53. சுழற்சி வாழ்வு.

 

சுழற்சி வாழ்வு.

 

காதலில் தொடங்கிய கருவின் பயணம்
காசினியில் தவழும் குழந்தை உருவம்.
தூரிகை திருத்தம் அழகோவியமாய்
காரிகை எழுதும் அழகுக் கவிதையாய்
நாரிகை வயிற்றுச் சிற்பக் குழந்தை
பேரிகை மனதில் கொட்ட உலாவி
யாரிதுவென நிமிரும் வாலிபப் பருவம்
சூரியகாந்தமாய்ப் பலரைக் கவரும்.

நிலையூன்றும் வாலிப மனம் சிகரம்.
தலைகீழாக நிற்கும், சரித்திரம் மாற்றும்.
மலையான செயலும் கடுகாய்ப் பகரும்.
நிலையாக சாதனை நிகழ்த்தும் பருவம்.
வேலை, வேதனம், வேக வாழ்வுச் சதுக்கம்
விலையில்லாப் படிப்பினை கலையாகச் செதுக்கும்.
கலை பொங்கும் காதல் துணையின் சந்திப்பு.
வலைப் பின்னலாகச் சம்சாரம் இணைப்பு.

காலை மாலையென காலம் நேரமின்றிக்
காதல் பூவன இல்லறப் பூங்காவில்
முப்பாலும் அருந்தி முழுமையாய் மூழ்கி
அப்பாலும் செல்லும் சுழற்சி வாழ்வு.
இல்லறத் தொழிற்சாலை, இனிய குழந்தைகள்
நல்லறம் நடமிடும் நவரச நந்தவனம்.
பல்வினை பரிமாறும் பரிசோதனைப் பவனம்.
நல்வினைகள் நலங்கிடும் நம்பிக்கை மன்றம்.

 

து வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-7-2002

( ரி.ஆர். ரி தமிழ் அலை,  இலண்டன் தமிழ் வானொலி,  ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 
In pathivukal…March 2014 :- http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1362:-2013-1-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23
                                

 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ssakthithasan
  ஜன 05, 2012 @ 18:07:15

  அன்புச் சகோதரி வேதா,
  சொற்சுவை கூட்டி சந்தமிகு இனிமையான கவிதை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. அன்பான வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 19, 2012 @ 14:56:56

  தங்கள் அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: