64. சுமைகள்.

சுமைகள்.  

 

மனதால், உடலால் சுமக்கும் சுமைகள்
கனத்து அழுத்தக் கவனம் சிதைக்கும்.
அளவான சுமைகளால் ஆரோக்கியம் பூக்கும்.
தளமாகத் தரமாக உடலைக் காக்கும்.
உயரத்திலும் அதிகரித்த உடலின் நிறை
உல்லாசம் தொலைக்கும் தீராத குறை.
உயிரினைச் சிறுகச் சிறுகக் குறைக்கும்.
உவகையைக் களவாடும் தசைச் சுமை.

 

சுமைகள் என்போம்  நாமாக – மனம்
சுகமாய்ச் சுமப்பது, சுமையல்ல.
நினைவு தான் பெரும் சுமையாகும்.
இமைகள் கண்ணிற்குச் சுமையல்ல.
இமைக்குள் பார்வையும் சுமையல்ல.
நகைச்சுவைச் சுமைகள் தினம் சேர்த்து
தொகை நோய்ச் சுமைகள் விரட்டுவோம்.
மிகை மகிழ்வுத் தோகைகள் விரியட்டும்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-12-2007.

(இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam web site:-    http://www.muthukamalam.com/verse/p1035.html

(20-8-2013 மாலை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் கவிதை பாடுவோம் நிகழ்வில் இக் கவிதை என்னால் வானொலியில் வாசிக்கப் பட்டது.)

 

 

                                

 

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 09, 2017 @ 16:14:11

  Subi Narendran // நினைவு தான் பெரும் சுமையாகும்.// நிச்சயமாக. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  Vetha Langathilakam ;- கற்றை வார்த்தைகள் கொண்டே
  கருத்தூன்றி நம்பிக்கை விதை
  கருக்கூட்டும் சகோதரி
  ஆழ்ந்த அன்பு…
  9-10-2017

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 17, 2017 @ 10:21:14

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 21, 2017 @ 16:05:59

  Gomathy Arasu:- நகைச்சுவைச் சுமைகள் தினம் சேர்த்து
  தொகை நோய்ச் சுமைகள் விரட்டுவோம்.
  மிகை மகிழ்வுத் தோகைகள் விரியட்டும்.
  · 4 October at 22:31

  Vetha Langathilakam :- பேரன்புடன் மிக மகிழ்வு சகோதரி தங்கள் அன்பான கருத்திற்கு.

  Gomathy Arasu:- அருமையா சொன்னீர்கள்.
  · 4 October at 22:32

  Vetha Langathilakam :- பேரன்புடன் மிக மகிழ்வு சகோதரி தங்கள் அன்பான கருத்திற்கு.

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 21, 2017 @ 16:07:53

  Verona Sharmila அருமை
  · 5 October at 11:58

  Vetha Langathilakam ஆழ்ந்த அன்பு வெரோனா
  · 5 October at 13:34

  Subi Narendran // நினைவு தான் பெரும் சுமையாகும்.// நிச்சயமாக. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  Vetha Langathilakam ;- கற்றை வார்த்தைகள் கொண்டே
  கருத்தூன்றி நம்பிக்கை விதை
  கருக்கூட்டும் சகோதரி
  ஆழ்ந்த அன்பு…
  9-10-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: