63. திமிர்.

 

 

திமிர்.  

திமிருக்கு அரசாய் நிமிரும் மானுடம்
திமிறும் ஆங்காரத் திமிங்கிலத்தால் விழுங்கப்படும்.
திமிருக்கு துணையான தினவெடுத்த மூளையால்
நிமிடப் பொழுதிலும் நிர்மூல அபாயம்.
திக்குத்திசை புரியாத சன்னத மனது
அக்கினிக் குளம்பாகி அங்கலாய்த்துக் குளம்பும்.
ஆக்கம் என்றெண்ணி மயக்க நிலையில்
அழிவுப் பாதையில் அடியிட்டு நகரும்.

மறைக்க இயலாத உணர்வுக் கலவை
பறையிடும் வரம்பற்ற வார்த்தைகளாய்
விறைத்த நாக்கால் விழுதாய் நழுவும்.
இறைவது கரும்பல்ல கயமைச் சுவையே.
அதீத திமிர்க் களைப்பில் வீசும்
அர்த்தமற்ற சொற் சவுக்குகள் மனிதனை
அளவின்றி நையப்புடைத்து நல் உறவை
முழம் முழமாய் களற்றி எறியும்.

பணியேன் என்ற குனியாத மனம்
துணிவுக் கம்பத்தால் தூரச் சாய்ந்திடும்.
போதனை கொடுப்பதுபோல் போதனையும் கேட்கலாம்,
தீதினை விலக்கும் சோதனை கலைக்கும்.
குவியும் ஆணவத் தீமிதிப்பில் சுரக்கும்
அமிலம் மனிதனை உமித்துவிடும்.
அருமை உடலை நோயாக்கும்.
அடுத்தவர் உறவையும் அறுத்துவிடும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்
4-9-2007.

(இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam web site:-      http://www.muthukamalam.com/verse/p951.html

In    Muthukamalam:-   http://www.muthukamalam.com/verse/p1034.html

 

 

 

                                      

                                    

                             

 

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 25, 2014 @ 09:31:20

  IN FB: 25-5-2014.
  Siva Ramani:-
  அருமை உண்மை

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 22, 2017 @ 07:59:52

  Dhavappudhalvan Badrinarayanan A M தீய்த்திடும் அருமை படைப்பு கவியரசி. 🙏
  22-10-2917

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 30, 2017 @ 12:28:26

  Maniyin PaakkalGroup admin :- பணியேன் என்ற குனியாத மனம்
  துணிவுக் கம்பத்தால் தூரச் சாய்ந்திடும்./மிகச்சிறப்பு
  30-10-2017
  vetha:- mikka nanry bro

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: