65. அவசரம்.

அவசரம்.

அவசரம் ஒரு குறை வரம்,
அவலம் பெருக்கும் அந்தரம்.
அவதி அவதியாய்ப் படும் அவசரம்
அவஸ்தையான மன நெரிபாடு.
அவசரம் மனிதனுக்கு அவசியமற்ற
அவப்பொழுதை உருவாக்கும்.
அவசர காரியம் சிதறிப் போகும்.
அவசர உணவும் புரையேறிப் போகும்.

தேகம் படபடத்து நிதானமிழக்கும்.
நாகரிகமின்றி வார்த்தைகள் நழுவும்.
வாகாக வேலைகள் வாகை பெறாது.
தேகாரோக்கியமும் அவசரத்தால் நழுவும்.
அவதானமாய்ச் செய்யும் செயற்பாடு – மனம்
உவகையாய்க் கொள்ளும் சுகப்பாடு.
பத்திரமான நிதானமும் நிறைவும் ஒரு
மொத்தமான பூரண பலன் தரும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்..
ஓகுஸ், டென்மார்க்.
9-3-2008.

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

n vaarppu web site:-     http://vaarppu.com/view/2670/

In This poem in     5-3-2013  :-   http://www.tamilauthors.com/03/515.html

                                
 

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜன 07, 2014 @ 13:40:12

  அன்பினிய சகோதரி,
  அவசரத்தின் அவலத்தை
  அவசியமாய் உணர்த்திய உங்கள்
  அருமையான் கவிதை கண்டு
  அகமகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 04, 2018 @ 12:12:32

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 04, 2018 @ 12:14:30

  சிறீ சிறீஸ்கந்தராஜா வாழ்த்துக்கள் அம்மா!!
  2013

  Vetha Langathilakam:- Mikka nanry Sri….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: