44. மௌனமாக…..

 

 

மௌனமாக…..      

 

த்திரத்தால் உடலில் நிகழும்
காத்திரமான பௌதிக மாற்றம்
காத்திடும் கௌரவ மந்திரம்,
சூத்திரமாய்த் தோன்றிடும் மௌனம்.
 
ரிய மொழி மௌனம்
பெரிய சாதனைகளும் சாதிக்கும்.
உரிய நேரத்து மௌனம்
எரிய வைக்கும் உண்மையை.

ண்பற்ற சொல்லருவியில் நீந்தி
புண்படுதல் தவிர்க்கும் துணை.
கண்ணியமான கைப்பிடி மௌனம்.
கண்ணிற்குப் புலப்படாப் பௌர்ணமி.

ருமித்த கூட்டுறவின் பலத்தில்
இரு கரங்கள் எழுப்பும் ஒலி.
ஒரு கரத்தின் இழப்பு நிலையைப்
பெருமௌனம் தரவும் கூடும்.

காயாகக் கசக்கும் மௌனம்
வாயாடிக்கு வலி தரும் தேள்.
நோயாடா தியான நிதானம்
சாயாத மனதின் மௌனம்.

பா ஆக்கம்.  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-5-2007.

இதே தலைப்புக் கொண்ட எனது இன்னொரு படைப்பு கீழே:-

https://kovaikkavi.wordpress.com/2010/09/02/49-%e0%ae%ae%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/

(லண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால்வாசிக்கப்பட்டது.)

In pativukal.com:—-  http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=377%3A-2011-1&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

 

                       
 

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ssakthithasan
  ஆக 31, 2011 @ 01:59:37

  அன்பின் சகோதரி வேதா,
  மெளனத்தின் பெருமைகளை அழகாய்க் கோர்த்துக் கொடுத்திருக்கும் பாங்கு கவிதையைத் தனி மெருகூட்டி ஒளிரச் செய்கிறது
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 01, 2011 @ 19:27:00

   அன்புச் சகோதரா! திரு சக்திதாசன்! மிக மகிழ்வடைந்தேன்.மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. http://reverienreality.blogspot.com/
  செப் 01, 2011 @ 17:13:31

  காயாகக் கசக்கும் மௌனம்
  வாயாடிக்கு வலி தரும் தேள்….

  இந்த மௌனம் அடிக்கடி எனைக்கொல்லும்… செவியையும் பிளக்கும்…
  நல்ல கவிதை…சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 01, 2011 @ 19:28:27

   அன்புச் சகோதரா! ரெவேரி! மிக மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Dhavappudhalvan
  செப் 07, 2011 @ 14:31:39

  காத்திருக்கும் காதலரின் தனிமை மெளனம்,
  கூண்டில் அடைப்பட்ட புலியாய் தவிக்க செய்யுமே இம்மௌனம்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 07, 2011 @ 16:37:14

   மிக்க நன்றி சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  செப் 09, 2011 @ 17:26:34

  முனைவென்றி நா சுரேஷ்குமார் wrote:-
  அருமை…
  10 hours ago · LikeUnlike.

  முனைவென்றி நா சுரேஷ்குமார் wrote:-
  ‎’உரிய நேரத்து மௌனம்
  எரிய வைக்கும் உண்மையை.’ என்ற கருத்தில் எரிய என்பதற்கு பதிலாக புரிய என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது எனக்கு.
  10 hours ago · LikeUnlike.

  முனைவென்றி நா சுரேஷ்குமார் wrote:-
  நான் சொன்ன கருத்தில் ஒரு திருத்தம். எதிர்த் திசையில் உள்ள நபர் கோபப்பட்டால் மௌனம் நம்மை புரிய வைக்கும். எதிர்த் திசையில் உள்ள நபர் நாம் பேச வேண்டும் என எதிர்பார்த்தால் மௌனம் உண்மையை எரிய வைக்கும். பெரும்பாலும் நீங்கள் சொன்ன கருத்தே சரி. நான் சொன்ன கருத்து சிறுபான்மையாகவே பொருந்தும். இறுதியாக நீங்கள் சொன்ன கருத்தே சரி. ஏனெனில் பெரும்பான்மை தான் சரியென ஏற்றுக்கொள்ளப்படும்.

  Vetha wrote :-
  mikka nanry sakothara! god bless you.

  மறுமொழி

 5. கோவை கவி
  செப் 09, 2011 @ 17:27:24

  வசந்தா சந்திரன், Saravanai Saravanan and 2 others like this..

  Sujatha Anton wrote;.
  மெளனம் தரும் உறுதி வாழ்க்கையின் ஒவ்வொரு அடிக்கும்
  வழிகாட்டி. கற்றுக்கொடுத்து வழிகாட்டுபவை…அருமை ”வேதா”
  வாழ்த்துக்கள்.

  Vetha wrote:-
  Mikka nanry sujatha. God bless you.

  மறுமொழி

 6. anbudanjayaram
  ஜன 07, 2012 @ 15:25:06

  மௌனத்தின் மற்றொரு
  பக்கத்தை காட்டி விட்டீர்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: