54. தேன்கூடு.

 

 

தேன்கூடு.    

 

வாழ்வின் மரபியல் கோடு
காட்டும் உறவுக் கூடு
மீட்டும் இராகம் சுகத்தோடு,
கிட்டும் இனிமை தேன்கூடு.
இராணித் தேனீ மனைவியாய்
இராசா, குழந்தைகள் தேனீக்களாய்
பாச வாசம் வீசியாடும்
நேசக் குடும்பம் தேன்கூடு.


வட்டமிட்டு அன்பில் பிணைந்து
விட்டுவிலகாது ஆவலாய் இணைந்து,
கொட்டி அன்பைப் போர்த்திடும்
பட்டுக் காதலுறவும் தேன்கூடு.
ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து,
குற்றங்களை மன்னித்திடும் அனுபவத் துளிகள்
முற்றும் நிறைந்த தேனடைகளால்  உறவாகும்
கொற்றம் நிறை வாழ்வது தேன்கூடு.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
26-3-2006.

(சி.ஐ ரிவி,  ரி.ஆர்.ரி தமிழ் அலை, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

(பதிவுகள் இணையத்தளத்திலும் பிரசுரமானது.)

http://www.geotamil.com/pathivukal/poems_april2007.htm#vetha 

16-6-2012 in Muthukamalam.co web site:-    http://www.muthukamalam.com/verse/p949.html

 

                            

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. N.Rathna Vel
    டிசம்பர் 25, 2011 @ 02:37:06

    அருமை அம்மா.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

  2. ssakthithasan
    டிசம்பர் 26, 2011 @ 11:25:19

    அன்பின் சகோதரி வேதா,
    அருமையான பா ஆக்கியுள்ளீர்கள். இயற்கையின் வனப்பை மனித குடும்ப வாழ்க்கையோடு பின்னிப் பார்த்து வியந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: