1. பெற்றோர் மாட்சி.

 

*

அப்பா அன்பு அப்பா.

*

வெற்றிக்கு அடிப்படை தந்த
சற்குணவாளன் என் அப்பா.
நற்தமிழ் காட்டி என்னை
பற்றுடன் அணைத்த அப்பா.
பாப்பாவாய் பருவப் பெண்ணாய்
கோப்பாக அறிவுட்டிய அப்பா.
தப்பில்லா நேர் வழியை
செப்பமாய்க் காட்டிய அப்பா.

துயரைத் துரும்பாக எடுத்து,
   அயர்வின்றி நாளும் எமக்காய்,
உயர்வுக்கு உழைத்து, அன்புப்
   பயிர் வளர்த்த அப்பா.
முதுமைப்படி உங்களை அழுத்தும்
   துன்பப்படி போதும் அப்பா.
அம்மாவடி சேர உங்களுக்கு
   அருள் தரவேண்டும் இறைவன்.
      

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2006.

 (இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலையில் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.)

*

கம்பன் கவிக் கூடம். கவிதை.

தந்தை போலாகுமா!

*

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-11-2016

*

                  

                           

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: