28. சுனாமியின் சுவடுகள்.

 

சுனாமியின் சுவடுகள்

 

ழிப்புயலென அழைக்காது வந்த சுனாமி
ஊழித் தாண்டவம் ஆடியது ஊழ்வினையோவென.
சமுத்திரராஐன் பெரும் மதிப்பிற்குரியவனின்
சமுத்திர இராசாங்கமேன் கணத்தில் கொடூரமானது!
சமூகத்து நெய்தல் நிலமேன் கரைந்துபோனது!
சுமுக நிலையாகி இச்சுமையென்று தீருவது?

ணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள்
கடல் காவெடுத்து நீந்திய உடல்கள்,
கன்று, காலிகள் சுவடின்றிக் கழுவியோடிய விதிகள்!
குர்ஆனின் மசூதி, அர்த்தமுடை இந்து ஆலயம்,
கர்த்தாயேசு ஆலயம், கருணை புத்தர் கோயிலும்
கழுவிக் கரைத்துக் கல்லாகக் காட்டிய தடங்கள்!

கோரமான தேசீயக் கவலையை இனங்கள்
வீரமாய்ச் சமாளித்து நிமிர்ந்திட வேண்டும்.
ஆரமாய் இணைந்துதவும் அவசர உதவிகள்
சாரமாய் மக்களிடம் சேர வேண்டும்.
அனாவசியச் சுனாமி தாரணவிற் புரண்டு
கனாக்களையழித்த தடங்கள் ஆற்றுமா சாதனைகள்!

வேற்று மனிதராயெமை எண்ணும் அரசு
சாற்ற வேண்டும் உதவி, அழிவுகளுக்கு.
கற்ற கல்வியால் மனிதர் ஓரினமென
சுற்றி உதவிகள் கிடைக்க வேண்டும்.
வெற்று மனங்களின் வேதனை தீர வேண்டும்.
முற்றாய்ச் சுனாமியின் சுவடழிய வேண்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(22-9-2006 ல் யேர்மனிய – மண் சஞ்சிகையிலும், 21-1-2005ல் ரி.ஆர். ரி தமிழ் ஒலி வானொலியிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் வெளியான கவிதை. பிரித்தானிய தமிழ் உலகம் சஞ்சிகைக்கும் அனுப்பிய கவிதை.)

 

                                 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  பிப் 10, 2012 @ 21:49:32

  அன்பின் சகோதரி வேதா,
  இயற்கையின் அனர்த்தம் அன்பினிய பலரின் வாழ்க்கையில் இழைத்த இன்னல்களைப் பாவம் அவ்வுடன்பிறப்புக்கள் சமாளித்து அடைந்த துயரின்றும் மீண்டிட்ட வகை சொல்லும் அருமையான் வரிகளுடன் தாங்கள் யாத்த கவிதை அழகு,
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. seeralanvee
  டிசம்பர் 26, 2012 @ 12:58:14

  மீண்டுமோர் வேதனை வேண்டாம்…..! ஆழிப்பேரலையில் அமிழ்ந்துபோன உறவுகள் அனைவருக்கும் என் கண்ணீர் காணிக்கை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: