற்கு பிரான்சிலிருந்து வெளிவரும் ஈழநாடு பாரிஸ் இதழின் முதன்மை ஆசிரியர் எஸ்.எஸ்.குகநாதன் அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்திலிருக்கும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் சார்பாக இ. ஜெயராஜ் இந்நூலிற்கு எட்டு பக்கங்களில் அணிந்துரையை வழங்கியிருக்கிறார்.

சென்னை, மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்தக் கவிதை நூல் தமிழ்க் கவிதை ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நூல்.

     -தாமரைச்செல்வி. 

 

 

 

கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்நூல் வெளியீடு மணிமேகலைப் பிரசுரம் நடத்திய போது என் தங்கையும் தம்பியும் புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட போது.

ரி.ஆர்.ரி தமிழ் அலை தொலைக்காட்சி உறவுகளின் சங்கமத்தில் எனது முதல் நூல் வெளியீடு யெர்மனியில் நடந்த போது அறிவிப்பாளர் திருவாளர். உதயகுமார் நூல் பற்றிப் பேசினார். அவைகளைப் படத்தில் காண்கிறீர்கள்.

திரு சிறி.சிறீஸ்கந்தராஜா றியாட்ல் வசிப்பவர் எழுதிய இந் நூலின் மதிப்பீடு.இவரது இணைப்பும் கீழே தரப்பட்டுள்ளது.

http://wp.me/p1A2lg-kh

வேதாவின் கவிதைகள்!

ஓர் மதிப்பீடு!

 ஆழ வேரூன்றி!

அகலக் கிளைகள் பரப்பி!

வானோக்கி உயர்ந்து!

விரிந்து விருட்சமாகி!

விழுதுகள் பல இறக்கி!

எங்குமாய் வியாபித்து நின்று

நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின்

அடி முடி தேடுவது என்பது

அவ்வளவு சுலபமானது அல்ல…

 

சிற்றெறும்பாகிய நான்

என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன்!

குருவி தலையில் பனங்காய் சுமக்க 

முயல்வதைப் போன்றது எனது முயற்சி!

 சொல்லோடு பொருளெடுத்து!

சுவையோடு தமிழ் எடுத்து!

நில்லாது ஓடுகின்ற

நினைவுகளை நெஞ்சேற்றி!

நற்சுவையும் நற்பொருளும்

நயமோடு எடுத்துரைக்கும்

நல்ல பல கவிதைகளை

நாம் காணமுடிகிறது!

 இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்..

இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்!

 தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம்.

 இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும்  இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார்.

இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன.

 இத்தகைய பின்னணிகளோடு

களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம்

அவர்கள் அரிய பெரிய பல படைப்புக்களை

நாளும் தந்து கொண்டிருக்கின்றார் என்பதில்

வியப்பேதுமில்லை!   

 தாய்ப் பாலோடு பாசத்தை மட்டுமல்ல

வீரத்தையும் விளையவைக்கும்

ஒரு வீரத்தாலாட்டு கேட்கிறதே!

ஆராரோ தாலாட்டு அன்னையின் தாலாட்டு

அறிதுயில் போன்றது அன்னையின் தாலாட்டு

 ஆசைத் தாலாட்டு பிள்ளைக்கு சீராட்டு

மங்காத வீரம் முளைவிடும் தாலாட்டு

 தங்கத் தமிழனின்  தொன்மைத் தாலாட்டு  

துஞ்சிடும் விழி தூங்கிட தாலாட்டு!

 

பக்குவமாய் வளர்த்தெடுத்த

ஒரு விண்ணின் நிலவை

விடியும் வேளையில்   

திருமணப்பந்தலிலே மிக அழகாக

அமர வைக்கிறார்!

 பஞ்சில் பொதித்து பக்குவமாய் வளர்த்து

மிஞ்சும் அறிவு சிறக்க வைத்து

கொஞ்சும் சிரிப்பு குலுங்க காத்து

விண்ணின் நிலவாய் மின்ன வைத்து

கண்ணின் இமையாய் கருத்துடன் காத்து

பெண்ணிற்கு விடியலென்று திருமணம்

   மிக அற்புதமான கவிதை ஒன்று!

மகரந்தம் தேடும் வண்டினங்கள்

தேன் அருந்தியதும்

திசை மாறிப் போகின்றனவே!

என வண்டைத் திட்டுவது போல்

ஆண் வர்க்கத்தையே ஜாடை காட்டி

சாடுகிறார் மிக அற்புதமாக! 

 பூவிதழ் விரித்து

பூந்தாது மகரந்தம் ஏந்தி

பழகும் வண்டின் வரவிற்காய்

மகிழ்ந்து ஏங்கி

தேன் பரிமாறியதும்

மலர் நன்றியை பெறுவதில்லையே!

வண்டின் நன்றி நவிலா நழுவல்

ஆணாதிக்கமோ?

 பெண்ணடிமை பற்றி ஒரு கவிதை!

பெண் விடுதலை பற்றி மிக நேர்மையாக

பேசுகிறார்!

 பெண் பயம் விடுத்தாலும்

பெண் நேர்மை பேசினாலும்

பெண் கேள்வி கேட்டாலும்

ஏன் பொங்குகிறது ஆணினம்?

 கவிதை பற்றி ஒரு கவிதை….

வண்ண ஆரம்! சொல்லோவியம்!! சுகராகம்!!

மிக அற்புதமான சொல்லாட்சி!

 ஏற்றதை இணைத்து எளிய சாரமாய்

வார்த்தையால் வளைக்கும் வண்ண ஆரம்

உள்ளுணர்வுச் சொல்லோவியம்

உயிரின் சுகராகம் கவிதை

 தன்னை வளர்த்தெடுத்த

ஒரு தமிழ் வானொலிக்கு

காணிக்கை செய்கின்றார்

 கடல் அலை கால்கள் தழுவிட இன்பம்

மடல் விழி குளுமையில் மலர்ந்திட இன்பம்

தமிழ் அலை மனதை தழுவிட இன்பம்

அமிழ்ந்து இனி உலகை மறந்திட எண்ணம்!

  இவ்வாறாக இவரது கவிதைகளில், ஆன்மீகம், அரசியல், சமூகம், பெண்விடுதலை, காதல், வீரம், ஆகிய எல்லா துறைகளையும் மிகவும் அழகாகவும்

கவிதை நயத்தோடும் பதிவு செய்திருக்கின்றார்!

 இந்த கவிதை நூல் நூலகம் என்னும் தளத்தில்

பதிவேற்றம் செய்யபட்டிருகின்றது என்பதிலிருந்து இதன் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

 கவிதை என்ற தளத்திலிருந்து மேலும் விரிவாகி,

பயணக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று இவர் தன்னை  வளர்த்து கொள்ளுகிறார்.    

 இணையத்தில் இவரது படைப்புகளை பார்க்கும்போது

ஆச்சரியம் மேலிடுகிறது!

 பொறுப்பான ஒரு உயர் பதவியிலிருந்து கொண்டு

இவருக்கு எப்படி எழுத நேரம் கிடைக்கிறது?

 இருந்தும், தமிழன்னைக்கு இவர் சூட்டியிருக்கும் அணிகலன்கள் யாவும் மிகவும் அற்புதமானவை!

 இன்னும் பல படைப்புக்களை இவர் தருவார், தரவேண்டுமென வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்!

 வாழ்க தமிழ்!

வளரட்டும் இவர் தமிழ்த் தொண்டு!

   ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்

ரியாத், சவூதி அரபியா

10/07/2011

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: