9. காதல் வெண்பனி.


 

காதல் வெண்பனி.    

பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

பூவினக் காதல் உணர்வால்
காவிரியாகும் நாளங்கள் பூச்சொரியும்.
சாவியாகிச் சாதனைக்கு உரமாகும்.
காவியங்கள் குவிக்கும் சஞ்சீவி.
பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.
பவித்திரமாய் உயிரை உசுப்பும்
தெவிட்டாதது. சொல்லித் தெரியாக்கலை.
ஆவியின் சீவதுளி காதல்.

காதற் கதகளி அரங்கேறாவிடில்
காட்டுவழிப் பாதை ஆகும்.
கூட்டுக் களி வெறுப்பாகும்.
மோட்டு வளைப் பார்வையாகும்.
ஏட்டுப் படிப்பு எகிறிவிடும்.
தீட்டென்று விலக்கு! யுகமுடிவல்ல.
தேட்டம் கொள்ளு! சக்கரவாழ்விது!.
பாட்டை மாற்று! பரணில் ஏறு!.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
17-9-2007.

(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)
in pathivukal…feb 13 -2013:- http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1336:2013-02-14-01-53-13&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23
தமிழ் ஓத்தேர்ஸ்.கொம் லும் பிரசுரமானது

http://www.tamilauthors.com/03/vetha03.html

                   

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 22, 2011 @ 09:52:47

  மிகவும் அற்புதமான படைப்பு!! படித்தேன்! இரசித்தேன்!! வியந்தேன்!! வாழ்த்துக்கள்!! அழகான சொல்ஆட்சி! அபரிமிதமான மொழிவளம்!! கற்பனைக்குள் வாராத காதல் இலக்கணம்!! அற்புதம்! அற்புதம்!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 20:55:49

   சகோதரர் சிறீஸ்கந்தராஜா! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி. மீண்டும் வந்து கருத்திடுங்கள் . இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சக்தி சக்திதாசன்
  ஜூன் 29, 2012 @ 20:54:34

  அன்பினிய சகோதரி வேதா,
  பனியை உருக்கிடும் ஆதித்யனின் கதிர் போல
  பாறையாகினும் உருக்கிடும்
  உள்ளத்தைக் காதலே !
  அதற்கோர் அழகிய தலைப்பு
  பனிக்காதல்
  அருமையான படைப்பு
  அன்னைமொழியின் வனப்பு
  என்றென்றும் என் மனதின் சுவைப்பு
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூலை 06, 2014 @ 05:43:57

  Raammohan Raammohan, Alvit Vincent, Sutha Hari and 2 others like this…

  Sutha Hari:-
  பனி எழுதும் கவிதை
  நுனிப் புல்லில் குவியும்.
  தனி அழகாய்ப் பொழியும். அருமையான கவிதை.

  Raammohan Raammohan :-
  சக்கர யுகமிது தேட்டங்
  கொள், பாட்டை மாற்று
  பரணியில்
  ஏறு …..!
  காதலின்
  பெருமையை
  சொல்லி..பின்
  தோல்வி ஏற்படின் தேட்டங்க கொள்ளவும் சொல்லிஅழகாய்
  விளக்கினீர்கள் வேதா மா !

  Yousuf MOhamed:-
  பிரமாதம்! நன்று!,

  Vetha ELangathilakam:-
  Mikka nanry Sutha – R.R and Y.MO. God bless you all.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: