8. மீன் தொட்டி.

 

மீன் தொட்டி.

 

நீல ஒளியுமிழும் மின்னொளி
நீலப் பின்னணியில் நீர்த் தொட்டி.
கோல வண்ண நிற மீன்கள்.
நிலத்தில் ஒரு வானமோ!
சலத்துள் இத்தனை அதிசயம்!
நிலத்தின் கீழ்க் கோலம்!    
நிலம் மறந்தேன் நான்.
நிலையையும் மறந்தேன் ஆகா!

சுத்தமான பளிங்குத் தொட்டியுள்
எத்தனை விநோதத் தாவரங்கள்.
பத்தாயிரம் கரங்களால் மீன்களைப்
பித்துப் பிடித்தலையும் உயிரினம் போல
பொத்திச் சுருட்டும் தோரணையில்¸
மெத்து மெத்தெனும் தாவரம்
கொத்துக் கேள்விகள், சந்தேகங்கள்.
சித்தம் கவர்ந்த நீருள் இரகசியங்கள்.

கிலிப்புலி, வரிக் குதிரை
கிளிப்பச்சை, அக்கினிச் சிவப்பென
விழி விரிய ரசிக்கும் தங்க மீனும்
ஒளிந்திடும் மீன்களுக்கு ஓடுபாதையும்
கிழித்தட்டு விளையாட்டு மீனழகைச்
சலித்திடாது ரசிக்க மனிதனால்
துளிர்த்தவொரு தொழில் நுட்பம்
அளிப்பது மானிட மனநலச் சுகசேமம்.
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-3-08.

(பதிவுகள். கொம் இணையத் தளத்திலும், இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் வெளியான கவிதை.)

http://www.geotamil.com/pathivukal/poems_march2008_b.htm#vetha

 

                                    

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Dhavappudhalvan
    மார்ச் 11, 2011 @ 05:38:54

    “சித்தம் கவர்ந்த நீருள் இரகசியங்கள்.”

    வண்ணமீன்களால் மனத்தை பறிகொடுத்த நிலையை அருமையாய் படைத்துள்ளீர்கள் சகோதரி.

    மறுமொழி

  2. சக்தி சக்திதாசன்
    ஜூன் 18, 2011 @ 20:09:38

    அன்பின் சகோதரி வேதா,
    அகன்ட ஆழிப் ப்ரப்பினிலே
    ஆனந்தக் களிப்புடன் நீந்தி
    குதித்து விளையாடும் மீன்கள்
    கண்ணாடித் தொட்டியினுள்
    கழித்திடும் வாழ்க்கயை புதுமைக்
    கண்ணோட்டத்துடன் பார்த்து
    பரவ்சமான ஒரு கவிதையைத் தந்து
    அன்புடன் ரசிக்கும் தருணத்தைத் தந்தீர்கள்
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜூன் 19, 2011 @ 22:04:12

    மீன் தொட்டியைப் பார்த்த ரசனையின் அனுபவமே இது. அது உங்களை மகிழ்ச்சிப் படுத்தியது கவிதையின் வெற்றி. சந்தோசம் சகோதரரே! மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும், வருகைக்கும். நேரமிருக்கும் போது வந்து கருத்தைத் தாருங்கள். இறை ஆசி கிட்டட்டும்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: