69. சத்தம்.

 

சத்தம்

 

ஒன்றுடன் ஒன்று மோதுகையில் துளிர்க்கும்,
ஒன்றுடன் ஒன்று இணைகையில் வளரும்,
ஒன்றும் காற்றின் கூட்டிணைவு சத்தம்.

சத்தம் அளவோடு பிறந்தால் இரசனை.
சித்தம் கிறங்கிடும் தித்திப்பில் சுரணை.
பித்தம், தித்தமும் மொத்தமாய்ப் பிரிவினை.

வேரான அடிப்படைச் சத்தம் ஓங்காரம்.
பேரான முத்துமொழி,  சத்தத்தில் பிரசவம்.
சீரான மொழி, பிழையுச்சரிப்பில் பாழாகும்.

பார்வையற்றோனுக்குச் சத்தம் அடையாளம்.
ஆர்வப் பாடகனின் குரல் –  சத்தம் பொக்கிசம்.
சோர்வைக் கலைக்கும் இனிய இசைச் சத்தம்.

இதயத் துடிப்புச் சத்தம் உயிரிற்குத்தரவாதம்.
கைதட்டற் சத்தம் பிரசங்கியின் ஊக்கம்.
கைவச நித்திரையைக் குறட்டைச் சத்தமழிக்கும்.

கத்தல் சத்தத்தில் இரத்தம் கொதிக்கும்.
பித்தம் கொதிக்கும், மூத்தல் வேகமாகும்.
சத்தங்கள் பலவகை, நவரசங்களாய் இழையும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
7-10-2007.

 

( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In muthukamalam web site :-   http://www.muthukamalam.com/verse/p1069.html 

                                    

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

 1. கோவை கவி
  ஜூலை 04, 2014 @ 21:50:11

  Ratha Mariyaratnam :-
  வேரான அடிப்படைச் சத்தம் ஓங்காரம்.
  பேரான முத்துமொழி, சத்தத்தில் பிரசவம்.
  சீரான மொழி, பிழையுச்சரிப்பில் பாழாகும்……..மிக மிக அழகாகச் சொன்னீர்கள் ….எல்லா வரிகளும் மிக அற்புதம்

  Vetha ELangathilakam:-
  Nanry sis..

  சி வா :-
  அக்கா வேதாம்மா வெலுத்துக் கட்டுவாங்க..

  இவங்களும் ஓர் தமிழ் மூதாட்டியே..

  “”
  சாதுரியம் பேசாதடி..
  என் சலங்கைக்குப் பதில் சொல்லடி..

  முன்னிலே வந்து
  நில்லடி..
  நடையிலே சொல்லடி..
  “”
  பழைய பாடலை நினைவுபடுத்துகிறது உங்களிருவரின் உரையாடல்…

  ஹா ஹா ஹா
  சபாஷ் சரியான போட்டி..

  Ratha Mariyaratnam:-
  போட்டி என்றும் இல்லை ….

  சி வா :-
  போட்டி இருக்கலாம் ..
  பொறாமை தான் கூடாது..

  அது நிச்சயம் இருவருக்கும் இருக்காது..
  நானறிவேன் அக்கா…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: