2. தாயின் சிறப்பு – புலம்பெயர் நாட்டில்.

 

தாயின் சிறப்பு – புலம்பெயர் நாட்டில். 

வாழ்வில் சிறந்த
வரமான பொன்னோவியம்.
உறவெனும் தூரிகையின்
சிறப்போவியம் தாய்மை.
தவமாக நாம் பெற்ற
கருவறையின் உன்னத உறவு.
உயிர் கொண்டு எமை
ஆதரிக்கும் தாய் தேவதை.
          குழந்தையின் பாதமலர்களைக்
          குவளை விழிகளில் ஒற்றி
          குதூகல முத்தம் தருவாள்.
          குறைகள் மறப்பாள் தாய்.
          முலையை வாயினுள் நுழைத்து
          முலைப் பாலீந்த தாயன்பு.
          முத்தத்தால், தன் முழு அன்பால்
          முள்ளில்லா வேலியிடும் தாய்மை.
ணர்வின் இறுக்கத்தில் இறுகிய
மூச்சுக் காற்று தாயின்
இணைப்பில் விடுதலையாகி பெருமூச்சாய்
வெளியாகும், உடல் இளகும்.
எடுக்கக் குறைவின்றித் தாய்
கொடுத்திடும் நல் அன்பால்
அடுத்த சிந்தனையற்று பிள்ளைகள்
எடுத்தடியிட்டு உலகில் உயர்வார்.

விதை ஆக்கியவர்
நகுலபுத்ரி –  என்ற பெயரில் நான் எழுதியது.
டென்மார்க்.
5-3-2007.

( ரி.ஆர்.ரி தமிழ் அலையிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                  

Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 08, 2015 @ 19:00:09

  Kannadasan Subbiah :-
  கவிதை அருமை
  நல்வாழ்த்துகள்

  Pisupati Subramanyam :-
  அடித்தாலும் உதைத்தாலும்
  அள்ளி அரவணத்தாலும்
  எள்ளி நகையாடினாலும்
  என்றும் உனை விட மாட்டேன்.

  பாலூட்டி சீராட்டி,பள்ளிக்கு அனுப்பி
  படிக்கவைத்து தமிழ் தேனைச்
  சுவைக்க வைத்த என் தாயே
  உலகில் உனக்கிலை ஈடே !
  …>>>…P.S.

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 11, 2015 @ 16:47:09

  மகாதேவன் செல்வி :-
  அழகான கவிதை
  11-2-2015

  Vetha Langathilakam:-
  mikka nanry sako…
  11-2-15

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 11, 2015 @ 21:52:12

  Kannan Sadhasivam :-
  அழகம்மா…
  11.2.15

  Malini Mala :-
  தன் மூச்சு நிற்கும் வரை தாங்கிப் பிடிக்கும் தெய்வமும் அவளே. நன்றி மா இந்த வரிகளுக்கு.

  Rajaji Rajagopalan :-
  உங்களின் ஒவ்வொரு வரியிலும் என் அன்னையைக் கண்டேன்.

  Subajini Sriranjan:-
  அருமை….
  இறுதி மூச்சு இருக்கும் வரை
  குழந்தையாக நினைக்கும் ஒரு உள்ளம் தாய் ………See More

  Vetha Langathilakam:-
  Kannan. Sadhasivam:- தாயின் சிறப்பு…அருமை..அதில்,இறுகிய மூச்சுக்காற்று தாயின் “இணைப்பில்”, அணைப்பில் என்றிருந்தால் அர்த்தம் கூடுமோ என்று எனக்கு ஆசை.
  Vetha.Langathilakam:- கண்ணன் சதாசிவம்..
  உமது கருத்து நல்ல பொருத்தம்
  அப்படியே மாற்றியுள்ளேன்….மிக்க நன்றி.
  வாழ்க!..வளர்க!
  11-2-15.

  Kannan Sadhasivam:-
  உங்கள் பெருந்தன்மைக்குத் தலைவணங்ககுகிறேன்.

  Rathy Srimohan:-
  எமக்கு உயிர் தந்த தெய்வம்…. அருமையான வரிகள் ….

  Vetha Langathilakam :-
  Dear Malini – R.RGopalan – Suba – Rathy…மிக மகிழ்வு உங்கள் வரிகளிற்கு.
  மிகுந்த நன்றியும்.

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 12, 2015 @ 11:19:10

  Prema Rajaratnam:-
  உறவெனும் தூரிகையின் சிறப்போவியம் தாய்மை,,,,அருமை
  12-2-15

  Mani Kandan:-
  தவமாக நாம் பெற்ற
  கருவறையின் உன்னத உறவு. அருமை அருமை

  Vetha Langathilakam :-
  Nanry prema..and Mani Kandan …makilvu..

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  பிப் 12, 2015 @ 14:36:20

  தாய்க்கு நிகர் எது? அன்னையின் பெருமை சொல்லும் அழகிய கவிதை

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 13, 2015 @ 21:51:01

  Gomathy Arasu :-
  எடுக்கக் குறைவின்றித் தாய்
  கொடுத்திடும் நல் அன்பால்
  அடுத்த சிந்தனையற்று பிள்ளைகள்
  எடுத்தடியிட்டு உலகில் உயர்வார்.

  Gomathy Arasu:-
  உண்மை. அழகான , அன்பான கவிதை

  Sujatha Anton:-
  வாழ்வில் சிறந்த வரமான பொன்னோவியம். உறவெனும் தூரிகையின் சிறப்போவியம் தாய்மை உண்மை. நிறைந்த தமிழ். கவித்துவம் அருமை. வாழ்க தமிழ்

  Vetha Langathilakam:-
  Dear Gomathy – Sujatha…மிக்க மகிழ்ச்சி
  கருத்திடலிற்கு மிகுந்த நன்றி.
  13-2-15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: