47. சத்தியம்.

 

சத்தியம்.   

 

 

பார்த்தது கேட்டதைப் பச்சையாய்ப் பேசுதல்
சத்தியம், உண்மை, வாய்மை என்போம்.
சத்தியமென்பது உயர் மனத்தூய்மை,
பத்தியமானது, வாழ்வின் உன்னத ஒளிச்சுடர்.

சத்தியம் பேசும் மனிதரை இத்தரை
உத்தமர் என்று முத்திரை குத்தும்.
‘சத்தியமே இலட்சியம்’ பேசுதல் சுலபம்.
நித்திய வாழ்விலது கத்தியில் நடத்தல்

சத்தியம் பேசிய அரிச்சந்திரன், காந்தி
எத்தனை துன்பம் கொண்டார் படித்தோம்.
கத்தி, பசியெனும் கடின துன்பம்
அசத்தியம் பேசவும் ஆக்கிடும் மனிதனை.

ஊக்கம் தரும் சத்தியப் பாதை
பூக்கள் பரப்பிய பாதையாகும் ஒருவனுக்கு.
ஈரணம்(கள்ளி) வளரும் பாலைவனம் ஆகாது
பூரண மனித நேயதேசமாகும் வாழ்வு.

 

 

பா ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-7-2008.

(3-7-2012இ செவ்வாய்க் கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில் என்னால் இக் கவிதை வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam.  –   http://www.muthukamalam.com/muthukamalam_kavithai485.htm

 

                            

 

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dhavappudhalvan
  அக் 04, 2011 @ 17:14:36

  அருமையான ஆக்கம். வாழ்வில் சத்தியம் தவறாமை மிக கடுமையானது ஒன்றாகும்.

  மறுமொழி

 2. ssakthithasan
  அக் 05, 2011 @ 02:38:40

  அன்பின் சகோதரி வேதா,
  சத்தியம் பேசுவதன் அவசியம், அசத்தியம் பேசுவதால் வரும் அல்லல்கள், சத்தியம் பேசியவர்களின் உதாரணம் என சத்தியத்தின் பலவடிவங்களை வர்ணம் தீட்டிக் காட்டும் உங்கள் கவிதை அற்புதம்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 30, 2011 @ 21:11:59

  Kalam Kadir wrote on30-10-2011 :-
  சத்தியம் என்பது ஒரு பத்தியம்

  Vetha ELangathilakamwrote:-
  UHu.!..arumai….mikka nanry…….vaalthukal.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: