அனுபவம் அங்கம் 13.

மூன்று கோயில்கள் அருகருகே அடுப்புக் கட்டிகள் போல இருந்தது. (முதல் 3 படங்களும்) தெருவோரத்தின் இரு புறமும், ஒரு புறம் பிள்ளையார் கோயிலும், மறுபறம் மீனாட்சி சுந்தரேசர் போயிலுமாக பெரிய கோயில்களாக இருந்தன.இவைகளை வணங்கிவிட்டு இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் படிக்கட்டுகளுடன் அமைந்த முருகன் கோயில் உள்ளது. ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில். பழைய பெயர் நாட்டுக் கோட்டைச் செட்டியார் கோயில் என்பது. இது கடல் மட்டத்திலிருந்து 233மீட்டர் உயரத்தில் இருக்கிறதாம். பல படிகளில் ஏறிக் கோயிலை அடைவதால் மேலே சிகரத்தில் சிறிய கோயிலாகவே இருக்கிறது. கீழிருந்து மேலே (உயரத்தில் தெரியும் படம்) வரை ஒவ்வொரு கட்டிடமாகப் பல சுவாமிகள்உண்டு. திருக்கார்த்திகை என்பதால் மின்சார அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தார்கள். கீழே படிக்கட்டுகள் தொடங்கி மேலே செல்லச் செல்ல வளைவாகிக்  கோயிலை அடைகின்றன. இந்த படிகளின் இடைவெளியில் ;மேலிருந்து கீழே வரை மயில், முருகன், ஒளவையார், வேல் என பற்பல உருவங்களாகச் செய்து வைத்தள்ளனர். இடம் உள்ள இடமெல்லாம் தமிழன் கோயிலாகவே செய்து வைத்துத் தெய்வச் சூழலாகவே இருந்தது.
மனதுக்கும் மகிழ்வாகவே இருந்தது. காணிக்கை, அருச்சனை, எண்ணை விளக்குகள் என ஒரு புறமும், பணவசூலிப்பு, கட்டிட உதவி எனவும், மறுபுறம் சாமி தீபம், ஆராதனை என நேரம் போய் கொண்டே இருந்தது. இரண்டு மணியாகியும் முடிந்த பாடில்லை.
மேலே மலையிலிருந்து பார்த்தால் முழு பினாங்கும் தெரிகிற உயர் கட்டிடங்கள்,(படம்) அப்படியே அமர்ந்து பார்த்தபடியே இருக்கலாம் போன்ற காட்சி. நடப்பதும் , இருந்து பார்த்து ரசிப்பதுமாக கீழே சென்றோம். மேலே முருகன் கோயில், கீழே பிள்ளையார் கோயிலில் தான் அன்னதானம். அங்கு சனம் வழிந்து நிறைந்து காணப்பட்டனர். முண்டியடித்துச் சென்று அன்னதானம் பெற்றுப் பசியாறினோம். பின்னர் பாயாசமும் கிடைத்தது. மிக சுவையாக இருந்தது. உண்டு முடிய மக்கள் வீட்டுக்கு உணவு கொண்டு செல்ல உணவு ஏந்தத் தொடங்கினார்கள். அதாவது தாராளமாக உணவு இருந்தது. கோயிலுக்கு அருகே ஒரு தாவரவியல் பூங்கா இருந்தது. நாம் அதைச் சென்று பார்க்கப் புறப்பட்டோம். வழியில் ஒரு குளிர் பானக் கடை  இளநீர் குவியலாக இருந்தது. அதை வாங்கி உறிஞ்சான் மூலம் உறிஞ்சிக் குடித்தபடி இருக்க  இரண்டு யெர்மனிய உல்லாசப் பயணிகள் ஆண்கள் வந்து அமர்ந்தனர். எதைக் குடிப்பது என்று யோசித்தபடி எமது இளநிரை விளங்காதபடி பார்த்தனர். ஆங்கிலத்தில் நாம் அதை விளக்கிக் கூறி, இது சுகாதாரமானது, சேலைன் போன்றது என கூற வாங்கிக் குடித்தார்கள். இவர்கள் தான் ‘ ‘உல்லாசப் பயணம் மயிர்க்கூச்செறியும், மனச் சித்திரவதை கொண்டது’ ‘ என்று எம்மோடு அளவளாவியவர்கள். இந்த நடமாட்டம் முடிய
நாம் தாவரவியல் பூங்காவிற்குச் சென்றோம். 30 கெக்ரார் விஸ்தீரணம் கொண்ட பூந்தோட்டம் வோட்டர் ஃபோல் தெருவில் தான் உள்ளது. உல்லாப் பயணப் பேருந்துகள் நொடிக் கொருதடவை வந்த வண்ணமே இருந்தன. சனக்கூட்டமும் அதிகமாகவே இருந்தன. அழகாகக் கத்தரித்த பூஞசெடிகளும், மலர்க் கூட்டமும் கண்ணைக் கவர்ந்தன. உல்லாசப் பயணிகளைக் கவர கவர்ச்சிகரமாக அமைத்திருந்தனர். நீர்வீழ்ச்சி எங்கேயெனத் தேடிக் கண்டுபிடித்தோம். ஒரு அணைக் கடடீலிருந்து நீர் வடிவது போல விழுகிறது. மேலே ஒரு பாலம். அதில் ஏறி நின்றால் கால் பகுதியால் நீர் வடிவது போலத் தோற்றம்.(படம்) சாதாரண ஒரு வீட்டுக் கூரையளவு உயரம் எனக் கூறலாம். பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, பெரிய மரங்கள் பெயர், ஆண்டு விபரங்கள் எழுதி நாட்டியிருந்தனர்.

–மிகுதியை அங்கம் 14ல் பார்ப்போம்.—–

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
29-3-2003.
(படங்கள்- ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோவில்; மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நீர் வீழ்ச்சி, பூங்கா. ஆகியன காண்கிறீர்கள்.)

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. mannai senthil
  ஜூன் 21, 2011 @ 18:14:10

  முழுதும்..கட்டுரை வாசித்தேன்..இலங்காவில் சில கேள்விகளை …??
  மிக அருமையான பதிவு! சில பயண குறிப்பாய் பயன் படும் என பத்திரப்படுத்துகிறேன்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 22, 2011 @ 21:29:31

   எவ்வகையிலும் கட்டுரை ஒருவருக்குப் பயன்படுமானால் அது மிக மகிழ்ச்சியே. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. நேரமிருக்கும் போது மீண்டும் வாருங்கள் உங்கள் ஆதரவைத்தாருங்கள். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: