9. கற்பனைத் தூரிகை வண்ணம்.

 

கற்பனைத் தூரிகை வண்ணம்.

 

வானத்தை ரசிப்பது தனி இன்பம்.
வாடிக்கை அன்று சின்ன மனதுக்கு.
வேடிக்கை இன்றும் என் மனதுக்கு.
விண் மீன்களை எண்ணித் திணறுவது,
விண் மீன்களில் பெரியது எது,
கண்ணருகே தெரிவது எதுவென
கண் மீன்கள் கருத்தாகக் கணக்கிடும்,
கழுத்தில் நோவு வரும் வரைக்கும்.

 னதில் என் கற்பனைத் தூரிகை.
மென் நீல வானம் திரை.
முதலில் கண்கள் தேடி ஓடும்,
பதமான பஞ்சு மேகத்தை நாடும்.
நிலாப்பெண் குளிக்கும் நீலத் தடாகம்.
நீந்திப் பொங்கும் சவர்க்கார நுரையும்,
முன்னேறி வரும் காற்று மெத்தைகள்.
நன்றாய் அமர்ந்த நாய்க்குட்டி அதன்மேல்.
 

நாய்க்குட்டி மாற அர்ச்சுனன் தேர்.
பாய்கின்ற குதிரையில் பிணைந்த தேர்
தேய்ந்து மறைய நீலத்திரை. – பின்னர்
நேர்த்தியான ஒரு சோடிப் பூனை.
வார்க்கும் கற்பனைக்கு இல்லை இணை.
கற்பனை வளர வளர பஞ்சுமேகம்
சொற்பமின்றிப் பெருக்கம் அமோகம்!

வான நீலம் மறைத்தது வெண்மேகம்.
வந்தது அங்கு ஒரு வட்டக்குளம்.
வளர்ந்து பெரிதாய் நீண்டது குளம்.
எழுந்தார் அங்கொரு தாடித் தாத்தா.
விழுந்தார் அந்த நீளக் குளத்தில்.
எழுந்தார் வாயு பகவான் வேகமாக.
கோலக் கற்பனைக்கு வந்தது முடிவு.
ஈழத்தில் வந்தது! என்ன இன்பமது!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்

(11-02-2003 ரி.ஆர்.ரி தமிழ் அலையில்.
10-7-2006ல் இலண்டன் தமிழ் வானனொலியில் என்னால் வாசிக்கப்பட்டது. எனது 3வது நூலான ”உணர்வுப் பூக்களில்’ ‘  பக்கம் 53ல் இக் கவிதை இடம் பிடித்துள்ளது.)

another vaanam poem:-
https://kovaikkavi.wordpress.com/2010/10/24/124-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

                                  

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜூன் 27, 2011 @ 16:54:43

  Bala Ganesan Sadhasivam likes this..
  Bala Ganesan Sadhasivam wrote:-
  Arumai arumai
  Iyarkai enum peranantha peruvazhiyil muzhuthumai tholainthu ponen

  மறுமொழி

 2. Dhavappudhalvan
  ஜூலை 05, 2011 @ 17:02:17

  நம் சிறு வயது ஆராய்ச்சி எண்ண விளையாட்டு, இன்றும் இருக்குமோ இத்தலைமுறையிடம் என தெரியவில்லை.

  வாடிக்கை அன்று சின்ன மனதுக்கு.
  வேடிக்கை இன்றும் என் மனதுக்கு.

  அருமையான மேற்காணும் இருவரிகளில் முதல் சொற்களை, மேலும் கீழுமாக மாற்றி பதித்தாலும் இன்றும் இனிக்குமே.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூலை 05, 2011 @ 17:48:11

  உண்மை தான் நல்ல ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். உங்கள் இனிய வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 4. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 05, 2011 @ 19:22:36

  அற்புதம்!!
  அழகான தமிழ் அணிசேர்க்கிறது!
  வளமான மொழி இழை ஓடுகிறது!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: