34. மவுனமாக இருப்பதெல்லாம்…….

  

 

மவுனமாக இருப்பதெல்லாம்…….

வுனம் என்பது தெய்வ மொழியோ
சகுனம் காட்டாத சாது மொழியோ
மவுனமாக இருப்பதெல்லாம அஃறிணையன்றோ.
மனிதமொழி பேசிடுவோர் உயர்திணையன்றோ.
மனிதன் மொழியின்றி மவுனம் காத்திடல்
மரபு வழியோ! மேதாவித்தனமோ!

வுனமாக இருப்பதெல்லாம்
மனத்தடுமாற்றமா, கோழைத்தனமா,
மனத்தாபமா, குற்ற உணர்வா,
மயக்க நிலையா, தலைக்கனமா,
மகத்துவ விரக்தியா, தட்டிக்கழிப்பா,
மகிழ்நிலையா, தத்துவநிலையா!

வுனமாக இருப்பதெல்லாம் மனதின்
மந்தநிலையா, தன்னடக்கமா,
மவுனம் ஓர் இறுக்க நிலை.
மனம் திறக்காத மர்மநிலை.
மனவியல் மார்க்கத்தில் மனம்திறத்தல்
மனோராச்சிய சுயஆளுமை சிறத்தல்.

 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-01-2005.

( யேர்மனிய சஞ்சிகை  தமிழ் நாதத்தில் வெளியானது.)

                                              இதே தலைப்புக் கொண்ட எனது இன்னொரு படைப்பு கீழே:-

 https://kovaikkavi.wordpress.com/2010/09/09/62-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. சக்தி சக்திதாசன்
    ஜூலை 21, 2011 @ 04:45:31

    அன்பின் சகோதரி வேதா,
    மெளனத்தின் அர்த்தங்கள் மகானின் மணிமொழிகள். மெளனத்தின் பெருமையை அழகாக எடுத்தியம்பிய உங்கள் திறமைக்கு எனது அன்பான பாராட்டுக்கள்.
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

  2. nsureshchennai
    ஜூலை 21, 2011 @ 07:16:34

    மௌனம் – பற்றி பல கவிதைகள் வாசித்துள்ளேன்… இந்த க்விதையில் இருக்கும் சிறப்பான வேற்றுமை இதற்கு சிறப்பு… வாழ்த்துக்கள், அம்மா!

    மறுமொழி

  3. vasantha
    ஜூலை 21, 2011 @ 08:32:23

    மௌனம் பலவிதம், அனைத்து கோணங்களிலும் பல அர்த்தங்களுடன் இணைத்துள்ளீர்கள். அருமை

    வசந்தா சந்திரன்

    மறுமொழி

  4. கோவை கவி
    ஜூலை 23, 2011 @ 06:47:51

    தமிழ்த் தோட்டம் wrote:-
    ……அருமை……

    மறுமொழி

  5. மகேஸ்வரி பெரியசாமி
    ஜூன் 12, 2013 @ 09:27:07

    மௌனத்தின் அந்தரங்கத்தை மணிமணியாய் குறிப்பிட்டுள்ள உங்களின் தமிழ் ஆளுமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.சகோதரி. வாழ்க வளமுடன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: