8. தஞ்சைப் பெரிய கோயில்…..

 

தஞ்சைப் பெரிய கோயில்…..

 

நெஞ்சை உயர்த்தி நிற்கும்
விஞ்சும் இந்தியப் பெருமை
தஞ்சைப் பெரிய கோவில்.
இராஐராஐனின் உருவாக்கம்.
கட்டிடக் கலையின், தொழில்
நுட்ப அறிவின் வியப்பு!…..
அடுக்கடுக்காகப் பாறைகள் சேர்த்து
அடுக்கிய உருவகம் கோயிலாம்.

ஆயிரத்து நான்கில் ஆரம்பம்.
ஆயிரத்துப்பத்து வரை கட்டிய
ஆறுவருட அளப்பரிய சாதனை.
கட்டுமானத் தலைமைப் பொறியியலாளராய்
கட்டியவர் குஞ்சரமல்லராம்.
தெய்வபக்தியுடை மனிதசக்திகளால்
செய்திட்ட தமிழின் உன்னதம்.
சோழப் பேரரசின் முத்திரை.

மூன்றடி உயர லிங்கபீடம்
ஐம்பத்தைந்து அடி சுற்றளவாம்.
ஆறு அடி கோமுகத்துடன்
ஒரே கல்லில் உருவாக்கியதாம்!!!…
இருநூற்றிப்பதினாறடி உயர
கோயில் விமானமாம். ஆயிரம்
வருட இந்திய ஓவியங்களின்
சேகரிப்புக் குவியல்கள் உள்ளேயாம்.

இந்தியாவின் நெற்றிப்பட்டமாக 
குந்தியிருப்பதிது தஞ்சாவூரில்.
இரண்டாயிரத்துப் பத்தாம் வருடம்
ஆயிரமாம் பிறந்தநாள் நிறைவு.
பிரகதீஸ்வலர் ஆலயம் என்பர்.
உலக மரபுச் சின்னமென்பது
யுனெஸ்கோவின் அங்கீகாரமாம்.
தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
24-9-2010.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2012/03/8.html 

 

In Muthukamalam web site:_    http://www.muthukamalam.com/verse/p1070.html

 

        

                                           
 

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  செப் 26, 2010 @ 20:31:15

  இந்த அற்புதமான கோயிலுக்கு எத்தனை அடிமைகள் உழைப்புக்கள் உள்ளடங்கியிருக்கின்றது. என்று நினைக்கும் போது வருத்தமும் மிஞ்சுகின்றது. மனிதவலுக்கள் மறைக்கப்படுகின்றன. மன்னன் பெருமை மேலோங்கியிருக்கின்றது.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 16, 2016 @ 07:53:39

  Mathavan Venukopal :- தங்களின் உணர்வுபூர்வமாக கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட,வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடியதாக உங்கள் எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.இதை படிக்கும் ஒவ்வொருவரும் இக் கோயிலின் வரலாற்றை உங்கள் எழுத்தக்கள் மூலம தெரிந்து கொள்வார்கள் அம்மா.உங்களுக்கு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி
  Unlike · Reply · 1 · 9 hrs 16-6-2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: