45. மாற்றங்கள்.

மாற்றங்கள்.

 

கோள்கள் சுழலக் காலக் கணிப்பு.
கோலம், கொள்கை, குணம், வயது,
ஞாலம் போற்றும் இயற்கை, பருவம்,
ஞானம் தரும் அறிவு, கவனம்,
வான முகிலாய் மாற்றம் காணும்.
வாழ்வும், தாழ்வும், வளமான அன்பும்
வானவில்லாய், பாலைவனக் கானலாய்
வசமாகும் கணத்தில் வரம்பில்லா மாற்றங்கள்.

மாற்றங்களில் மயக்கம் தேற்றாத நெஞ்சில்
நாற்றம், சீற்றமாய்த் தோற்றாது சிதைவு.
ஆற்றலால் ஏற்றம், ஊற்றான புகழும்
போற்றல், மகிழ்தலும் பொறிப்பது மாற்றம்.
சலனமற்ற நீரில் பலமாகும் பாசி.
விலகாத நீரில் விரவாது மாற்றம்.
விரக்தி தொலைக்கும் வித்தியாச அனுபவம்.
வியப்பு, விசனம் குவிப்பது மாற்றம்.  

மாற்றம்.  

தன்னிலையிலும் உயர் முன்னேற்றம்,
முன்னிலையிலும் தாழ்ந்த கீழிறக்கம்,
ஓன்று போல மற்றொன்றில்லாதது மாற்றம்.
ஓன்றிய இயக்கத்தின் இடைவேளையும் மாற்றமே.
தோன்றிய பிறந்த ஊர், வளர்ச்சி
அன்றாட வாழ்வு, அனுபவங்கள், சூழல்,
நின்றோடும் கல்வி, காதல், திருமணம்
ஊன்றிய தாய்மை, குழந்தைகளாலும் மாற்றம்.

நேற்றைய மலைப்பிரதேச இல்லத்தரசி வாழ்வு
மாறியது இனக்கலவரத்தால் புலம் பெயர்வாய்.
மேற்குலகோருடன் டென்மார்க் மொழிக் கல்வி
அற்புதம் ”பெட்டகோ” வெனும் சமூகஅங்கீகாரம்.
மாற்றம் சுயகாலூன்றிய சுதந்திர நிலை.
பெற்ற பொருளாதாரம் வசதியற்ற பிள்ளைக்கு
உற்றபடி உதவும் பத்து வருட நிறைவு.
ஊற்றான கவி, ஊடகங்களோடு பயணம்.

ஏற்றிய கவிஒளி நாடுகள் தோறும்
வேற்றுமை அழித்து நல்ல உள்ளங்களை
தோற்றியது அறிமுகம் எழுத்தாள நண்பர்களாக
மாற்றம் இது பெரும் மாற்றம்.
ஊறுகாய் போன்றது அனுபவ மாற்றம்.
தேறுதலாயிது சுவை மாற்றும் ரசனை.
விஞ்ஞானக் கோட்பாட்டுக் கூற்று, ஒன்றிலிருந்து
ஒன்று மாறுதலேயன்றி அழிவதில்லையாம்.

11-11-2007

 

பா ஆக்கம்.  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2007

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Pathivukal web site.august poems:-  

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=974%3A-2012-&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

 

                     

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dhavappudhalvan
  செப் 04, 2011 @ 16:04:58

  மாற்றங்களின் தன்மையை அழகாக அருமையாக பதித்திருக்கிறிர்கள் சகோதரி.

  மறுமொழி

 2. கோவை கவி
  செப் 07, 2011 @ 17:00:46

  மிக்க நன்றி சகோதரா! உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

  மறுமொழி

 3. ssakthithasan
  செப் 13, 2011 @ 10:55:27

  அன்புச் சகோதரி வேதா,
  மாற்றத்தின் நியாயத்தை மனதை மயக்கும் அன்னைத் தமிழின் வரிகளைக் கொண்டு வனப்புடன் வடித்தமை. அருமை.
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: