6. என் தமிழ் மொழி.

120799

என் தமிழ் மொழி.

 

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி
என்பிலும் உறைய ஊற்றிய மொழி
என் தமிழ் மொழி மனதில்
தேன் பாய்ச்சும் தினம்தினமாய்.

திக்குத் தெரியாத காட்டிலும் மனம்
பக்குப் பக்கென அடித்த போதும்
பக்க பலமாய் மரக்கலமாய் நான்
சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி.

பிற மொழிக் கடலில் நான்
நிற பேதம், பல பேதத்தில் புரளும்
திறனற்ற பொழுதிலும் என் தமிழ்
பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும்.

கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின்
வழிகாட்டி என்று என்னை நிதம்;
தாலாட்டி மகிழ்வில் நீராட்டிச்
சீராட்டும் என் தமிழ் மொழி.

தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.
கூன் விழாத மொழி, புலத்தில்
ஏன், வீணென்பாரும் உண்டு. – முதுகு
நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
21-02-2008.

(இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam web site:-    http://www.muthukamalam.com/verse/p1055.html

                    

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 22, 2014 @ 20:47:51

  Anand raj…..in Fb..
  கூன் விழாத மொழி, புலத்தில்
  ஏன், வீணென்பாரும் உண்டு. – முதுகு
  நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
  தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.

  Seen by 7
  Sutha Hari and Vino Antony like this…

  Sutha Hari:-
  கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின்
  வழிகாட்டி என்று என்னை நிதம்;
  தாலாட்டி மகிழ்வில் தினம்
  சீராட்டும் என் தமிழ் மொழி. அருமை
  ..
  Sivakumary Jeyasimman
  கூன் விழாத மொழி, புலத்தில்
  ஏன், வீணென்பாரும் உண்டு. – முதுகு
  நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
  தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  கூன் விழாத மொழி, புலத்தில்
  ஏன், வீணென்;பாரும் உண்டு. – முதுகு
  நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
  தன்மான அடையாளம் என் தமிழ் மொழி…..!!
  கூன் விழாத மொழி, புலத்தில்
  ஏன், வீணென்;பாரும் உண்டு. – முதுகு
  நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
  தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.

  .

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 28, 2014 @ 12:56:40

  You, Ma La, Raammohan Raammohan, Geetha Mathivanan and 5 others like this..

  Raja Mohamed:-
  வாழ்க நின் தமிழ் தொண்டு,பரவட்டும் நம் தமிழின் அருமை உலகெல்லாம்

  Ma La:-
  தமிழுக்கு மதுவென்று பேர்! –
  இன்பத் தமிழ் எங்கள்
  உரிமைச்செம் பயிருக்கு வேர்! இனிய காலை வணக்கம்

  Vetha ELangathilakam Mikka nanry Raja Mohamed and Ma La.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: