30. புலம்பெயர் மண்ணில் நம் பாதைகளும் பயணங்களும்.

 

புலம்பெயர் மண்ணில் நம் பாதைகளும் பயணங்களும்.

 

லம் தராத அரசியற் சூழல்,
பலமற்ற பொருளாதாரம், பாதுகாப்பின்மை
புலம்பெயர்வுக் காரணிகள் பல.
உலகெங்கும் எம் தமிழர் நலமாக.
காலநிலை, கலாச்சாரம், மொழி புதியது.
கோலம், கொள்கை, வழமையை மாற்றியது.
மூலப் பொருளாதாரம் வேரூன்றிடப் பலர்
நலமாக்கினார் உறவுகளையும் கடல்கடந்தழைத்து.

ல்வித் தகைமைகள் கட்டி யெழுப்புகிறார்.
கலை வழிகளில் முன்னேறி வருகிறார்.
உலகத் தொடர்புக்கு ஊடகம், சஞ்சிகைகளும்,
உலாவிய பத்திரிகைகளும் உன்னத உயர்வு.
சுய கலாச்சார இழப்பு துல்லியமாக,
நயமான கலந்துரையாடல் நாள் தோறுமாக,
தயங்காது குழந்தைகள் தமிழை வளர்க்க
வயலாகிறது வானொலி – தொலைக் காட்சிகள்.

சுய திறமைகள் சாணை பிடிக்கப்பட
அயர்வின்றிக் களம் தந்து ஆதரவாகிட
புயலெனப் பல திறமைசாலிகள் உருவாகிட
வியனுறு சேவை வழங்குகிறது ஊடகங்கள்.
எழுகின்றன உலகச் சாதனைகள் மூலைக்கொன்றாய்.
நழுவுகிறது தமிழும் நாகரீக மோகத்தால்.
அழுதிடாது பெண்மை அசாத்தியமாய் எழுகிறது.
முழுவதும் பொருளாதார சுயபல மந்திரமோ!

ண்ணில் தெரிவது கையிலடையும் பணபலமாய்
பெண்ணும் ஆணும் ஐம்பதுக்கு ஐம்பதாய்
கண்ணியாகிய கலாச்சாரத்தாலும் சீரழிந்து
புண்ணாகி, மண்ணாகும் பிரகிருதிகளும் உண்டு.
புகழின் உச்சியில் சிகரம் தொடுவோரும்
புரியாது பாதையில் தடுமாறுவோரும்
புலம்பெயர் மண்ணில் இருவழியாகப்
புகுகிறார் நன்மையோடு தீமை வழியுமாக.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்
30-11-2006.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் 30-11-2006லும் 30-1-2007ல் நான் வாசித்த கவிதை.)

 

                     

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜூலை 01, 2011 @ 17:19:25

  அன்பின் சகோதரி வேதா,
  புலம்பெயர் மண்ணில் புரியாத பல புதிர்களுக்கு விடைதேடிக் கொண்டு முடியாத தேடல்களுக்குள் புதைந்து போயிருப்போரின் பயணத்தை அழகாக விபரித்துள்ளீர்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 17:44:34

  மிக்க நன்றி சகோதரரே!. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. Dhavappudhalvan
  ஜூலை 16, 2011 @ 08:38:30

  “சுய கலாச்சார இழப்பு துல்லியமாக,” Evvalavu dhaan sirappaka seyalpattaalum, mana varuththaththai thulliyamaay padhiththullirkal sakodhari.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 18, 2011 @ 17:18:15

  Mikka nanry sakothra. Thank you for your visiting here and your kindly lines.. God bless you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: