66. இச்சை வெறி இம்சை.

இச்சை வெறி இம்சை.

பளிங்கு நீர் கவர்ந்தது
பாதமிட மனம் விழைந்தது.
பதமாய் குளத்தை நெருங்க
பரவிய அசுத்தம் உறுத்தியது.
குளத்தை இறைக்க முனைந்து
குறையை மறந்த நீச்சல்.
நறையாம் போதையில் நனைவு.
கறையை மறந்த பாய்ச்சல்.

மறுபடி குளமிறைத்திட திரை
மறைவால் எழுவான் ஒருவன்.
இப்படியே தானாக ஏமாந்து
செப்படி வித்தைப் புகழிலே
தப்படி எடுப்பதும் தெரியாது
தெப்பமாய் நனைவது மானுடம்.
சப்பறமாயும் நிமிர்ந்து ஒளிர்வார்.
குப்புற வீழ்ந்தும் அழிவார்.

இயக்கம் இமயத்துச் சிவன் நிலை.
இலக்கத் தொகுதியில் முதல் நிலை.
இகழ்வோ, தாழ்வோ அர்த்தமோ இன்றி
இகலோகக் கவனிப்பை ஈர்த்திழுக்க
இச்சை வெறி இராட்சத வேட்டை.
இறகு கோதும் பச்சை நெடி மயக்கம்.
இல்லமெங்கும் திமிரிடும் போதை அச்சச்சோ!
இம்சை தழும்பும் பொம்மலாட்டம் வன்முறையே.

போதி மரத்துப் புத்தரையும் உலகு
போற்றிடும் இயேசு, முகமத், நாயன்மாரை
சோதியான வழிகாட்டியென்று
சேதி சொல்லும் உலகிது – உயர்
நீதி ஒரு சிறகென்று வாழ்வு
வீதியின் சீவஇயக்கத்தில் நிதம்
வாதிட்டு அர்த்தம் காணும் முனைவில்
ஊதிடும் இச்சைவெறி இம்சை வன்முறையே.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
26-11-2007.

( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர். ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.

In Muthukamalam web site:-      http://www.muthukamalam.com/verse/p1054.html

 

                            

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  பிப் 25, 2012 @ 01:08:24

  போதி மரத்துப் புத்தரையும் உலகு
  போற்றிடும் இயேசு, முகமத், நாயன்மாரை
  சோதியான வழிகாட்டியென்று
  சேதி சொல்லும் உலகிது – உயர்
  நீதி ஒரு சிறகென்று வாழ்வு
  வீதியின் சீவஇயக்கத்தில் நிதம்
  வாதிட்டு அர்த்தம் காணும் முனைவில்
  ஊதிடும் இச்சைவெறி இம்சை வன்முறையே.//

  அருமையான வரிகள் வேதா.
  கவிதை சொல்லும் விஷ்யங்கள் மிக ஆழமானவை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 08:12:26

   ஆமாம் சகோதரி சிலருக்கு கவிதை வாசித்தால் புரியாதே! மிக ஆழமான கருத்துத் தான். தங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சக்தி சக்திதாசன்
  பிப் 26, 2012 @ 06:28:14

  அன்பினிய சகோதரி வேதா,
  இத்தனை அழகிய கவிதையில்
  எத்தனை விஷ்யங்கள் புதைத்து
  வித்தக அறிவினை ஊட்டும்
  மெத்தக கவிதைகள் யாத்து
  தந்திடும் ஆற்றல்கள் அனைத்தும்
  தரத்தின் உயர்வினைக் காட்டுது
  வாழ்க ! வாழ்க ! இதுபோல்
  இன்னமும் முத்துக்கள் தருக
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: