2. நந்தவன இனிமை…..

அன்னைக்கு…..

ந்த உறவிலும் இல்லை இணை
இந்த உலகிலொரு தனிப்பெருமை
நந்தவன இனிமை நல் தாய்மை.
வந்தித்துப் போற்றல் நம் உரிமை.

ந்தமில்லா அரிய முதல் நேசம்.
நந்தாவிளக்கு நல் தாய்பாசம்.
சந்தத்தோடு பாடுவோம் தாயின் பாசம்.
சிந்தச் சிறக்கும் எம் சுவாசம்.

வஸ்தைகளை மட்டும் தனக்குள்
ஆதரவுகளை எமக்காய் தந்தவள்.
சத்துக்களை மட்டும் எமக்குள்
சருகுகளைத் தானும் ஏந்துபவள்.

ன் சிறகின் கூடாரத்துள்
என் உயர்வை எண்ணியவள்.
என் சிறகின் கூடாரத்துள் – நானென்
கண்மணிகள் உயர்வை எண்ணுகிறேன்.

வாழையடி வாழையான உறவு.
தாய்மையடித் தாய்மையான தொடர்வு.
சுழலும் சக்கரமான வாழ்வு.
சுழன்று உய்த்திடுவோம் உயர்வு.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ்,  டென்மார்க்.
17-05-2008.

(இலண்டன் தமிழ் வானொலியில், ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In allaikal. com  8-5-2011    –      http://www.alaikal.com/news/?p=68828

T  –    8-1-2013.

 

                  

 

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 09, 2011 @ 06:53:12

  Yogeswaran Thiyagarajah wrote in fb -aanndavan thaayai padaththu arul aadchi purikintraan

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 12, 2011 @ 06:54:38

  Karthiya Karthikesan wrote to me:-

  vanakkam nadpe,
  unkal “amma” kavithai kanden ella ammamarin iyartkaiyaana iyalpukalai alakaaka adikki videerkal. nanru.
  enathu kananiyil etho idaiyidaiye pirachanaiyaakividukirathu. eluthuvathai alikkuthu…silavelai elutha mudivathillai. athuthaan ithai eluthinen. nanri.vaalthukkal.

  மறுமொழி

 3. kowsy
  மே 12, 2013 @ 20:16:13

  உங்கள் அன்னை நினைவில் தவழும் கவிதை . அனைத்து அன்னையரையும் நினைக்கும் கவிதை . அன்னையர் தின வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 02, 2013 @ 07:06:29

  மிக மிக நன்றி Kowsy கருத்திடலிற்கு.
  ஆண்டவனாசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: