3. சரஸ்வதி துதி.

சரஸ்வதி துதி.   

ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்                                                                                   ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஒம்

( சுந்தர வதனி சுகுண மனோகரி மந்தகாசமுடை மதிவதனி
எனும் ராகத்தில்……)

சிந்து பாடும் அடியார்கள் கரங்கள்
ஏந்தி உன்னைத் தொழுதிடவே
காந்த ஒளியுடை அருள் முகத்தோடு
சிந்திடுவாய் உன் காட்சியினை…..                      ( ஓம் சக்தி ஓம் )

பந்துகளான தேவர்கள், பாணர்கள்
வந்து புடை சூழ அலங்காரமாக
துந்துபி நாதங்கள் ஒலித்திடவே
சுந்தரமாயிங்கு வந்திடுவாய்.                                    (ஓம் சக்தி ஓம்…)

தரமுடை வீணை அணியாக
உரமுடன் வாழ்ந்திட நூலொன்று
கரத்தினில் ஏந்திய மதுரவாணி
பிரம்மவிலாசினி வருவாய் அருள்வாய்.          (ஓம் சக்தி ஓம்…)

மலர்ந்த தாமரை ஆசனம்அமர்ந்த
அலர்ந்த முகத்தழகு நாயகி
அறிவின் அரசி அர்ச்சிக்கிறோம்.
அற்புத நாயகி சரணம் சரணம்.                                ( ஓம் சக்தி ஓம்….)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
14-10-2007.

( சரஸ்வதி பூசையென்பதால் இசையெடுத்து, யேர்மனிய சிறுமி காயத்திரி சிவநேசன் இலண்டன் தமிழ் வானொலியில் பாடினார் )

In Anthimaalai web site :_   http://anthimaalai.blogspot.com/2011/10/3.html

                                   

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜூன் 22, 2012 @ 09:20:37

  அன்பினிய சகோதரி வேதா,
  கவி படைக்கும் அனைவர் சிந்தையில் அருள் பாலிக்கும் கலைவாணியின் பெருமை சொன்னீர்கள். அக்கலைவாணியின் அருளால் உங்கள் கவிவளம், கட்டுரை வளம், கதைவளம் பெருகி ஞாலமெலாம் பெரும் புகழ் பெறுவீர்கள். அன்பான வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. Vetha.Elangathilakam.
  ஆக 02, 2012 @ 21:45:24

  மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

  மறுமொழி

 3. மகேந்திரன்
  அக் 11, 2013 @ 20:59:49

  வெண்தாமரை மேலமர்
  சாரதா தேவிக்கு
  உளம் குளிரச் செய்யும்
  அழகிய பாமாலை வேதாம்மா…

  மறுமொழி

 4. sujatha
  அக் 12, 2013 @ 05:19:26

  தரமுடை வீணை அணியாக
  உரமுடன் வாழ்ந்திட நூலொன்று
  கரத்தினில் ஏந்திய மதுரவாணி
  பிரம்மவிலாசினி வருவாய் அருள்வாய்.
  கலைவாணியின் கவிபாடிய அழகு அருமை…..கவிச்செல்வம் நிறைந்து, எழுத்துப்பணி தொடர இந்நன்னாளில் ஆசிகள் கிடைக்கட்டும். “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 5. sujatha anton
  அக் 02, 2014 @ 21:06:16

  சரஸ்வதி துதி கிடைத்திட வேண்டுகின்றோம். அருமை…தமிழ் சொற்றொடர்கள் பாடலுக்கு அமைய அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. தங்கள் தமிழ் எழுத்து அருமை.
  சரஸ்வது துணை என்றும் அருள்பாலிக்கட்டும். தமிழ் வளர்க.!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: