29. புலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு.

                                                                             

            புலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு

   புது மொழி, புது ஆடை
புது சுவாத்தியம், புது உணவு
புது சூழல் புதிய கருத்துகள்
இது போதுமே இளையோர் பாதிப்பிற்கு!
அனுமதி பெற்று, மூத்தவரைச்சார்ந்து
அலுவல்கள் செய்தோம் அங்கு.
அகல விரி! உன் அறிவை!
அற்புதம்! சுய சிந்தனையானது இங்கு.

பொது இரவு நடனக் கேளிக்கை
மது, மாது இங்கு சர்வசுதந்திரம்.
இது தானிங்கு மாபெரும் மந்திரம்.
இது தவிர்ந்த வாழ்வு ஒரு தந்திரம்.
கிடைக்கும் வசதியைப் பலர்
உடைக்காது பயனாக்கிப் படித்து
தடையின்றிச் சாதனையில் உயர்ந்து
குடை விரிக்கிறார் பெயரோடு புகழாய்.

புதிய கருத்தோடு இளையவர்கள்.
ஆதிக் கருத்தோடு பெற்றவர்கள.
மோதி முரண்படும் தலைமுறைகள்.
மதிப்பு வேண்டிக் கவன ஈர்ப்புகள்.
கதியெனக் குழுக்கள் அமைத்து
சுதியாச் சுழன்று திரிந்து
விதியெனச் சாகசங்கள் செய்து
மதி கெட்டு அலைகிறார் சிலர்.

கோவணம், மரஆடை நூலாடையாகி
கோலங்கள் மாறி நவீன பாணிகளாக,
கூடி வாழ்ந்தவர்கள் பின் தாலியால் வேலியிட
மாடி வீட்டிலின்று  குகை வாழ் மனிதர்கள்.
படிப்படியாக மாற்றங்கள் சூழும்.
பாதிப்பும் வாழ்வியல் மாற்றமும் நீளும்.
பாதம் நிலாவில், அறிவாலும், ஆற்றலாலும்.
பாதிப்பில்லை அறிவுயரும் கலாச்சார மாற்றத்தால்.

 

கவியாக்கம்.
(நகுலபுத்ரி என்ற பெயரில் எழுதியது.)
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2007.      

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில்13-2-2007ல் கவிதை பாடுவோம் நேரத்தில் சகோதரர் சில்வெஸ்ரர் வாசித்தார்.19-6-2008 யெர்மனிய மண் சஞ்சிகையிலும் வெளியான கவிதை.)

 

இளையொர் வாழ்வில் கலாச்சாரப் பாதிப்பு.

பெற்றவர் கலாச்சாரம்
பேச்சிலும் மூச்சிலுமானாலும்,
பச்சையாய்க் கண்பறிக்கிறது
புலம் பெயர் கலாச்சாரம்.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்
வாடித் தெரிவது எம் கலாச்சாரம்.
தேடி ஆராய்ந்தால் அங்கு
கூடிய நன்மைகள் புரியும்.

லக மாற்றத்தோடு நவீனமாய்
உருளும் புலம்பெயர் கலாச்சாரம்
உல்லாசமாய் அனைவரையும் தன்வசம்
இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக் கலாச்சாரத்தில்.
உலகமே மாறுகிறது நம்
வழமைகளும் பல மாறுகிறது.

லாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
கலப்பையால் உழுதிடும் நிலைதான்.
ஆழப்போகும் வேரான தமிழ், எம்
மூலமொழி – இன அடையாளம்.
காலம், இட மாற்றத்தோடு ஆகும்
கலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.
நிலாத்தொட்ட காலத்திலும் இளையவர்
சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2007.

ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dhavappudhalvan
  ஜூன் 20, 2011 @ 15:19:07

  சிந்தனைக்குறிய கவிதையிது. எவ்வளவு கலாசார மாற்றங்கள் வந்திடினும் எம் தாய்மொழி தமிழ் என்பது மறவாது, உரையாடுதலுடன், எழுது பழக்கமும் இருக்க வேண்டும்.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 22, 2011 @ 21:24:33

  ஆமாம் சகோதரரே! எல்லாம் பெற்றோர் கையிலேயே உள்ளது. வீட்டிலே தமிழ் பேசினால் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.பலர் இதைச் செய்வதில்லையே! உங்கள் வருகைக்கும், கருத்திடுகைக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. சக்தி சக்திதாசன்
  பிப் 10, 2012 @ 21:46:23

  அன்பின் சகோதரி வேதா,
  அருமையான இன்றைய நிலையை உணர்த்தும் படைப்புக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 4. kowsy
  ஆக 08, 2014 @ 08:30:37

  இது என்ன புலம்பெயர்வில் மட்டுமா நடக்கிறது எமது தாய் நாடு, நமது அண்மைய நாடு தமிழ்நாடு எல்லாவற்றிலும் தான் நடக்கிறது. இணையத்தொடர்பு உலகம் முழுவதும் ஏற்பட்டதால் எல்லாவற்றிலும் மாற்றம். நல்லதை தெரிவு செய்ய நாம் தான் முழிப்பாய் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 08, 2015 @ 22:17:01

  தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் Kowsy.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: