79. நீதிதேவதை + துலாபாரம்.

*

நீதிதேவதை.

*

ஊதி எரியும் இனபேதம்
தீயாய் எமைச் சுடும் போது,
பீதியின்றி நாம் உலாவ
சோதி தருவாயெனும் நம்பிக்கையில்
வாதிட்டாலும் அநீதியே வெல்கிறது.
நீதியின் ஆதிதேவதை தான் நீ.
நாதியில்லா நீதிக்கொரு
நீதி வழங்கும் தேவதையானாலும்
சேதியின் உண்மை இது தான்.
நீதி பாதியிடங்களில் வீதீயில்,
கைதியாயன்றோ நீ.!

*

26-06-2008.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=23

*

தமிழ் கவிதைப் பூங்கா 14-6-2016

நீதி தேவதை

நீதி தேவதைக்குக் கண்ணைக் கட்டி
நீ பார்க்காதே நாம் பண்ணும்
அநீதிகள் என்று பலர் செல்லும்
அநியாயப் பாதை நீயறிய மாட்டாயோ

*

எல்லாம் பணம் பாரபட்சம் என்று
பொல்லாமை அதிகரித்துத் தராசெனும் சமநிலை
இல்லாத நீதியே உலகின் இயக்கம்.
கல்லாக உன்னை பெயருக்கு நிறுத்தினார்.

*

என்று மாறும் இந்த நிலை.
நன்று உலகு தலைகீழாகும் கலை.
வென்று நீதி நிலை நிறுத்த
அன்று கொல்லும் ஒருவர் வரட்டும்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-6-2016.

*

No automatic alt text available.

                 

(கம்பன் கவிக்கூடம் )

துலாபாரம்.

*

நேர்மை நீதிச் செயல்கள் மனிதர்
பார்வைத் துலாபரத்தில் இல்லை, தூய
கூர்மை மன துலாபாரத்தில் கணிக்கிறோம்.
போர்வையற்றது, கோணாதது என்ற நம்பிக்கை.
யார் உண்மையாய் நடப்பாரென்பது கேள்வி
சார்கிறதே மனதும் கோணும் துலாபரமாய்.

*

கள்ளமற்று ஆதியில் மனித மனம்
கமலமென மழலையாக. சூதும் வாதும்
கற்றான். தேவையானது சடத் துலாபாரமும்.
பெற்றொரைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள்.
பெறுமதித் தமிழ் வரிகளிற்கும் துலாபாரம்.
பெருமதிப்பாளர் பக்கம் சாய்கிறதோ துலாபாரம்.!

*

நிலவிலும் களங்கமாம் எடை போடுகிறார்.
கலக்கமின்றி எண்ணங்கள் வடித்தாலும் கோல்
கவனமாய் பரிச்சயமானோர் பக்கம் தாழ்கிறது.
கனமில்லையாம் துலாபாரம் கரைக்குத் தள்ளுகிறது.
வரையற்ற பாதகக் கணக்கெடுப்பில் எடை
வஞ்சனையே செய்கிறது, மாற்றம் மீட்சியற்று.

*

எலுமிச்சம் பழத்தோலில் துலாபாரம் செய்து
அலுக்காமல் ஆடிய பால வயது.
இலுப்பைப் பூவை எடையிட்டது பசுமை.
கொலுவிருக்கும் கோமள நினைவில் மனசில்
கலாபமாய் ஆடி உலாவுது துலாபாரம்.
அளவிட முடியா ஆற்றலுடை நினைவுகளவை.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
24.10.2016

*

                  

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 07, 2015 @ 10:48:14

  You, Maraiyoor Maniyin Paakkal, சிவரமணி கவி கவிச்சுடர் and Speed Kumar like this.
  Comments
  Maraiyoor Maniyin Paakkal :- உண்மை ஒருபோதும் தோற்பதில்லை. ஒரு நாள் வெல்லும்
  17-10-2015

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :.- நல்ல வரிகளில் வேதனை Vetha Langathilakam
  சகோதரி அவர்களே. இப்பொழுது வேண்டுதல் நம்மில்
  ஒருங்கிணைந்த ஒற்றுமை தேவை என்பது
  அடியேன் பார்வையில் பட்ட எண்ணம்

  நீதியாயினும் கொள்ளும் நேர்மை யாயினும்
  வாதியாயினும் விரோதி யாயினும் நெஞ்சில்
  பாசமில்லையேல் பற்று மில்லையேல் என்றும்
  வாசம் நேசமில்லையேல் நல்லவாழ் வில்லையே
  சாதிசொல்லியே கண்ணீர் நித்தம்விடும் நாளிலே
  சாதிக்குள்ளேயே எத்தனை பிரிவு காண்கிறேன்
  · 7-10-2015

  Vetha Langathilakam :- மிக்க நன்றி அருமைக் கருத்துகளிற்கு மணி – இராஜேந்திரம் ஐயா.
  அன்று 2008ல் எழுதியது இன்றும் பொருந்துகிறது.
  17-10-15

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 07, 2015 @ 16:21:27

  Subajini Sriranjan :- தோற்பது போல் தெரியும் ஆனால் உண்மை மெதுவாக வெல்லும் .
  7-10-2015

  Sankar Neethimanickam:- கவிதை வரிகள் அருமை அம்மா.. உண்மை பூமிக்குள் உறங்கும் எரிமலை.. வெடிக்கவும் செய்யலாம்.. சிலசமயங்களில் அப்படியே உறங்கியும் போகலாம்.. ஆனால் விலைபோவது தான் சகிக்கமுடியாதது.. உலகின் பல தேசங்களில் உண்மைகள் பிணங்களின் கீழ்புதைக்கப்பட்டுள்ளது..
  7-10-2015

  Vetha Langathilakam :- மிக்க நன்றி அருமைக் கருத்துகளிற்கு Sankear. . N – Suba.

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 08, 2015 @ 04:46:38

  ஜீவா குமரன் :- சிறப்பு
  8-10-2015

  Vetha Langathilakam :- Thanks.
  6-10-15

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 30, 2017 @ 09:05:30

  துலாபாரம். comments:-

  Jeyam Thangarajah :- எடை அதிகம் தான்
  · 31 October 2016 at 06:36

  Vetha Langathilakam:- mmm….ஆமாம் மிக்க நன்றி ஜெயம்.தங்கராஜா.
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  31 October 2016 at 09:43

  Sharatha Rasiaya:— arumaiyana varikal
  31 October 2016 at 10:58

  Vetha Langathilakam:- மிக்க நன்றி sis Rasiah Sharatha
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  31 October 2016 at 12:27
  Geetharani Paramanathan :- துலாபாரத்தை நினவூட்டிய கவிக்கு நன்றிஅதுவும் இப்போ டியிட்டல்தானே
  · 31 October 2016 at 16:21

  Vetha Langathilakam :- mmmm…..மிக்க நன்றி sis Geetharani Paramanathan
  கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  · 31 October 2016 at 19:37

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 04, 2019 @ 19:33:14

  D Mohan Raj ;. வாழ்த்துக்கள்
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: