3. உன் மையினால் பெண்மையினைக் கவிபாடு!

 

உன் மையினால் பெண்மையினைக் கவிபாடு! 

 

கண் மையினால் அழகூட்டும்
சின்னக் குயில் பெண்ணே! இன்றும்
பெண்மையென்று சொல்லிச் சொல்லியே
உன்னை அடக்க முயலும் பலர்!
உண்மை என்று அடங்கும் பெண்மையும்,
கண்ணாடித் திரையுள் நவீன உலகில்!
பெண்மை தனித்தனித் தீவாய், இரகசியமாய்,
கண்ணீர்க் கடலில் இன்றும் கொடுமையே!

பெண்மையே! மௌனம் உனக்கு நிர்வாணம்!
தொன்மைக் காலமல்லவே இது! பேசு!
உன்னைப் பலமாக்கு! தலை நிமிர்!
அண்மையில் வா! கண்ணீர் துடை!
நுண்மையான அறி வாயுதம் ஏந்து!
திண்மைப் புது எண்ணங்களை உன்
வெண்மை மன வயலில் தூவு!
நன்மையான இலட்சிய நீர் ஊற்று!
 
உன் ஈர்ப்பைச் செயலிற் காட்டு!
பெண்மையே! நீ மகா சக்தி!
தன்னோடு  சமமின்றி உன்னை ஏன்
வன்மையாய்ச் சிலர் கீழ் தள்ளுகிறார்?
ஆண்மைக்கோ, யாருக்கும் இது அழகல்ல!
ஊன்று கோலாய்த் தன்னம்பிக்கையை எடு!
உண்மையினால் பிழைகளைத் திருத்து! எழு!
உன் மையினால் பெண்மையினையக் கவிபாடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
27-2-2007.

( ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

In  muthukamalam.com:-     http://www.muthukamalam.com/verse/p950.html

 

 

                                 
 

Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. அஷ்வின்ஜி
  ஜன 14, 2012 @ 15:27:13

  //தொன்மைக் காலமல்லவே இது! பேசு!
  உன்னைப் பலமாக்கு! தலை நிமிர்!
  அண்மையில் வா! கண்ணீர் துடை!
  நுண்மையான அறி வாயுதம் ஏந்து!
  திண்மைப் புது எண்ணங்களை உன்
  வெண்மை மன வயலில் தூவு!
  நன்மையான இலட்சிய நீர் ஊற்று!
  உன் ஈர்ப்பைச் செயலிற் காட்டு!//

  சக்தியின் பெருமை கூறும் சத்திய வரிகள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 01, 2012 @ 18:16:35

   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா. தங்கள் இனிய வரவு அர்த்தமானது. கருத்திடலிற்கும் மிக மகிழ்வு. மனமார்ந்த நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:15:52

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- உன்னைப் பலமாக்கு! தலை நிமிர்!
  அண்மையில் வா! கண்ணீர் துடை!
  நுண்மையான அறி வாயுதம் ஏந்து!
  திண்மைப் புது எண்ணங்களை உன்
  வெண்மை மன வயலில் தூவு!
  நன்மையான இலட்சிய நீர் ஊற்று! ************************************************************************************** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  Like · Reply · 1 · 29 mins

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: