5. மொழி.

 kananyuu

மொழி

ணர்வு ஊற்றின் உருவம்.
உயிர்க்கும் சிந்தனையின் உருவம்.
புரிதலைப் பகிரும் சாதனம்.
புரிந்துணர்வின் ஆழி, மொழி.
சைகைமொழிக் கொரு உயிர்
ஊமைமொழிக் கொரு உருவமாய்
கைப்பிடியாகும் மொழி, சமூக
விழியாக மனிதனுக்கு மொழி.

வேற்று உயிரினங்களில் மனிதனை
வேறுபடுத்தும் உன்னதம் மொழி.
வேற்றுக் கிரகங்களில் காலூன்றிய
வெற்றியின் ஆதாரம் மொழி.
கற்காலம் முதல் கணனி வரை
ஏற்றமுடை வளர்ச்சியின் வரை.
அற்புத நாகரீக உச்சாணியின்
ஊற்று, அச்சாணி மொழி.

ரம்பரைக்குத் தகவல், வாழ்வு
பழக்க வழக்கங்கள் பரிமாற,
குழுநிலை மக்களிணைய ஆதியில்
பேச்சுவழக்கு உறவு வளர்த்து
படியேறியது வந்த வடிவத்தில் எழுத்துரு.
வாசிக்க கல்வெட்டு, ஓலைச்சுவடிகளாக
வரலாறு சந்ததிகளுக்கு பகிரப்பட்டது.

க்களொரு கூட்டத்து வாழ்வு – அதை
நோக்கும் விதம், உணர்வு,
பார்க்குமதன் சிந்தனை, கொண்டாடுதல்
மக்கள் பண்பாடாகிறது. – இவை
பழக்க வழக்கம், உறவுமுறை
விழாக்கள், கலைகளாக வெளியாகி
குழுவின் அடையாளம், இருப்புமாகிறது.
எழுத்தில் பதிவாகி பகிரப்படுகிறது.

குழுவின் பண்பாட்டு முகத்திற்கு
மொழி விழியாகப் பதிந்துள்ளது.
குழுவின் பண்பாட்டை சந்ததிக்கும்
உலகிற்கும் வரலாறாக்குவது மொழி.
மொழி, குழு, பண்பாடொரு
முழுச் சங்கிலியாவதால் மொழி
தகவல் சாதனம் மட்டுமல்ல.
தனியின மொழி பண்பாடுமாகிறது.

மொழி – பண்பாடு பிரிக்கவியலாதது.
வழியின்றிப் பிரிந்தால் அவைகளின்
தனித்துவ பெறுமதியை அறிதலரிது.
தமிழ் பண்பாடு வளர்க்க
தமிழ் பண்பாடு அறிய
தமிழே ஆரம்பம், அடிப்படை.
தமிழெனும் விழியால் உலகைப் பார்த்து
தடம் பதிக்க தமிழ் பேச வேண்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
3-01-2009.

(ரி.ஆர். ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam web site :_  http://www.muthukamalam.com/verse/p775.html

               

 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ssakthithasan
  அக் 01, 2011 @ 21:35:39

  அன்பின் சகோதரி வேதா,
  மொழியைப் பற்றிய உங்களது பா அற்புதம். அருமையான சொற்களைக் கோர்த்து தமிழோடு இசை பாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2011 @ 20:32:44

   மொழி பற்றி மொழியில் ஆர்வம் கொண்ட தாங்கள் கருத்திட்டமைக்கும், வலையின் வருகைக்கும் மிக மகிழ்வும் நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. umah
  அக் 20, 2011 @ 00:06:25

  அருமை! வாழ்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 17:48:38

   அன்புறவே உமா! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். நேரமிருக்கும் .போது வருகை தாருங்கள். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. arulmozhisrinivasan
  அக் 20, 2011 @ 08:40:56

  அடடா மொழி பற்றி ஆராச்சியே நடந்து உள்ளது போலும்
  அருமை மொழிபற்றியதகவல் கவிதைவடிவில் சபாஸ்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2011 @ 18:01:42

   ஆமாம் படிப்பவைகளை அப்படியே மற்றவர்களும் அறிய கவிதையாக்கி விடுவேன், எனது மொழியில் முழுவதையும் கொண்டு வர முடியாதே..ஆராய்ச்சிக் கவிதை போலவே உள்ளது இப்போது பார்க்க.
   ஆச்சரிய வரவு சகோதரரே.
   அன்பு நன்றியும், மகிழ்ச்சியும்
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 14:06:14

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: