57. வெண்ணிலா விவேகம்

வெண்ணிலா விவேகம்

 

லகுவில் இணக்கமுறா ஒற்றுமையால்
விலகிப் பிளவுறும் நாடுகள்,
உலகில் மூளுகிறது போர்.
கலகங்களின் காரணம் மனப்
பலகணி ஊடாகத் தெரிகிறது.
விலகும் விவேகமே தான்
நிலவாகாத விவேகம் தான்.

ற்புத்திரராய் மனிதர் உலாவ
சற்புத்திரராய் வாரிசுகளை உருவாக்க
கற்றவர்கள் உலகில் நிறைய
புற்றுநோயான போதைப் பொருள் விலக
சற்றும் உதவாத மதுவை விலக்க
சுற்றியுள்ளோருக்கு வேண்டும் விவேகம்.

ரணியில் தோரணமாகும் விவேகம்
அரணாக விளங்கும் அறிவு
இரணங்களற்ற வழி காட்டும்.
சரணாலயமான விவேகக் கூரையுள்
பூரணமாகப் புனையலாம் சாதனைகள்.
உதாரணங்கள் உலகில் ஏராளம்.

மிழனின் அடையாள மொழியான
தமிழை வளர்க்க வேண்டும் விவேகம்.
அனுபவம் பொன்னாகும். விரிவாக
அதைச் சிந்திக்க, வேண்டும் விவேகம்.
காலப் பிரமாணமறிந்து இயங்க
கருத்தான விவேகம் வேண்டும் உலகில்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
21-4-2007

( ரி.ஆர். ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.
இனிய நந்தவனம் சிறு சஞ்சிகையிலும் பிரசுரமானது.)

In vaarppu.com http://www.vaarppu.com/view/2723/ 

                                     

Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ஸ்ரீஸ்கந்தராஜா
    ஏப் 10, 2012 @ 17:04:41

    தமிழனின் அடையாள மொழியான
    தமிழை வளர்க்க வேண்டும் விவேகம்.
    அனுபவம் பொன்னாகும். விரிவாக
    அதைச் சிந்திக்க, வேண்டும் விவேகம்.
    காலப் பிரமாணமறிந்து இயங்க
    கருத்தான விவேகம் வேண்டும் உலகில்.

    வாழ்த்துக்கள் அம்மா!!

    மறுமொழி

  2. சக்தி சக்திதாசன்
    ஆக 27, 2012 @ 13:18:46

    அன்பினிய சகோதரி வேதா,
    விவேகத்தின் பெருமையை
    விபரமாகவே தந்தீர்
    விவேகமுள்ள சகோதரியே
    அன்பான வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

  3. கோவை கவி
    அக் 28, 2015 @ 17:32:35

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: